சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியானது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
>>பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரிலிருந்து ஹெட், மார்ஷ் நீக்கம்
T20I போட்டிகளுடன் தொடர் ஆரம்பமாகவுள்ளதுடன், குறித்த இரண்டு போட்டிகளும் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 9 மற்றும் நவம்பர் 10ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
அதனை தொடர்ந்து இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 13ம் திகதி ஆரம்பமாகும்.
முதல் ஒருநாள் போட்டி மாத்திரம் தம்புள்ளயில் நடைபெறவுள்ள நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளும் கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 17 மற்றும் 19ம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
- முதல் T20I – நவம்பர் 09 (தம்புள்ள)
- இரண்டாவது T20I – நவம்பர் 10 (தம்புள்ள)
- முதல் ஒருநாள் போட்டி – நவம்பர் 13 (தம்புள்ள))
- இரண்டாவது ஒருநாள் போட்டி – நவம்பர் 17 (பல்லேகலை)
- மூன்றாவது ஒருநாள் போட்டி – நவம்பர் 19 (பல்லேகலை)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<