சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில், நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கப் போராடி வருகின்றது.
>> அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த பிராவோ!
காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் இலங்கையின் முதல் இன்னிங்ஸ் (602) துடுப்பாட்டத்தை அடுத்து பதிலுக்கு ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டது. களத்தில் ஆட்டமிழக்காது கேன் வில்லியம்சன் 06 ஒட்டங்களை பெற்றிருக்க, அஜாஸ் படேல் ஓட்டங்கள் ஏதுமின்றி நின்றார்.
இன்று (28) போட்டியின் மூன்றாம் நாளில் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணியானது போட்டியின் முதல் இடைவெளியிலேயே இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் தடுமாற்றம் கண்டதோடு தமது அனைத்து விக்கெட்டுக்களையும் 39.5 ஓவர்களில் பறிகொடுத்து 88 ஓட்டங்களை மட்டும் எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில் அதிக ஓட்டங்களை மிச்சல் சான்ட்னர் 29 ஓட்டங்களுடன் பதிவு செய்ய, இலங்கை பந்துவீச்சு சார்பில் பிரபாத் ஜயசூரிய 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும் அறிமுக வீரரான நிஷான் பீரிஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் சாய்த்தார்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் காரணமாக மீண்டும் இலங்கை அணியினால் பலோவ் ஒன் முறையில் மீண்டும் துடுப்பாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி, டெவோன் கொன்வேய் – கேன் வில்லியம்சன் ஆட்டம் காரணமாக இரண்டாம் இன்னிங்ஸில் சிறந்த ஆட்டத்தை காட்ட முயன்ற போதும் அறிமுக சுழல்வீரர் நிஷான் பீரிஸ் அவ்வணிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்படுத்த தொடங்கினார்.
>> இரண்டாம் நாள் ஆதிக்கத்தையும் தமதாக்கிய இலங்கை கிரிக்கெட் அணி
பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்படும் போது 41 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.
நியூசிலாந்து அணிக்கு இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 315 ஓட்டங்கள் தேவையாக காணப்பட, அவ்வணிக்கு களத்தில் நின்று நம்பிக்கை தரும் டொம் பிலன்டல் 47 ஓட்டங்களுடனும், கிளன் பிலிப்ஸ் 32 ஓட்டங்களுடனும் உள்ளனர். அதேநேரம் நியூசிலாந்து அணிக்காக ஆட்டமிழந்த வீரர்களில் டெவோன் கொன்வேய் 61 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 47 ஓட்டங்களையும் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் பந்துவீச்சு சார்பாக நிஷான் பீரிஸ் 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Tom Blundell b Tim Southee | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Dimuth Karunaratne | run out (Tom Latham) | 46 | 109 | 4 | 0 | 42.20 |
Dinesh Chandimal | b Glenn Phillips | 116 | 208 | 15 | 0 | 55.77 |
Angelo Mathews | c William O’Rourke b Glenn Phillips | 88 | 185 | 7 | 0 | 47.57 |
Kamindu Mendis | not out | 182 | 250 | 16 | 4 | 72.80 |
Dhananjaya de Silva | c Tom Blundell b Glenn Phillips | 44 | 80 | 3 | 1 | 55.00 |
Kusal Mendis | not out | 106 | 149 | 6 | 3 | 71.14 |
Extras | 19 (b 6 , lb 8 , nb 2, w 3, pen 0) |
Total | 602/5 (163.4 Overs, RR: 3.68) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tim Southee | 19 | 1 | 70 | 1 | 3.68 | |
William O’Rourke | 17 | 1 | 81 | 0 | 4.76 | |
Ajaz Patel | 41 | 5 | 135 | 0 | 3.29 | |
Mitchell Santner | 33 | 5 | 82 | 0 | 2.48 | |
Glenn Phillips | 38 | 4 | 141 | 3 | 3.71 | |
Rachin Ravindra | 12.4 | 0 | 54 | 0 | 4.35 | |
Daryl Mitchell | 3 | 0 | 25 | 0 | 8.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tom Latham | c Pathum Nissanka b Asitha Fernando | 2 | 5 | 0 | 0 | 40.00 |
Devon Conway | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 9 | 21 | 0 | 0 | 42.86 |
Kane Williamson | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 7 | 53 | 0 | 0 | 13.21 |
Ajaz Patel | lbw b Nishan Peiris | 8 | 41 | 0 | 0 | 19.51 |
Rachin Ravindra | b Nishan Peiris | 10 | 25 | 1 | 0 | 40.00 |
Daryl Mitchell | c Angelo Mathews b Prabath Jayasuriya | 13 | 15 | 1 | 1 | 86.67 |
Tom Blundell | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Glenn Phillips | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Mitchell Santner | b Nishan Peiris | 29 | 51 | 4 | 1 | 56.86 |
Tim Southee | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 2 | 6 | 0 | 0 | 33.33 |
William O’Rourke | not out | 2 | 15 | 0 | 0 | 13.33 |
Extras | 5 (b 5 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 88/10 (39.5 Overs, RR: 2.21) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 4 | 1 | 8 | 1 | 2.00 | |
Nishan Madushka | 17.5 | 3 | 33 | 3 | 1.89 | |
Prabath Jayasuriya | 18 | 6 | 42 | 6 | 2.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tom Latham | c Pathum Nissanka b Nishan Peiris | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Devon Conway | c Dinesh Chandimal b Dhananjaya de Silva | 61 | 62 | 10 | 1 | 98.39 |
Kane Williamson | c Ramesh Mendis b Nishan Peiris | 46 | 58 | 4 | 0 | 79.31 |
Rachin Ravindra | b Nishan Peiris | 12 | 24 | 1 | 0 | 50.00 |
Daryl Mitchell | c Pathum Nissanka b Prabath Jayasuriya | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Tom Blundell | lbw b Nishan Peiris | 60 | 64 | 6 | 2 | 93.75 |
Glenn Phillips | c Dimuth Karunaratne b Nishan Peiris | 78 | 99 | 6 | 3 | 78.79 |
Mitchell Santner | st Kusal Mendis b Nishan Peiris | 67 | 115 | 6 | 3 | 58.26 |
Tim Southee | b Prabath Jayasuriya | 10 | 10 | 1 | 1 | 100.00 |
Ajaz Patel | b Prabath Jayasuriya | 22 | 40 | 3 | 1 | 55.00 |
William O’Rourke | not out | 0 | 7 | 0 | 0 | 0.00 |
Extras | 3 (b 0 , lb 2 , nb 0, w 1, pen 0) |
Total | 360/10 (81.4 Overs, RR: 4.41) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nishan Peiris | 33.4 | 4 | 170 | 6 | 5.09 | |
Prabath Jayasuriya | 34 | 2 | 139 | 3 | 4.09 | |
Asitha Fernando | 5 | 1 | 14 | 0 | 2.80 | |
Milan Rathnayake | 2 | 0 | 7 | 0 | 3.50 | |
Dhananjaya de Silva | 7 | 0 | 28 | 1 | 4.00 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<