இலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து

427
Image courtesy - ICC Twitter

நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 585 ஓட்டங்களை குவித்து, இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக  660 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், மிகப்பெரிய இலக்கினை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 24 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணியை வேகத்தால் சுருட்டிய ட்ரென்ட் போல்ட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ….

கிரைஸ்ட்ச்சேர்ச்சில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின், மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நிறைவுக்கு வந்தது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 178 ஓட்டங்களை பெற, இலங்கை அணி 104 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின்னர், துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, டொம் லேத்தம் மற்றும் ஹென்ரி நிக்கோலஸ் ஆகியோரின் அபார சதங்களின் உதவியுடன் 4 விக்கெட்டுகளை இழந்து 585 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியதுடன், இலங்கை அணிக்கு 660 என்ற மிகப்பெரிய வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

நேற்றைய ஆட்ட நேர நிறைவில் 231 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், துடுப்பாட்டத்தை ஆரம்பித்த நியூசிலாந்து அணி சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.  25 ஓட்டங்களுடன் ஆட்டத்தை ஆரம்பித்த ரோஸ் டெய்லர் 40 ஓட்டங்களுடன் வெளியேற, டொம் லேத்தமுடன் ஜோடி சேர்ந்த ஹென்ரி நிக்கோலஸ் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினார். இதில், லேத்தம் தனது சதத்தை கடந்து துடுப்பெடுத்தாட, நியூசிலாந்து அணி, மதிய போசன இடைவேளையில் 3 விக்கெட்டுகளை இழந்து, 327 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து, மதிய போசன இடைவேளைக்கு பின்னர் நிக்கோலஸ்  மற்றும் லேத்தம் ஆகியோர் விக்கெட்டினை விட்டுக்கொடுக்காமல், இலங்கை அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக 214 ஓட்டங்களை குவிக்க, டொம் லேத்தம் 176 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவரின் ஆட்டமிழப்புடன் போட்டி, தேநீர் இடைவேளைக்காக நிறுத்தப்பட்ட போது, நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 461 ஓட்டங்களை பெற்றிருந்தது.

ஆட்டநேரத்தின் இறுதிப் பகுதியில், ஹென்ரி நிக்கோலஸுடன் இணைந்து கொலின் டி கிரெண்டோம் வேகமாக ஓட்டங்களை குவித்தார். இருவரும் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி, 124 ஓட்டங்கள் இணைப்பாட்டத்துடன் ஆட்டத்தை நிறைவு செய்ய, நியூசிலாந்து அணி 585 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நிக்கோலஸ் ஆட்டமிழக்காமல் 162 ஓட்டங்களையும், கொலின் டி கிரெண்டோம் ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மெதிவ்ஸ் மற்றும் மெண்டிஸின் அனுபவ ஆட்டமும், மாலிங்கவின் தலைவர் பதவியும் – Cricket Kalam 04

நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணியின் நம்பிக்கை மிக்க ….

இவ்வாறு, நியூசிலாந்து அணி நிர்ணயித்த 660 என்ற மிக சவாலான வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி, இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 24 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளதுடன், பந்து வீச்சில் டீம் சௌதி மற்றும் ட்ரென்ட் போல்ட் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமாயின் இரண்டு நாட்களும், 8 விக்கெட்டுகளும் கைவசமிருக்க, 636 ஓட்டங்களை பெற வேண்டும்.

போட்டி சுருக்கம்









Title





Full Scorecard

New Zealand

178/10 & 585/4

(153 overs)

Result

Sri Lanka

104/10 & 236/10

(106.2 overs)

NZ won by 423 runs

New Zealand ‘s 1st Innings

Batting R B
Jeet Raval c D Chandimal b S Lakmal 6 24
Tom Latham c K Mendis b S Lakmal 10 30
Kane Williamson c N Dickwella b S Lakmal 2 18
Ross Taylor (runout) L Kumara 27 46
Henry Nicholls b S Lakmal 1 10
BJ Watling c D Perera b L Kumara 46 90
C de Grandhomme c D Chameera b L Kumara 1 5
Tim Southee c D Gunathilaka b D Perera 68 65
Neil Wagner c K Mendis b S Lakmal 0 7
Ajaz Patel c S Lakmal b L Kumara 2 5
Trent Boult not out 1 1
Extras
14 (b 6, lb 7, nb 1)
Total
178/10 (50 overs)
Fall of Wickets:
1-16 (J Raval, 8.3 ov), 2-17 (T Latham, 10.1 ov), 3-22 (K Williamson, 14.2 ov), 4-36 (H Nicholls, 18.5 ov), 5-57 (R Taylor, 25.3 ov), 6-64 (de Grandhomme, 27.1 ov), 7-172 (T Southee, 47.2 ov), 8-175 (N Wagner, 48.4 ov), 9-177 (BJ Watling, 49.2 ov), 10-178 (A Patel, 49.6 ov)
Bowling O M R W E
Suranga Lakmal 19 5 54 5 2.84
Lahiru Kumara 14 4 49 3 3.50
Angelo Mathews 4 1 6 0 1.50
Dushmantha Chameera 8 1 43 0 5.38
Dilruwan Perera 5 1 13 1 2.60

