Home Tamil சாதனையுடன் நியூசிலாந்து ஒருநாள் தொடரை வென்ற இலங்கை

சாதனையுடன் நியூசிலாந்து ஒருநாள் தொடரை வென்ற இலங்கை

42

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை வீரர்கள் 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 எனக் கைப்பற்றியுள்ளனர். 

நேற்று பல்லேகலயில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீரர்கள் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தனர். இப்போட்டிக்கான இலங்கை ஏற்கனவே ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை அடைந்த காரணத்தினால், இப்போட்டிக்காக ஒரு மாற்றத்தை மேற்கொண்டிருந்தனர். அதன்படி துனித் வெல்லாலகே டில்சான் மதுசங்கவிற்குப் பதிலாக இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டிருந்தார். 

ஐபிஎல் மெகா ஏலத்தில் இடம்பிடித்த வியாஸ்காந்த்

இலங்கை XI  

பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க (தலைவர்), ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், மகீஷ் தீக்ஸன, ஜெப்ரி வன்டர்செய், துனித் வெல்லாலகே, அசித பெர்னாண்டோ  

நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய பின்னர் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து வீரர்கள் ஒரு தடுமாற்றமான ஆரம்பத்தைக் காட்டினர். இந்த சந்தர்ப்பத்தில் மழையின் தாக்கம் போட்டியில் ஏற்பட ஆட்டம் அணிக்கு 47 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. 

தொடர்ந்த ஆட்டத்தில் 98 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நியூசிலாந்து அணிக்கு மார்க் சப்மன் அதிரடி கலந்த நிதானத்துடன் பலம் சேர்த்தார் 

அவரின் ஆட்டத்தோடு நியூசிலாந்து அணி முன்னேறிய நிலையில் அசித பெர்னாண்டோவின் பந்துவீச்சினால் நியூசிலாந்து அணிக்கு ஒரு தடை ஏற்படுத்தப்பட்டது. அசித பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த மார்க் சாப்மன் 81 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்கள் எடுத்தார் 

சாப்மனினை அடுத்து ஓட்டங்கள் குவிப்பதில் தடுமாறிய நியூசிலாந்து அணியானது 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 209 ஓட்டங்கள் எடுத்தது 

பங்களாதேஷ் டெஸ்ட் தொடரினை தவறவிடும் ஜேசன் ஹோல்டர்

நியூசிலாந்து துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக பின்வரிசை வீரராக களம் வந்த மிட்ச் ஹேய் 62 பந்துகளில் 4 பௌண்டரிகள் அடங்கலாக 49 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் மகீஷ் தீக்ஸன மற்றும் ஜெப்ரி வன்டர்செய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர் 

நியூசிலாந்தின் துடுப்பாட்டத்தை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 210 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை வீரர்கள் போட்டியின் வெற்றி இலக்கினை அடைவதற்கான பயணத்தில் தடுமாறிய போதிலும் குசல் மெண்டிஸின் பொறுப்பான ஆட்டத்தினால் போட்டியின் வெற்றி இலக்கினை 46 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களுடன் அடைந்தனர் 

இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் தன்னுடைய 32ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 6 பௌண்டரிகள் அடங்கலாக 72 ஓட்டங்கள் எடுக்க, மகீஷ் தீக்ஸன ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 27 ஓட்டங்கள் பெற்றார். அத்துடன் இரண்டு வீரர்களும் இலங்கை அணியின் எட்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 47 ஓட்டங்களையும் பகிர்ந்தனர் 

நியூசிலாந்துப் பந்துவீச்சில் மைக்கல் பிரஸ்வெல் 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்து சிறப்பாக செயற்பட்ட போதும் அவரது பந்துவீச்சு வீணாகியது. இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை அணி இந்த ஆண்டில் தம்முடைய ஐந்தாவது ஒருநாள் தொடர் வெற்றியினைப் பதிவு செய்ததோடு, 12 வருட இடைவெளியொன்றின் பின்னர் நியூசிலாந்தினையும் ஒருநாள் தொடர் ஒன்றில் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவாகினார். இலங்கைநியூசிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நாளை (19) நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது 

போட்டியின் சுருக்கம் 

Result


Sri Lanka
210/7 (46)

New Zealand
209/10 (45.1)

Batsmen R B 4s 6s SR
Will Young st Kusal Mendis b Jeffery Vandersay 26 40 3 0 65.00
Tim Robinson b Dunith Wellalage 4 4 1 0 100.00
Henry Nicholls b Maheesh Theekshana 8 23 1 0 34.78
Mark Chapman c Avishka Fernando b Asitha Fernando 76 81 7 3 93.83
Glenn Phillips c Avishka Fernando b Charith Asalanka 15 22 1 0 68.18
Mitchell Hay c Kusal Mendis b Maheesh Theekshana 49 62 4 0 79.03
Michael Bracewell c Avishka Fernando b Asitha Fernando 0 4 0 0 0.00
Mitchell Santner c Pathum Nissanka b Jeffery Vandersay 6 15 0 0 40.00
Nathan Smith lbw b Jeffery Vandersay 0 1 0 0 0.00
Ish Sodhi st Kusal Mendis b Maheesh Theekshana 9 12 1 0 75.00
Jacob Duffy not out 4 7 1 0 57.14


Extras 12 (b 0 , lb 2 , nb 0, w 10, pen 0)
Total 209/10 (45.1 Overs, RR: 4.63)
Bowling O M R W Econ
Asitha Fernando 7 0 37 2 5.29
Dunith Wellalage 8 0 46 1 5.75
Maheesh Theekshana 9.1 0 31 3 3.41
Janith Liyanage  3 0 18 0 6.00
Jeffery Vandersay 10 0 46 3 4.60
Charith Asalanka 8 0 29 1 3.62


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Mark Chapman b Michael Bracewell 28 33 4 0 84.85
Avishka Fernando c Henry Nicholls b Mitchell Santner 5 9 1 0 55.56
Kusal Mendis not out 74 102 6 0 72.55
Kamindu Mendis c Mitchell Hay b Michael Bracewell 0 3 0 0 0.00
Charith Asalanka c Ish Sodhi b Michael Bracewell 13 12 2 0 108.33
Sadeera Samarawickrama c Mitchell Hay b Glenn Phillips 8 17 0 0 47.06
Janith Liyanage  c Mitchell Hay b Nathan Smith 22 39 1 0 56.41
Dunith Wellalage c Ish Sodhi b Michael Bracewell 18 17 3 0 105.88
Maheesh Theekshana not out 27 44 2 1 61.36


Extras 15 (b 6 , lb 0 , nb 0, w 9, pen 0)
Total 210/7 (46 Overs, RR: 4.57)
Bowling O M R W Econ
Mitchell Santner 10 1 33 1 3.30
Jacob Duffy 5 0 36 0 7.20
Michael Bracewell 10 0 36 4 3.60
Ish Sodhi 9 0 37 0 4.11
Glenn Phillips 9 0 41 1 4.56
Nathan Smith 3 0 21 1 7.00



>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<