Home Tamil ப்ராத்வைட் சதமடித்தும் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட மே.தீவுகள்

ப்ராத்வைட் சதமடித்தும் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட மே.தீவுகள்

382
AFP

நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் மென்செஸ்டர் – ஓல்ட் ட்ரெபோர்ட் மைதானத்தில் இன்று (22) நடைபெற்ற விறுவிறுப்பான உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி மயரிழையில் வெற்றியை தவறவிட்டது.

நியூசிலாந்து அணி நிர்ணயித்திருந்த 292 என்ற வெற்றியிலக்கினை நோக்கியிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி, கார்லோஸ் ப்ராத்வைட்டின் அபார சதத்தின்  மூலம் வெற்றியை நெருங்கியிருந்த போதும், வெறும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

உலகக் கிண்ணத் தொடரில் தோல்வியடையாத அணியாக முன்னேறும் இந்தியா

This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of…

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வு செய்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சனின் அபாரமான சதம் மற்றும் ரொஸ் டெய்லரின் நிதான அரைச்சதம் என்பவற்றின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 291/8 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

போட்டியின் ஆரம்பத்தை பொருத்தவரை நியூசிலாந்து அணியின் இரண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களையும், செல்டொன் கொட்ரெல் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழக்கச் செய்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் மற்றும் ரொஸ் டெய்லர் ஆகியோர் மேற்கிந்திய தீவுகளுக்கு நெருக்கடி கொடுத்து 160 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

இதில், ரொஸ் டெய்லர்  69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்த போதும், கேன் வில்லியம்சன் சதம் கடந்து அடுத்து வருகைத்தந்த வீரர்களுடன் சிறிய இணைப்பாட்டங்களை பகிர்ந்தார். இறுதியில் வில்லியம்சன் 148 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன், மறுமுனையில் தங்கள் பங்கிற்கு ஜேம்ஸ் நீஷம் 28 ஓட்டங்களையும், கொலின் டி கிரெண்டோம் 16 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

நியூசிலாந்து அணி இவ்வாறான ஓட்டக்குவிப்புகளின் ஊடாக 292 ஓட்டங்களை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்தது. மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை பொருத்தவரை, செல்டொன் கொட்ரெல் 4 விக்கெட்டுகளையும், கார்லோஸ் ப்ராத்வைட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் சவாலான வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பத்தில் வேகமாக ஓட்டங்களை குவித்த போதிலும், மத்திய ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆனாலும், பின்னர் களமிறங்கிய கார்லோஸ் பிராத்வைட் அதிரடி சதம் பெற்ற போதும்  மேற்கிந்திய தீவுகள் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவ நேரிட்டது.

ஆரம்பத்தில் ஷேய் ஹோப் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரது விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட போதும், கிரிஸ் கெயில் மற்றும் சிம்ரொன் ஹெட்மையர் ஆகியோரின் இணைப்பாட்டம் நியூசிலாந்து அணிக்கு நெருக்கடியை கொடுத்திருந்தது. குறிப்பாக இவர்கள் இருவரும் 3வது விக்கெட்டுக்காக 122 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

இங்கிலாந்தை சோதித்து பல சாதனைகள் படைத்த இலங்கை

சர்வதேச கிரிக்கட்டில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய அணி…

ஒரு கட்டத்தில் கிரிஸ் கெயில் மற்றும் ஹெட்மையர் தங்களுடைய அரைச்சதங்களை கடந்திருக்க, மேற்கிந்திய தீவுகள் அணி 22 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 142 ஓட்டங்களை பெற்றிருந்தது. எனினும், லொக்கி பேர்கஸன் தனது ஒரே ஓவரில் ஹெட்மையரின் விக்கெட்டினை வீழ்த்தி இணைப்பாட்டத்தை தகர்த்ததுடன், அடுத்துவந்த அணித் தலைவர் ஜேசன் ஹோல்டரின் விக்கெட்டினையும் வீழ்த்தி அணிக்கு நம்பிக்கையை கொடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கிரிஸ் கெயில், அஷ்லி நேரஷ் மற்றும் எவின் லிவிஸ் என மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்துவர, கார்லோஸ் ப்ராத்வைட் மற்றும் கெமார் ரோச் ஆகியோர் மீண்டும் அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் துடுப்பெடுத்தாடினர். ஆனால், துரதிஷ்டவசமாக கெமார் ரோச் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இவ்வாறு மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், ப்ராத்வைட் இறுதிவரை போராடி நியூசிலாந்து அணிக்கு நெருக்கடியை கொடுத்திருந்தார். தனது கன்னி ஒருநாள் சதத்தை கடந்திருந்த இவர், அதிரடியான சிக்ஸர்களை விளாசி 2016ம் ஆண்டு T20I உலகக் கிண்ண  இறுதிப் போட்டியை ஞாபகப்படுத்தினார். எனினும், 7 பந்துகளுக்கு 6 ஓட்டங்கள் என்ற நிலையில் ஒரு விக்கெட் மாத்திரம் கைவசம் இருக்க, ப்ராத்வைட் எல்லைக்கோட்டுக்கு அருகில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கார்லோஸ் பிராத்வைட் 5 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், லொக்கி பேர்கஸன் 3 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இதேவேளை இந்தப் போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் நியூசிலாந்து அணி 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், தங்களுடைய அடுத்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்வரும் 26ம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணி எதிர்வரும் 27ம் திகதி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

