இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் 111 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டிய நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியது.
குறிப்பாக, அணித்தலைவி சொபி டிவைன், அமிலியா கேர் ஆகியோர் குவித்த சதங்கள், லீ தஹுஹு உள்ளிட்ட சகல பந்துவீச்சாளர்களினதும் துல்லியமான பந்துவீச்சு என்பன நியூசிலாந்து அணியை வெற்றிபெறச் செய்தன.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (30) காலை ஆரம்பமான இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி அதன் தலைவி சொபி டிவைன் மற்றும் அமிலியா கேர் ஆகியோரின் சதங்களோடு 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 329 ஓட்டங்களை எடுத்தது.
நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சொபி டிவைன் 121 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 17 பௌண்டரிகள் அடங்கலாக 137 ஓட்டங்களையும், அமிலியா கேர் 106 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 108 ஓட்டங்களையும் அதிகபட்சமாக குவித்தனர்.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் ஓஷதி ரணசிங்க 68 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், உதேஷிகா பிரபோதனி 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திருந்தனர்.
- நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை வரலாற்று வெற்றி
- பாடசாலை மாணவிகளுக்கு பயிற்றுவித்த நியூசிலாந்து வீராங்கனைகள்
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 330 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 218 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கவிஷா தில்ஹாரி 9 பௌண்டரிகளுடன் 84 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார்.
நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் லீ தஹுஹு 4 விக்கெட்டுகளையும், ஈடென் கார்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.
போட்டியின் ஆட்டநாயகியாக சொபி டிவைன் தெரிவு செய்யப்பட்டார்.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Suzie Bates | c Harshitha Madavi b Udeshika Prabodhani | 1 | 10 | 0 | 0 | 10.00 |
Bernadine Bezuidenhout | c Nilakshi de Silva b Oshadi Ranasinghe | 25 | 27 | 3 | 0 | 92.59 |
Amelia Kerr | c Kavisha Dilhari b Oshadi Ranasinghe | 108 | 106 | 7 | 1 | 101.89 |
Sophie Devine | c Nilakshi de Silva b Udeshika Prabodhani | 137 | 121 | 17 | 2 | 113.22 |
Maddy Green | c Kavisha Dilhari b Oshadi Ranasinghe | 5 | 10 | 0 | 0 | 50.00 |
Georgia Plimmer | not out | 10 | 11 | 0 | 0 | 90.91 |
Brooke Halliday | b Sugandika Kumari | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Hannah Rowe | c Anushka Sanjeewani b Inoka Ranaweera | 12 | 8 | 2 | 0 | 150.00 |
Lea Tahuhu | not out | 6 | 2 | 1 | 0 | 300.00 |
Extras | 23 (b 4 , lb 0 , nb 1, w 18, pen 0) |
Total | 329/7 (50 Overs, RR: 6.58) |
Fall of Wickets | 1-7 (2.6) Suzie Bates, 2-57 (9.6) Bernadine Bezuidenhout, 3-286 (43.1) Amelia Kerr, 4-294 (44.2) Sophie Devine, 5-300 (45.6) Maddy Green, 6-304 (47.2) Brooke Halliday, 7-323 (49.4) Hannah Rowe, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Udeshika Prabodhani | 9 | 0 | 38 | 2 | 4.22 | |
Kawya Kavindi | 2 | 0 | 17 | 0 | 8.50 | |
Oshadi Ranasinghe | 10 | 0 | 68 | 3 | 6.80 | |
Sugandika Kumari | 10 | 0 | 79 | 1 | 7.90 | |
Inoka Ranaweera | 8 | 0 | 56 | 1 | 7.00 | |
Kavisha Dilhari | 7 | 0 | 44 | 0 | 6.29 | |
Chamari Athapaththu | 4 | 0 | 23 | 0 | 5.75 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Vishmi Gunaratne | c Maddy Green b Lea Tahuhu | 12 | 16 | 2 | 0 | 75.00 |
Harshitha Samarawickrama | c Maddy Green b Eden Carson | 9 | 21 | 1 | 0 | 42.86 |
Chamari Athapaththu | c Hannah Rowe b Lea Tahuhu | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Nilakshi de Silva | c Amelia Kerr b Lea Tahuhu | 6 | 6 | 1 | 0 | 100.00 |
Anushka Sanjeewani | c Bernadine Bezuidenhout b Hannah Rowe | 17 | 14 | 2 | 0 | 121.43 |
Kavisha Dilhari | c Bernadine Bezuidenhout b Eden Carson | 84 | 98 | 9 | 0 | 85.71 |
Oshadi Ranasinghe | c & b Amelia Kerr | 8 | 14 | 0 | 0 | 57.14 |
Kawya Kavindi | b Lea Tahuhu | 15 | 31 | 1 | 0 | 48.39 |
Sugandika Kumari | c Bernadine Bezuidenhout b Sophie Devine | 10 | 25 | 0 | 0 | 40.00 |
Udeshika Prabodhani | not out | 9 | 43 | 1 | 0 | 20.93 |
Inoka Ranaweera | c Eden Carson b Fran Jonas | 5 | 24 | 0 | 0 | 20.83 |
Extras | 43 (b 1 , lb 5 , nb 1, w 26, pen 10) |
Total | 218/10 (48.4 Overs, RR: 4.48) |
Fall of Wickets | 1-26 (5.1) Vishmi Gunaratne, 2-26 (5.2) Chamari Athapaththu, 3-34 (6.6) Harshitha Samarawickrama, 4-35 (7.2) Nilakshi de Silva, 5-76 (12.5) Anushka Sanjeewani, 6-108 (19.2) Oshadi Ranasinghe, 7-144 (27.2) Kawya Kavindi, 8-178 (34.2) Sugandika Kumari, 9-3 (42.1) Kavisha Dilhari, 10-218 (48.4) Inoka Ranaweera, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Hannah Rowe | 7 | 0 | 32 | 1 | 4.57 | |
Sophie Devine | 4 | 0 | 15 | 1 | 3.75 | |
Lea Tahuhu | 8 | 0 | 31 | 4 | 3.88 | |
Eden Carson | 11 | 1 | 41 | 2 | 3.73 | |
Amelia Kerr | 10 | 1 | 34 | 1 | 3.40 | |
Fran Jonas | 5.4 | 0 | 29 | 1 | 5.37 | |
Brooke Halliday | 3 | 0 | 20 | 0 | 6.67 |
இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான 3ஆவதும், கடைசியுமான ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் ஜுலை 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<