Home Tamil விறுவிறுப்பை அடைந்துள்ள இலங்கை – நியூசிலாந்து முதல் டெஸ்ட்

விறுவிறுப்பை அடைந்துள்ள இலங்கை – நியூசிலாந்து முதல் டெஸ்ட்

New Zealand tour of Sri Lanka 2024

128
New Zealand tour of Sri Lanka 2024

சுற்றுலா இலங்கை – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநிறைவில், இலங்கை அணியின் வெற்றிக்கு 2 விக்கெட்டுக்கள் மீதமிருக்க – நியூசிலாந்தின் வெற்றிக்கு 68 ஓட்டங்கள் தேவைப்பட்டிருக்க ஆட்டம் விறுவிறுப்பு நிலையினை எட்டியுள்ளது.

>> மூன்றாவது நாள் ஆட்டத்தில் அரைச்சதங்களை விளாசிய திமுத், சந்திமால்

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்கள் காரணமாக சனிக்கிழமை (21) ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று (22) ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்தது.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணி இரண்டாம் இன்னிங்ஸிற்காக 237 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டது. களத்தில் ஆட்டமிழக்காதிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் தலா 34 ஓட்டங்கள் வீதம் பெற்றிருந்தனர்.

முன்னேறிய ஆட்டத்தில் நியூசிலாந்தை விட 202 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினைத் தொடர்ந்த இலங்கை அணி போட்டியின் முதல் இடைவெளியில் துரித கதியில் விக்கெட்டுக்களை இழந்ததோடு 94.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. இலங்கைத் தரப்பில் அஞ்செலோ மெதிவ்ஸ் தன்னுடைய 43ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 50 ஓட்டங்கள் எடுக்க, தனன்ஞய டி சில்வா 40 ஓட்டங்கள் குவித்தார்.

நியூசிலாந்துப் பந்துவீச்சு சார்பில் சுழல்வீரரான அஜாஸ் படேல் 06 விக்கெட்டுக்களைச் சாய்க்க, வில்லியம் ஓரூர்க்கே 03 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக 275 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை அடைய இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த நியூசிலாந்து அணி தொடக்கத்தில் டெவோன் கொன்வேயின் விக்கெட்டினை அசித பெர்னாண்டோவின் பந்துவீச்சில் பறிகொடுத்தது. கொன்வேய் 04 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார்.

>> மகளிர் T20 உலக கிண்ண இலங்கை குழாம் அறிவிப்பு

தொடர்ந்து நான்காம் நாளின் மதிய போசணத்தினை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் நியூசிலாந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து இலக்கினை நோக்கி முன்னேறியது. அவ்வணிக்காக கேன் வில்லியம்சன் 30 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்த நிலையில் புதிய வீரராக வந்த ரச்சின் ரவீந்திராக பொறுப்பாக ஆடி ஓட்டங்கள் பெற்றார். இதனால் நான்காம் நாளின் தேநீர் இடைவேளையின் பின்னர் நியூசிலாந்து சிறந்த நிலைக்குச் சென்றது.

எனினும் இலங்கை அணியின் சுழல்பந்துவீச்சாளர்கள் நெருக்கடி உருவாக்க நான்காம் நாள் ஆட்டநிறைவில் நியூசிலாந்து அணி 207 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. அவ்வணியின் வெற்றிக்கு இன்னும் 68 ஓட்டங்கள் தேவைப்பட்டிருக்க களத்தில் ஆட்டமிழக்காமல் நிற்கும் ரச்சின் ரவீந்திரா 91 ஓட்டங்களுடன் காணப்பட, அஜாஸ் பட்டேல் ஓட்டமேதுமின்றி நிற்கின்றார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
305/10 (91.5) & 309/10 (94.2)

New Zealand
340/10 (90.5) & 211/10 (71.4)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka b William O’Rourke 27 25 5 0 108.00
Dimuth Karunaratne c Tom Blundell b William O’Rourke 2 6 0 0 33.33
Dinesh Chandimal c Michael Bracewell b Tim Southee 30 71 3 0 42.25
Angelo Mathews c Tom Blundell b William O’Rourke 36 116 3 0 31.03
Kamindu Mendis c Mitchell Santner b Ajaz Patel 114 173 11 0 65.90
Dhananjaya de Silva b Glenn Phillips 11 24 2 0 45.83
Kusal Mendis c Tim Southee b Glenn Phillips 50 68 7 0 73.53
Ramesh Mendis lbw b William O’Rourke 14 49 2 0 28.57
Prabath Jayasuriya lbw b Ajaz Patel 0 15 0 0 0.00
Lahiru Kumara not out 2 2 0 0 100.00
Asitha Fernando b William O’Rourke 0 4 0 0 0.00