Result


West Indies
286/10 (49)

New Zealand
291/8 (50)

Batsmen R B 4s 6s SR
Martin Guptill lbw b Sheldon Cottrell, 0 1 0 0 0.00
Colin Munro b Sheldon Cottrell, 0 1 0 0 0.00
Kane Williamson c Shai Hope b Sheldon Cottrell, 148 154 14 1 96.10
Ross Taylor c Jason Holder b Chris Gayle 69 95 7 0 72.63
Tom Latham c & b Sheldon Cottrell, 12 16 0 0 75.00
Jimmy Neesham c Sheldon Cottrell, b Carlos Brathwaite 28 23 1 1 121.74
Colin de Grandhomme run out (Sheldon Cottrell,) 16 6 1 1 266.67
Mitchell Santner c Sheldon Cottrell, b Carlos Brathwaite 10 5 0 1 200.00
Matt Henry not out 0 0 0 0 0.00


Extras 8 (b 0 , lb 4 , nb 1, w 3, pen 0)
Total 291/8 (50 Overs, RR: 5.82)
Fall of Wickets 1-0 (0.1) Martin Guptill, 2-7 (0.5) Colin Munro, 3-167 (34.3) Ross Taylor, 4-210 (41.5) Tom Latham, 5-251 (46.3) Kane Williamson, 6-270 (48.1) Colin de Grandhomme, 7-291 (49.5) Mitchell Santner, 8-291 (49.6) Jimmy Neesham,

Bowling O M R W Econ
Sheldon Cottrell, 10 1 56 4 5.60
Kemar Roach 10 2 38 0 3.80
Jason Holder 7 0 42 0 6.00
Oshane Thomas 6 0 30 0 5.00
Carlos Brathwaite 6 0 58 2 9.67
Ashley Nurse 9 0 55 0 6.11
Chris Gayle 2 0 8 1 4.00


Batsmen R B 4s 6s SR
Chris Gayle c Trent Boult b Colin de Grandhomme 87 84 8 6 103.57
Shai Hope b Trent Boult 1 3 0 0 33.33
Nicholas Pooran c Tom Latham b Trent Boult 1 7 0 0 14.29
Shimron Hetmyer b Lockie Ferguson 54 45 8 1 120.00
Jason Holder c Tom Latham b Lockie Ferguson 0 1 0 0 0.00
Carlos Brathwaite c Trent Boult b Jimmy Neesham 101 82 9 5 123.17
Ashley Nurse c Tom Latham b Trent Boult 1 8 0 0 12.50
Evin Lewis c Jimmy Neesham b Trent Boult 0 3 0 0 0.00
Kemar Roach c Tom Latham b Matt Henry 14 31 0 1 45.16
Sheldon Cottrell, b Lockie Ferguson 15 26 2 0 57.69
Oshane Thomas not out 0 4 0 0 0.00


Extras 12 (b 0 , lb 3 , nb 0, w 9, pen 0)
Total 286/10 (49 Overs, RR: 5.84)
Fall of Wickets 1-3 (2.4) Shai Hope, 2-20 (6.2) Nicholas Pooran, 3-142 (22.1) Shimron Hetmyer, 4-142 (22.2) Jason Holder, 5-152 (23.6) Chris Gayle, 6-163 (26.2) Ashley Nurse, 7-164 (26.5) Evin Lewis, 8-211 (38.1) Kemar Roach, 9-245 (44.6) Sheldon Cottrell,, 10-286 (48.6) Carlos Brathwaite,

Bowling O M R W Econ
Trent Boult 10 1 30 4 3.00
Matt Henry 9 0 76 1 8.44
Lockie Ferguson 10 0 59 3 5.90
Jimmy Neesham 6 0 35 1 5.83
Mitchell Santner 10 1 61 0 6.10
Colin de Grandhomme 4 0 22 1 5.50