நியுசிலாந்து கிரிக்கட் அணி விரைவில் சிம்பாப்வே மற்றும் தென் ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு அணிகளுக்கு எதிராக தலா இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இத்தொடரில் விளையாடும் நியுசிலாந்து அணி விபரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஓரேயொரு புதுமுக வீரர் இடம் பிடித்துள்ளார். அவர், 27 வயது நிரம்பிய இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜீட் ராவல் ஆவார்.
நியுசிலாந்தில்முதல்தரப் போட்டியில் ஆக்லாந்து ஏசஸ் அணிக்காக விளையாடிய இவர், இந்த வருடத்தில் அவரது துடுப்பாட்ட சராசரி 43.85 ஆகக் காணப்படுகிறது. ஒட்டாகோ அணிக்கெதிரான போட்டியில் ஆட்டம் இழக்காமல் 202 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் நியுசிலாந்தில் அணியில் இடம்பிடித்துள்ளார்.
ராவல் அணியில் இடம்பெற்றுள்ளமை குறித்து மைக் ஹெசன் கூறுகையில் ‘‘கடந்த 12 மாதங்களாக அவரது விளையாட்டை கவனித்து வருகிறோம். அவர் சிறப்பாக செயற்பட்டதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நியுசிலாந்து ‘ஏ’ அணியில் விளையாடும்போது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு சிறப்பாக ஆடினார். சர்வதேசப் போட்டிகளில் விளையாட ராவல் தகுதியானவர் என்று முடிவு செய்தோம்” என்றார்.
நியுசிலாந்து அணி சிம்பாப்வேவிற்கு எதிராக ஜூலை 29ஆம் திகதி முதல் டெஸ்டிலும், ஆகஸ்ட் 6ஆம் திகதி 2ஆவது டெஸ்டிலும் மோதுகிறது. தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஆகஸ்ட் 19 மற்றும் 27 ஆகிய திகதிகளில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
சிம்பாப்வே, தென் ஆபிரிக்கா தொடருக்கான நியுசிலாந்து டெஸ்ட் குழாம் :
1. கேன் வில்லியம்சன் (தலைவர்)
2. ட்ரென்ட் போல்ட்
3. டக் பிரேஸ்வெல்
4. மார்க் கிரேக்
5. மார்டின் கப்டில்
6. மெட் ஹென்றி
7. டொம் லாதம்,
8. ஹென்றி நிக்கோலஸ்,
9. லூக் ரொஞ்சி
10. ஜீத் ராவல்,
11. மிட்செல் செண்ட்னர்
12. இஸ் சோதி
13. டிம் சவுத்தி
14. ரொஸ் டெய்லர்,
15. நீல் வாக்னர்,
16. வாட்லிங் .
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்