Home Tamil பல சாதனைகளுடன் நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி

பல சாதனைகளுடன் நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி

New Zealand Women tour of Sri Lanka 2023

517
New Zealand Women tour of Sri Lanka 2023

சமரி அத்தபத்து, ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த சாதனைமிகு 143 ஓட்ட இணைப்பாட்ட உதவியுடன் நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவதும் கடைசியுமான T20i போட்டியில் இலங்கை மகளிர் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியது.

இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணியை சர்வதேச T20i போட்டியொன்றில் முதல் தடவையாக வீழ்த்தி இலங்கை அணி சாதனை படைத்தது.

அத்துடன் T20i கிரிக்கெட் வரலாற்றில் சமரி அத்தபத்துவும் ஹர்ஷிதா சமரவிக்ரமவும் ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 143 ஓட்டங்கள் அனைத்து விக்கெட்டுகளுக்குமான இலங்கை சாதனையாகவும் பதிவானது.

முன்னதாக கடந்த பெப்ரவரி மாதம் பங்களாதேஷ் அணிக்கெதிராக கேப்டவுனில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டியில் ஹர்ஷிதா சமரவிக்ரம, நிலக்ஷி டி சில்வா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 104 ஓட்டங்களே இதற்கு முன்னர் இலங்கை மகளிர் அணியின் சகல விக்கெட்டுகளுக்குமான இணைப்பாட்ட சாதனையாக இருந்தது.

அத்துடன், இந்தப் போட்டியில் 25 பந்துகளில் அரைச் சதமடித்து தனது 7ஆவது T20i அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த சமரி அத்தபத்து, மகளிர் T20i கிரிக்கெட்டில் அதிவேக அரைச் சதமடித்த இலங்கையராக இடம்பிடித்தார்.

இன்று (12) காலை கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது.

சோபி டிவைன் 25 பந்துகளில் 46 ஓட்டங்களையும், சுசி பேட்ஸ் 38 பந்துகளில் 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் இனோக்கா ரணவீர 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சுகன்திகா குமாரி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

நியுசிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 141 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 14.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 143 ஓட்டங்களை எடுத்து ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சமரி அத்தபத்து 47 பந்துகளை எதிர்கொண்டு 13 பௌண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 80 ஓட்டங்களைக் குவித்தார்.

அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய ஹர்ஷிதா சமரவிக்ரம 40 பந்துகளில் 7 பௌண்டரிகளுடன் ஆட்டம் இழக்காமல் 49 ஓட்டங்களை எடுத்தார்.

எவ்வாறாயினும், முன்னதாக நடைபெற்ற 2 போட்டிகளிலும் வெற்றியீட்டி தொடரில் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட T20i தொடரை 21 என கைப்பற்றியது.

3ஆவது போட்டியின் ஆட்டநாயகி விருதை இலங்கை அணித்தலைவி சமரி அத்தபத்து பெற்றுக்கொள்ள, தொடர் நாயகி விருதை நியூசிலாந்து அணியின் சுசி பேட்ஸ் தட்டிச் சென்றார்.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka Women
143/0 (14.3)

New Zealand Women
140/9 (20)

Batsmen R B 4s 6s SR
Suzie Bates b Kavisha Dilhari 37 38 6 0 97.37
Isabella Gaze b Inoka Ranaweera 13 14 2 0 92.86
Amelia Kerr c Kavisha Dilhari b Sugandika Kumari 14 14 1 0 100.00
Sophie Devine c Nilakshi de Silva b Inoka Ranaweera 46 25 2 3 184.00
Maddy Green c Kavisha Dilhari b Kawya Kavindi 10 12 0 0 83.33
Georgia Plimmer st Anushka Sanjeewani b Inoka Ranaweera 3 6 0 0 50.00
Brooke Halliday c Chamari Athapaththu b Sugandika Kumari 2 4 0 0 50.00
Hannah Rowe c & b Inoka Ranaweera 0 1 0 0 0.00
Molly Penfold run out (Anushka Sanjeewani) 2 6 0 0 33.33
Eden Carson not out 0 0 0 0 0.00
Fran Jonas not out 2 2 0 0 100.00


Extras 11 (b 0 , lb 3 , nb 2, w 6, pen 0)
Total 140/9 (20 Overs, RR: 7)
Fall of Wickets 1-43 (5.1) Isabella Gaze, 2-65 (10.1) Amelia Kerr, 3-73 (11.1) Suzie Bates, 4-104 (14.6) Maddy Green, 5-127 (17.2) Georgia Plimmer, 6-135 (18.1) Sophie Devine, 7-135 (18.2) Hannah Rowe, 8-138 (19.3) Molly Penfold, 9-138 (19.4) Brooke Halliday,

Bowling O M R W Econ
Kawya Kavindi 4 0 27 1 6.75
Inoshi Priyadarshani 3 0 25 1 8.33
Sugandika Kumari 4 0 23 2 5.75
Inoka Ranaweera 4 0 15 3 3.75
Chamari Athapaththu 2 0 15 0 7.50
Kavisha Dilhari 3 0 32 1 10.67


Batsmen R B 4s 6s SR
Harshitha Samarawickrama not out 49 40 7 0 122.50
Chamari Athapaththu not out 80 47 13 2 170.21


Extras 14 (b 0 , lb 0 , nb 0, w 14, pen 0)
Total 143/0 (14.3 Overs, RR: 9.86)
Bowling O M R W Econ
Eden Carson 3 0 31 0 10.33
Hannah Rowe 2 0 24 0 12.00
Molly Penfold 1.3 0 28 0 21.54
Sophie Devine 2 0 13 0 6.50
Amelia Kerr 3 0 24 0 8.00
Fran Jonas 2 0 17 0 8.50
Brooke Halliday 1 0 6 0 6.00



  >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<