நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான ஹென்ரி நிக்கோல்ஸ், 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தான் அணிந்த ஜேர்சியை (மேற்சட்டையை) கொரோனா வைரஸிற்கு எதிராக உதவும் எண்ணத்தோடு யுனிசேப் (UNICEF) தொண்டு நிறுவனத்திற்கு வழங்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.
டெஸ்ட் தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளுக்காக வெளியிட்டிருக்கும் புதிய….
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களின் கையொப்பங்கள் காணப்படும் நிக்கோல்ஸின் ஜேர்சி, குலுக்கல் முறை ஒன்றின் மூலம் விற்கப்பட்டு அதில் கிடைக்கின்ற பணம் யுனிசேப் நிறுவனத்தின் சிறுவர் பிரிவுக்காகப் பயன்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஹென்ரி நிக்கோல்ஸ் தான் யுனிசேப் நிறுவனத்திற்கு வழங்கவுள்ள ஜேர்சி பற்றியும், ஜேர்சியினை விற்பனை செய்வது தொடர்பான குலுக்கல் முறை பற்றியும் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
”கடந்த ஆண்டு, உலகக் கிண்ணத்தில் நடந்த அனைத்தும் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கியிருக்கின்றது.”
”நான் இந்த ஜேர்சியினை வழங்குவது மக்கள் அனைவருக்கும் ஒரு சிறிய முன்னுதாரணத்தை காட்டுவதற்காகவேயாகும்.”
”அதிக பணம் வைத்திருப்பவர் வெற்றி பெறும் ஏலமொன்றில் நான் நம்பிக்கை கொள்ளவில்லை.”
”இந்த ஜேர்சியை பெற நினைக்கும் ஒருவர் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தாம் விரும்பிய அளவு பணத்தினை நன்கொடையாக வழங்கலாம். இவ்வாறு நன்கொடை வழங்குபவர் குலுக்கல் ஒன்றுக்கு தெரிவு செய்யப்பட்டு அதில் வெற்றி பெறுபவருக்கு ஜேர்சியினை பெற்றுக் கொள்ள முடியும்.”
”இந்த குலுக்கலில் ஐந்து அல்லது 10 டொலர்களை நன்கொடை செய்யும் ஒருவரும் பங்கெடுத்து, ஜேர்சியை வெல்லும் வாய்ப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்.”
இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதிய 2019ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டி மற்றும் சுப்பர் ஓவர் என்பன சமநிலை அடைந்ததை அடுத்து இங்கிலாந்து பௌண்டரி எண்ணிக்கை அடிப்படையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் ஹென்ரி நிக்கோல்ஸ் நியூசிலாந்து சார்பாக அதிக ஓட்டங்களை எடுத்த வீரராக மாறியிருந்தார்.
இதேநேரம் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ஜோஸ் பட்லரும், குறித்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தான் அணிந்த ஜேர்சியினை ஏலம் மூலம் விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த 65,100 ஸ்ரேலிங் பவுண்டுகளை கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்திற்கு முன்னர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<