Sri Lanka’s 1st Innings

Batting R B
Danushka Gunathilaka c J Raval b T Southee 8 31
Dimuth Karunarathne c K Williamson b T Southee 7 9
Dinesh Chandimal c BJ Watling b T Southee 6 9
Kusal Mendis c BJ Watling b de Grandhomme 15 32
Angelo Mathews not out 33 88
Roshen Silva c T Southee b T Boult 21 63
Niroshan Dickwella c T Southee b T Boult 4 3
Dilruwan Perera lbw by T Boult 0 4
Suranga Lakmal lbw by T Boult 0 1
Dushmantha Chameera lbw by T Boult 0 2
Lahiru Kumara lbw by T Boult 0 4
Extras
10 (b 5, lb 5)
Total
104/10 (41 overs)
Fall of Wickets:
1-10 (D Karunarathne, 5.2 ov), 2-20 (D Chandimal, 7.2 ov), 3-21 (D Gunathilaka, 9.4 ov), 4-51 (K Mendis, 17.1 ov), 5-94 (R Silva, 36.4 ov), 6-100 (N Dickwella, 38.1 ov), 7-100 (D Perera, 38.5 ov), 8-100 (S Lakmal, 38.6 ov), 9-104 (D Chameera, 40.2 ov), 10-104 (L Kumara, 40.6 ov)
Bowling O M R W E
Trent Boult 15 8 30 6 2.00
Tim Southee 15 5 35 3 2.33
Colin de Grandhomme 6 0 19 1 3.17
Neil Wagner 5 0 10 0 2.00

New Zealand ‘s 2nd Innings

Batting R B
Jeet Raval c K Mendis b D Perera 74 162
Tom Latham c N Dickwella b D Chameera 176 370
Kane Williamson c K Mendis b L Kumara 48 75
Ross Taylor lbw by L Kumara 40 44
Henry Nicholls not out 162 225
de Grandhomme not out 71 45
Extras
14 (b 5, lb 3, w 3, nb 3)
Total
585/4 (153 overs)
Fall of Wickets:
1-121 (J Raval, 47.6 ov), 2-189 (K Williamson, 70.1 ov), 3-247 (R Taylor, 83.1 ov), 4-461 (T Latham, 138.3 ov)
Bowling O M R W E
Suranga Lakmal 30 6 96 0 3.20
Lahiru Kumara 32 6 134 2 4.19
Dushmantha Chameera 30 5 147 1 4.90
Dilruwan Perera 41 3 149 1 3.63
Danushka Gunathilaka 16 2 45 0 2.81
Dimuth Karunarathne 4 2 6 0 1.50

Sri Lanka’s 2nd Innings

Batting R B
Danushka Gunathilaka c BJ Watling b T Southee 4 7
Dimuth Karunarathne c BJ Watling b T Boult 0 2
Dinesh Chandimal c H Nicholls b N Wagner 56 228
Kusal Mendis c M Henry b N Wagner 67 147
Angelo Mathews not out 22 54
Roshen Silva c BJ Watling b N Wagner 18 73
Niroshan Dickwella b T Southee 19 31
Dilruwan Perera c K Williamson b N Wagner 22 62
Suranga Lakmal b T Boult 18 25
Dushmantha Chameera lbw by T Boult 3 8
Lahiru Kumara not out 0 1
Extras
7 (b 4, lb 2, w 1)
Total
236/10 (106.2 overs)
Fall of Wickets:
1-1 (D Karunarathne, 0.6 ov), 2-9 (D Gunathilaka, 1.5 ov), 3-126 (K Mendis, 54.5 ov), 4-158 (D Chandimal, 76.2 ov), 5-181 (N Dickwella, 85.1 ov), 6-208 (R Silva, 95.4 ov), 7-233 (S Lakmal, 104.3 ov), 8-233 (D Perera, 105.2 ov). 9-236 (D Chameera, 106.2 ov)
Bowling O M R W E
Trent Boult 28.2 11 77 3 2.73
Tim Southee 27 13 61 2 2.26
Colin de Grandhomme 10 1 23 0 2.30
Neil Wagner 29 10 48 4 1.66
Ajaz Patel 12 9 21 0 1.75







>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<