Extras 19 (b 4 , lb 10 , nb 4, w 1, pen 0)
Total 305/10 (91.5 Overs, RR: 3.32)
Bowling O M R W Econ
Tim Southee 14 2 48 1 3.43
William O’Rourke 18.5 4 55 5 2.97
Ajaz Patel 20 4 60 2 3.00
Mitchell Santner 19 2 64 0 3.37
Glenn Phillips 18 0 52 2 2.89
Rachin Ravindra 2 0 12 0 6.00
Batsmen R B 4s 6s SR
Tom Latham c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya 70 111 6 0 63.06
Devon Conway lbw b Ramesh Mendis 17 59 1 0 28.81
Kane Williamson c Kusal Mendis b Dhananjaya de Silva 55 104 4 1 52.88
Rachin Ravindra b Dhananjaya de Silva 39 48 4 0 81.25
Daryl Mitchell run out (Kusal Mendis) 57 86 7 1 66.28
Tom Blundell c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 25 65 1 1 38.46
Glenn Phillips not out 49 48 2 5 102.08
Mitchell Santner c Kusal Mendis b Prabath Jayasuriya 2 2 0 0 100.00
Tim Southee b Prabath Jayasuriya 3 10 0 0 30.00
Ajaz Patel lbw b Ramesh Mendis 6 6 1 0 100.00
William O’Rourke b Ramesh Mendis 2 8 0 0 25.00


Extras 15 (b 8 , lb 3 , nb 2, w 2, pen 0)
Total 340/10 (90.5 Overs, RR: 3.74)
Bowling O M R W Econ
Asitha Fernando 7 1 25 0 3.57
Lahiru Kumara 12 5 28 0 2.33
Dhananjaya de Silva 7 0 31 2 4.43
Ramesh Mendis 23.5 1 101 3 4.30
Prabath Jayasuriya 40 5 136 4 3.40
Kamindu Mendis 1 0 8 0 8.00
Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Tim Southee b William O’Rourke 2 10 0 0 20.00
Dimuth Karunaratne b Ajaz Patel 83 127 6 0 65.35
Dinesh Chandimal c Tom Latham b William O’Rourke 61 150 6 0 40.67
Angelo Mathews c Mitchell Santner b Ajaz Patel 50 111 5 0 45.05
Kamindu Mendis c Mitchell Santner b William O’Rourke 13 12 3 0 108.33
Dhananjaya de Silva st Tom Blundell b Ajaz Patel 40 77 4 0 51.95
Kusal Mendis b Ajaz Patel 23 30 3 0 76.67
Ramesh Mendis lbw b Ajaz Patel 1 18 0 0 5.56
Prabath Jayasuriya c William O’Rourke b Mitchell Santner 11 24 2 0 45.83
Lahiru Kumara c Kane Williamson b Ajaz Patel 0 0 0 0 0.00
Asitha Fernando not out 0 0 0 0 0.00


Extras 25 (b 11 , lb 8 , nb 4, w 2, pen 0)
Total 309/10 (94.2 Overs, RR: 3.28)
Bowling O M R W Econ
William O’Rourke 17 2 49 3 2.88
Ajaz Patel 30 8 90 6 3.00
Mitchell Santner 14.2 2 51 1 3.59
Tim Southee 16 4 39 0 2.44
Glenn Phillips 12 1 50 0 4.17
Rachin Ravindra 5 0 11 0 2.20


Batsmen R B 4s 6s SR
Tom Latham lbw b Dhananjaya de Silva 28 68 2 0 41.18
Devon Conway b Asitha Fernando 4 7 0 0 57.14
Kane Williamson st Kusal Mendis b Prabath Jayasuriya 30 46 3 1 65.22
Rachin Ravindra lbw b Prabath Jayasuriya 92 168 9 1 54.76
Daryl Mitchell b Ramesh Mendis 8 26 1 0 30.77
Tom Blundell b Prabath Jayasuriya 30 43 4 0 69.77
Glenn Phillips c Kusal Mendis b Prabath Jayasuriya 4 14 0 0 28.57
Mitchell Santner c Pathum Nissanka b Ramesh Mendis 2 22 0 0 9.09
Tim Southee lbw b Ramesh Mendis 2 9 0 0 22.22
Ajaz Patel not out 2 22 0 0 9.09
William O’Rourke b Prabath Jayasuriya 0 6 0 0 0.00


Extras 9 (b 6 , lb 2 , nb 1, w 0, pen 0)
Total 211/10 (71.4 Overs, RR: 2.94)
Bowling O M R W Econ
Ramesh Mendis 25 3 81 3 3.24
Asitha Fernando 2 0 5 1 2.50
Prabath Jayasuriya 30.4 7 68 4 2.24
Dhananjaya de Silva 12 4 32 1 2.67
Lahiru Kumara 2 0 15 0 7.50



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<