நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (27) நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் சமரி அத்தபத்துவின் அபார சதம் மற்றும் விஷ்மி குணரத்னவின் அரைச் சதத்தின் உதவியுடன் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி டக்வர்த் லூயிஸ் முறைப்படி 9 விக்கெட்டுகளால் சாதனை வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் மகளிருக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது.
அதுமாத்திரமின்றி, நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக இதுவரை நடைபெற்ற 10 ஒருநாள் போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, முதல் தடவையாக அந்த அணியை வீழ்த்தி சாதனை படைத்தது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி காலியில் இன்று (27) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது. எனினும், சீரற்ற காலநிலை காரணமாக போட்டியை உரிய நேரத்தில் ஆரம்பிக்க முடியவில்லை.
எவ்வாறாயினும், அணிக்கு 28 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 28 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.
அமிலியா கேர் 51 பந்துகளில் 3 பௌண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்களையும், மெட்டி கிரீன் 30 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
பந்துவீச்சில் சுகந்திகா குமாரி, கவீஷா தில்ஹாரி மற்றும் இனோகா ரணவீர ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
- நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு
- இலங்கை மகளிர் அணிக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர்!
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 27 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
முதல் விக்கெட்டுக்காக அணித் தலைவி சமரி அத்தபத்து மற்றும் விஷ்மி குணரத்ன இடையே 159 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது. மகளிருக்கான ஒருநாள் போட்டிகளில் எந்தவொரு விக்கெட்டுக்காகவும் பகிரப்பட்ட அதிபட்ச இணைப்பாட்டமாகவும் இது இடம்பிடித்தது.
ஒருநாள் போட்டிகளில் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடிய விஷ்மி குணரத்ன, 74 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சமரி அத்தபத்து, தனது 7ஆவது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்து 83 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களைக் குவித்து இலங்கைக்கு அபார வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அவரது இன்னிங்ஸில் 5 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கும்.
சர்வதேச கிரிக்கெட் பொருத்தவரை (ஒருநாள் மற்றும் T20I) நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பெற்ற முதல் வெற்றியாகவும் இந்த வெற்றி பதிவாகியுள்ளது.
இப்போட்டியில் அபார சதமடித்த இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து சிறப்பாட்டக்காரர் விருதை வென்றார்.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 1 – 0 என்ற ஆட்டக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி 30ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Suzie Bates | b Kavisha Dilhari | 28 | 35 | 2 | 0 | 80.00 |
Bernadine Bezuidenhout | c & b Sugandika Kumari | 13 | 13 | 2 | 0 | 100.00 |
Amelia Kerr | c Udeshika Prabodhani b Inoka Ranaweera | 40 | 51 | 3 | 0 | 78.43 |
Sophie Devine | run out (Inoka Ranaweera) | 19 | 14 | 1 | 1 | 135.71 |
Maddy Green | run out (Inoshi Priyadarshani) | 38 | 30 | 3 | 1 | 126.67 |
Georgia Plimmer | not out | 23 | 25 | 2 | 0 | 92.00 |
Brooke Halliday | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 8 (b 4 , lb 1 , nb 1, w 2, pen 0) |
Total | 170/5 (28 Overs, RR: 6.07) |
Fall of Wickets | 1-17 (4.2) Bernadine Bezuidenhout, 2-77 (14.6) Suzie Bates, 3-89 (17.4) Amelia Kerr, 4-105 (19.4) Sophie Devine, 5-168 (27.3) Maddy Green, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Udeshika Prabodhani | 6 | 0 | 38 | 0 | 6.33 | |
Oshadi Ranasinghe | 5 | 0 | 32 | 0 | 6.40 | |
Sugandika Kumari | 6 | 0 | 28 | 1 | 4.67 | |
Kavisha Dilhari | 5 | 0 | 26 | 1 | 5.20 | |
Inoka Ranaweera | 6 | 0 | 41 | 1 | 6.83 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Chamari Athapaththu | not out | 108 | 83 | 10 | 5 | 130.12 |
Vishmi Gunaratne | c Brooke Halliday b Sophie Devine | 50 | 74 | 3 | 0 | 67.57 |
Harshitha Samarawickrama | not out | 4 | 5 | 0 | 0 | 80.00 |
Extras | 10 (b 2 , lb 0 , nb 0, w 8, pen 0) |
Total | 172/1 (27 Overs, RR: 6.37) |
Fall of Wickets | 1-159 (25.1) Vishmi Gunaratne, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lea Tahuhu | 4 | 0 | 26 | 0 | 6.50 | |
Sophie Devine | 4 | 0 | 20 | 1 | 5.00 | |
Fran Jonas | 5 | 0 | 31 | 0 | 6.20 | |
Eden Carson | 6 | 1 | 27 | 0 | 4.50 | |
Amelia Kerr | 6 | 0 | 46 | 0 | 7.67 | |
Hannah Rowe | 1 | 0 | 9 | 0 | 9.00 | |
Suzie Bates | 1 | 0 | 11 | 0 | 11.00 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<