சுற்றுலா நியூசிலாந்து மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20i கிரிக்கெட் தொடர்களுக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து மகளிர் அணி அடுத்த மாதம் 23ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதுடன், ஐசிசி மகளிர் சம்பின்ஷிப்புக்கான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20i போட்டிகளில் விளையாடவுள்ளது.
பஞ்சாப் அணியின் பிளே-ஓஃப் வாய்ப்பை கேள்விக்குறியாக்கிய டெல்லி
இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் ஜூன் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூன் 30ஆம் திகதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூலை 3ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்தும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்
அதனைத்தொடர்ந்து ஜூலை 6ஆம் திகதி நியூசிலாந்து மகளிர் மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் சபை பதினொருவர் அணிகளுக்கு இடையிலான T20 பயிற்சிப்போட்டி ஒன்று கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இறுதியாக T20i தொடரானது ஜூலை 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், அடுத்த இரண்டு போட்டிகளும் ஜூலை 10ஆம் மற்றும் ஜூலை 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்தும் கொழும்பு பி.சரா. ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
போட்டி அட்டவணை
- ஜூன் 27 – முதல் ஒருநாள் (காலி)
- ஜூன் 30 – 2வது ஒருநாள் (காலி)
- ஜூலை 03 – 3வது ஒருநாள் (காலி)
- ஜூலை 06 – T20 பயிற்சிப்போட்டி (CCC)
- ஜூலை 08 – முதல் T20i (பி.சரா ஓவல்)
- ஜூலை 10 – 2வது T20i (பி.சரா ஓவல்)
- ஜூலை 12 – 3வது T20i (பி.சரா ஓவல்)
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<