நெய்மாரின் அசத்தல் கோலால் கடைசி பயிற்சிப் போட்டியிலும் பிரேசில் வெற்றி

340
Image Courtesy - AFP

நெய்மாரின் அசத்தல் கோல் உட்பட மூன்று அபார கோல்களுடன் ஆஸ்திரியாவுடனான பிஃபா உலகக் கிண்ணத்திற்கான கடைசி பயிற்சிப் போட்டியில் பிரேசில் அணி 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் உறுதியான வெற்றியை பதிவு செய்தது.

நெய்மாரின் அபார கோலுடன் பிரேசில் அணிக்கு இலகு வெற்றி

காயத்தில் இருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய…

இதன்போது பிரேசில் அணிக்காக காப்ரியல் ஜேசுஸ் மற்றும் பிலிப்பே கொடின்ஹோ மற்றைய கோல்களை பெற்றதோடு, போட்டியின் முதல் பாதியில் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி இரண்டாவது பாதியில் ஆஸ்திரியாவின் பாதுகாப்பு அரணை முறியடித்தது.

கடந்த பெப்ரவரியில் காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு உலகக் கிண்ண பிரேசில் அணிக்கு திரும்பி இருக்கும் நெய்மார் கடந்த வாரம் குரோசியாவுக்கு எதிரான போட்டியின் இரண்டாவது பாதியில் கோல் புகுத்தி பிரேசில் அணி 2-0 என வெற்றி பெற உதவினார்.  

இந்நிலையில் ஆஸ்திரியாவுக்கு எதிராக நெய்மார் பெற்ற கோல் சிறப்பாக இருந்தது. எதிரணி கோல் எல்லையில் வைத்து ஒரு பின்கள வீரரை முறியடித்து கோல்காப்பாளர் ஹெய்ன்ஸ் லின்ட்னரின் இரண்டு கால்களுக்கு இடையால் வலைக்குள் பந்தை செலுத்தினார்.

இந்த கோல் மூலம் பிரேசில் அணிக்காக அதிக கோல் பெற்ற வீரர்கள் வரிசையில் 55 கோல்களை பெற்ற நெய்மார் ரொமாரியோவுடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டார். இந்த வரிசையில் பீலே (77) முதலிடத்தில் இருப்பதோடு ரொனால்டோ (62) இரண்டாது இடத்தில் காணப்படுகிறார்.

2018 உலகக் கிண்ணம்: போர்த்துக்கல் அணியின் முன்னோட்டம்

போர்த்துக்கல் அணி 2016இல் ஐரோப்பிய கிண்ணத்தை…

இதில் நெய்மார், ஜேசுஸ், கோடின்ஹோ மற்றும் வில்லியன் ஆகியோர் பிரேசில் அணியின் ஆரம்ப வரிசையில் களமிறங்கிய முதல் போட்டியாகவும் இது இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வியன்னா ஏர்ன்ஸ் ஹப்பெல் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற இந்தப் போட்டியில் கடந்த எட்டு ஆட்டங்களில் தோல்வியுறாத அணியாகவே ஆஸ்திரியா களமிறங்கியது. குறிப்பாக, ஒரு வாரத்திற்கு முன் அந்த அணி நடப்பு உலக சம்பியன் ஜெர்மனியையும் வீழ்த்தி இருந்தது. எனினும் அந்த அணி பிரேசிலுக்கு சவால் கொடுக்கத் தவறியது.

இம்முறை உலகக் கிண்ணத்திற்கு ஆஸ்திரிய அணி தகுதி பெறவில்லை என்பதோடு, 1998 க்கு பின்னர் அந்த அணி உலகக் கிண்ணத்தில் ஆடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டி ஆரம்பித்து 36 ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் சிட்டியின் முன்கள வீரர் ஜேசுஸ் மிக நிதானமாக பந்தை கோலுக்குள் புகுத்தி பிரேசில் அணியை முன்னிலை பெறச் செய்தார்.

2018 உலகக் கிண்ணம்: போர்த்துக்கல் அணியின் முன்னோட்டம்

போர்த்துக்கல் அணி 2016இல் ஐரோப்பிய கிண்ணத்தை..

தொடர்ந்து 63 ஆவது நிமிடத்தில் பிரேசில் கோல் எண்ணிக்கையை நெய்மார் இரண்டாக உயர்த்தினார். அதனைத் தொடர்ந்து விரைவாக 69 ஆவது நிமிடத்தில் பார்சிலோனா மத்தியகள வீரர் கோடின்ஹோ பிரேசில் அணிக்கு மூன்றாவது கோலையும் புகுத்தினார்.  

பிரேசில் அணி 2017 ஜூன் தொடக்கம் ஆடிய 10 போட்டிகளில் எந்த ஆட்டத்திலும் தோல்வியுறாத நிலையில் உற்சாகத்துடனேயே உலகக் கிண்ணத்தில் பங்கேற்க ரஷ்யாவை நோக்கி பயணிக்கவுள்ளது. 2016 ஜூனில் டிடே பயிற்சியாளர் பெறுப்பை ஏற்ற பின் பிரேசில் அணி ஆடிய 21 போட்டிகளில் 16இல் வெற்றி பெற்றிருப்பதோடு ஆர்ஜன்டீன அணியுடனான ஒரே ஒரு நட்புறவு போட்டியிலேயே தோல்வி அடைந்துள்ளது.   

அதிகபட்சம் ஐந்து முறை உலக சம்பியனான பிரேசில் இம்முறை உலகக் கிண்ணத்தில் E குழுவில் ஆடுவதோடு வரும் ஜுன் 17 ஆம் திகதி சுவிட்சர்லாந்துடனான போட்டியுடன் உலகக் கிண்ணத்தை ஆரம்பிக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த அணி கொஸ்டாரிக்கா மற்றும் செர்பிய அணிகளுடன் ஆடவுள்ளது.   

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<