நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (03) நடைபெற்ற 3ஆவதும், கடைசியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவி சமரி அத்தபத்து குவித்த சதத்தின் உதவியுடன் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 2க்கு 1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.
இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிராக அனைத்து வகையான மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை ஈட்டிய முதலாவது தொடர் வெற்றி இதுவாகும்.
அத்துடன் இந்தப் போட்டியில் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சமரி அத்தபத்துவும் நிலக்ஷி டி சில்வாவும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 190 ஓட்டங்கள் அனைத்து விக்கெட்களுக்குமான இலங்கை சாதனையாகவும் பதிவானது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சொபி டிவைன் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான பேர்னடின் பெஸாடன்ஹோரட், சுசீ பேட்ஸ் ஜோடி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர். பேர்னடின் 4 ஓட்டங்களுடனும், 2ஆவது போட்டியில் சதமடித்த அமிலியா கேர் 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
எனினும், அந்த அணியின் அனுபவ வீராங்கனையான சுசீ பேட்ஸ் அரைச் சதம் கடந்து ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களையும், அணித் தலைவி சொபி டிவைன் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள நண்பகல் 12.00 மணியளவில் போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. இதன்போது நியூசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை 31 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 127 ஆக காணப்பட்டது.
எவ்வாறாயினும், தொடர்ந்து 3 மணித்தியாலங்கள் போட்டி மழை தடைப்பட்டதால் இலங்கை அணிக்கு 29 ஓவர்களில் 196 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
- நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை வரலாற்று வெற்றி
- டிவைன், அமிலியா அதிரடியில் நியூசி. மகளிருக்கு முதல் வெற்றி
- பாடசாலை மாணவிகளுக்கு பயிற்றுவித்த நியூசிலாந்து வீராங்கனைகள்
நியூசிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 196 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 26.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சமரி அத்தபத்து 80 பந்துகளை எதிர்கொண்டு 13 பௌண்டரிகள், 9 சிக்ஸர்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 140 ஓட்டங்களைக் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் சமரி அத்தபத்துவின் 8ஆவது சதம் இதுவாகும். முன்னதாக நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியிலும் அவர் சதமடித்து இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய நிலக்ஷி டி சில்வா 68 பந்துகளில் 5 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன்படி, மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 5ஆம் இடத்திலுள்ள நியூசிலாந்தை வெற்றிகொண்டதன் மூலம் 10ஆம் இடத்திலுள்ள இலங்கை அணி, ICC மகளிர் சம்பியன்ஷிப்பில் 2ஆம் இடத்திற்கு அசுர முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதுவரை 12 போட்டிகளில் ஆடியுள்ள இலங்கை மகளிர் அணி 4இல் வெற்றியும், 6இல் தோல்வியையும் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்டநாயகி விருது மற்றும் தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து பெற்றுக்கொண்டார்.
இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20I தொடரின் முதலாவது T20I போட்டி எதிர்வரும் ஜுலை 8ஆம் திகதி கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Bernadine Bezuidenhout | run out (Kavisha Dilhari) | 4 | 15 | 0 | 0 | 26.67 |
Suzie Bates | not out | 63 | 87 | 3 | 0 | 72.41 |
Amelia Kerr | b Oshadi Ranasinghe | 19 | 36 | 2 | 0 | 52.78 |
Sophie Devine | not out | 38 | 48 | 2 | 0 | 79.17 |
Extras | 3 (b 0 , lb 0 , nb 0, w 3, pen 0) |
Total | 127/2 (31 Overs, RR: 4.1) |
Fall of Wickets | 1-7 (4.1) Bernadine Bezuidenhout, 2-53 (16.2) Amelia Kerr, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Inoshi Priyadarshani | 7 | 0 | 28 | 0 | 4.00 | |
Udeshika Prabodhani | 7 | 2 | 18 | 0 | 2.57 | |
Oshadi Ranasinghe | 5 | 0 | 22 | 1 | 4.40 | |
Inoka Ranaweera | 7 | 0 | 34 | 0 | 4.86 | |
Kavisha Dilhari | 5 | 0 | 25 | 0 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Chamari Athapaththu | not out | 140 | 80 | 13 | 9 | 175.00 |
Vishmi Gunaratne | c Maddy Green b Lea Tahuhu | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Harshitha Samarawickrama | c Georgia Plimmer b Sophie Devine | 3 | 10 | 0 | 0 | 30.00 |
Nilakshi de Silva | not out | 48 | 68 | 5 | 0 | 70.59 |
Extras | 5 (b 0 , lb 0 , nb 0, w 5, pen 0) |
Total | 196/2 (26.5 Overs, RR: 7.3) |
Fall of Wickets | 1-1 (0.4) Vishmi Gunaratne, 2-6 (3.3) Harshitha Samarawickrama, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lea Tahuhu | 6 | 1 | 29 | 1 | 4.83 | |
Sophie Devine | 5 | 0 | 32 | 1 | 6.40 | |
Eden Carson | 5 | 0 | 46 | 0 | 9.20 | |
Molly Penfold | 3 | 0 | 29 | 0 | 9.67 | |
Amelia Kerr | 4.5 | 0 | 34 | 0 | 7.56 | |
Fran Jonas | 3 | 0 | 26 | 0 | 8.67 |