Home Tamil லீ தஹுஹு, பேட்ஸ் அதிரடியில் நியூசி. மகளிருக்கு T20I தொடர் வெற்றி

லீ தஹுஹு, பேட்ஸ் அதிரடியில் நியூசி. மகளிருக்கு T20I தொடர் வெற்றி

New Zealand Women tour of Sri Lanka 2023

287

இலங்கை மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது T20i போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட T20i தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் (08) நடைபெற்ற முதலாவது T20i போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட T20i தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது T20i போட்டி கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் இன்று (10) காலை நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஹசினி பெரேரா 36 பந்துகளில் 33 ஓட்டங்களையும், ஹர்ஷிதா சமரவிக்ரமவும் 28 பந்துகளில் 23 ஓட்டங்களையும், நிலக்ஷி டி சில்வா 23 பந்துகளில் 22 ஓட்டங்களையும் குவித்தனர்.

பந்துவீச்சில் லீ தஹுஹு 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ஈடன் கார்ஸன் 15 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 119 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சுசி பேட்ஸ் 53 பந்துகளை எதிர்கொண்டு 6 பெளண்டறிகளுடன் 52 ஓட்டங்களைக் குவிக்க, அமிலியா கேர் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும், பெர்னடின் பெஸாடன்ஹொவுட் 24 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

பந்துவீச்சில் கவிஷா தில்ஹாரி மற்றும் இனோக்கா ரணவீர ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

இந்த வெற்றியுடன் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட T20i தொடரில் ஒரு போட்டி எஞ்சியிருக்க, நியூசிலாந்து மகளிர் அணி 2–0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றது.

போட்டியின் ஆட்டநாயகி விருது நியூசிலாந்து மகளிர் அணிக்காக பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு 4 விக்கெட்டுகளை லீ தஹுஹுவுக்கு வழங்கப்பட்டது.

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான 3ஆவதும் மற்றும் கடைசியுமான T20i போட்டி நாளை மறுதினம் (12) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Result


Sri Lanka Women
118/6 (20)

New Zealand Women
119/2 (18.4)

Batsmen R B 4s 6s SR
Vishmi Gunaratne b Lea Tahuhu 7 10 1 0 70.00
Chamari Athapaththu run out (Bernadine Bezuidenhout) 2 8 0 0 25.00
Harshitha Samarawickrama lbw b Eden Carson 23 28 2 0 82.14
Kavisha Dilhari lbw b Lea Tahuhu 0 2 0 0 0.00
Hasini Perera c Georgia Plimmer b Lea Tahuhu 33 36 3 0 91.67
Nilakshi de Silva c Amelia Kerr b Lea Tahuhu 22 23 2 0 95.65
Anushka Sanjeevani not out 18 13 1 1 138.46
Sugandika Kumari not out 0 1 0 0 0.00


Extras 13 (b 5 , lb 2 , nb 1, w 5, pen 0)
Total 118/6 (20 Overs, RR: 5.9)
Fall of Wickets 1-10 (2.5) Chamari Athapaththu, 2-14 (3.1) Vishmi Gunaratne, 3-14 (3.3) Kavisha Dilhari, 4-71 (13.3) Hasini Perera, 5-81 (15.2) Harshitha Samarawickrama, 6-117 (19.5) Nilakshi de Silva,

Bowling O M R W Econ
Fran Jonas 4 0 19 0 4.75
Sophie Devine 1 0 4 0 4.00
Eden Carson 4 0 15 1 3.75
Lea Tahuhu 4 0 21 4 5.25
Amelia Kerr 4 0 24 0 6.00
Leigh Kasperek 3 0 28 0 9.33


Batsmen R B 4s 6s SR
Bernadine Bezuidenhout st Anushka Sanjeewani b Kavisha Dilhari 24 21 4 0 114.29
Suzie Bates c Hasini Perera b Inoka Ranaweera 52 53 6 0 98.11
Amelia Kerr not out 33 33 2 0 100.00
Sophie Devine not out 5 5 0 0 100.00


Extras 5 (b 1 , lb 1 , nb 0, w 3, pen 0)
Total 119/2 (18.4 Overs, RR: 6.38)
Fall of Wickets 1-48 (8.1) Bernadine Bezuidenhout, 2-107 (16.2) Suzie Bates,

Bowling O M R W Econ
Udeshika Prabodhani 4 0 12 0 3.00
Sugandika Kumari 3.4 0 22 0 6.47
Inoshi Priyadarshani 3 0 27 0 9.00
Kavisha Dilhari 3 0 22 1 7.33
Inoka Ranaweera 4 0 28 1 7.00
Chamari Athapaththu 1 0 6 0 6.00



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<