யூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் இன்று வியாழக்கிழமை (29) ரத்கம தேவபதிராஜ கல்லூரியின் கிரிக்கெட் விளையாடும் வீராங்கனைகளை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சந்தித்துள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணி ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்புக்கான ஒருநாள் தொடர் மற்றும் T20I தொடரில் விளையாடி வருகின்றது.
>> நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை வரலாற்று வெற்றி
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி முதன்முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாறு படைத்திருந்தது.
இவ்வாறான நிலையில் ரத்கம தேவபதிராஜ கல்லூரியின் கிரிக்கெட் விளையாடும் மாணவிகளை சந்தித்த நியூசிலாந்து மகளிர் அணியின் வீராங்கனைகள், அவர்களுக்கு பயிற்சி வழங்கியதுடன், கையெழுத்திட்டு கொடுத்ததுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர்.
இதேவேளை இலங்கை – நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை வெள்ளிக்கிழமை (30) நடைபெறவுள்ளதுடன், இந்த போட்டியை ரசிகர்கள் மைதானத்துக்கு இலவசமாக சென்று பார்வையிட முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<