கோபா அமெரிக்காக் கிண்ண கால்பந்து தொடரில் பேரு அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து பிரேசில் அணி நொக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது.
ஐந்தாவது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி முதல்முறையாக அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் “பி” பிரிவில் இடம் பெற்றுள்ள பிரேசில் அணி பேரு அணியிடம் 1-0 என்ற கோல்கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.
ஜெர்மனி 2-0 என்ற அடிப்படையில் வெற்றி
1987ஆம் ஆண்டுக்குப் பிறகு கோபா கால்பந்து போட்டியில் பிரேசில் அணியின் மிக மோசமான செயல்பாடு இதுதான் ஆகும். 1987 ஆம் ஆண்டு குரூப் ஸ்டேஜை கூட பிரேசில் தாண்டாமல் வெளியேறியிருந்தது.
குழு பி-யில் பேரு அணி 7 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க, ஈக்வடார் அணி 5 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தது. எனவே இந்த இரண்டு அணிகளும் காலிறுதிக்கு முன்னேறின. பிரேசில் 4 புள்ளிகளுடன் 3ஆம் இடம் பிடித்து வெளியேறியது. இது பிரேசில் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக பிரேசில் அணியில் இடம்பிடிக்காத நட்சத்திர வீரர் நெய்மார் தோல்வி அடைந்த தனது அணி வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரேசில் அணி வீரர்களுக்கு அவர் அனுப்பியுள்ள நெகிழ்ச்சியான செய்தியில் “நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக எவ்வளவு சிரமப்பட்டோம் என்று யாருக்கும் தெரியாது. தேசிய அணியின் ஜெர்சியை அணிவது கௌரவம். நீங்கள் அதை மிகவும் விரும்பி செய்தீர்கள். தற்போது (தோல்விக்குப் பிறகு) பலர் மோசமாகப் பேசத் தொடங்குவார்கள். அவர்கள் நரகத்திற்கு செல்லட்டும். நான் ஒரு பிரேசில்காரன், இறுதி வரை உங்களோடு வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்