இலங்கை – நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு

New Zealand tour of Sri Lanka 2024

127
NZvSL

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இந்த தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 18ம் திகதி முதல் 23ம் திகதிவரை நடைபெறவுள்ளது. 

>> மழைக்கு மத்தியில் இங்கிலாந்து அணி முன்னிலை

இதில் நாட்டில் செப்டம்பர் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தால் குறித்த தினம் ஓய்வு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நான்காம் மற்றும் ஐந்தாம் நாள் போட்டிகள் 22ம் மற்றும் 23ம் திகதிகளில் நடைபெறவுள்ளன. 

அதனை தொடர்ந்து 26ம் திகதி முதல் 30ம் திகதிவரை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. குறித்த இந்த இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

போட்டி அட்டவணை 

  • முதல் டெஸ்ட்செப்டம்பர் 18-23 (காலி) 
  • இரண்டாவது டெஸ்ட்செப்டம்பர் 26-30 (காலி) 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<