சுற்றுலா நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை 45 ஓட்டங்களால் (டக்வத் லூயிஸ் முறையில்) அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து வீரர்கள் T20I தொடரினை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றனர். அதன்படி ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (13) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியது.
>>ஐசிசி அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் நோமான் அலி<<
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர். இலங்கை இப்போட்டியில் வனிந்து ஹஸரங்கவினை ஜெப்ரி வன்டர்செய் மூலம் பிரதியீடு செய்திருந்தது.
இலங்கை XI
பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க (தலைவர்), ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், மகீஷ் தீக்ஸன, ஜெப்ரி வன்டர்செய், டில்சான் மதுசங்க, அசித பெர்னாண்டோ
நாணய சுழற்சிக்கு அமைய முதலில் இலங்கை அணி துடுப்பாடிய ஆரம்பித்த பின்னர் போட்டியில் மழையின் தாக்கத்தினால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் இலங்கை பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட்டினை தொடக்கத்திலேயே பறிகொடுத்த போதிலும் அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் மெண்டிஸ் ஜோடி இலங்கைத் தரப்பினை பலப்படுத்தியது.
இரண்டு வீரர்களும் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 206 ஓட்டங்களைப் பகிர்ந்ததோடு அதில் தன்னுடைய நான்காவது ஒருநாள் சதத்தோடு அவிஷ்க பெர்னாண்டோ 115 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்கள் பெற்றார்.
அவிஷ்க பெர்னாண்டோவின் பின்னர் குசல் மெண்டிஸ் அசத்தலான முறையில் தன்னுடைய நான்காவது ஒருநாள் சதம் விளாசினார். அவர் 128 பந்துகளில் 17 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 143 ஓட்டங்கள் பெற்று தன்னுடைய சிறந்த ஒருநாள் இன்னிங்ஸை பதிவு செய்தார். குசல் மெண்டிஸை அடுத்து சரித் அசலன்கவின் சிறு அதிரடியோடு இலங்கை 49.2 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களுடன் காணப்பட்ட நிலையில் மழை போட்டியினை மீண்டும் நிறுத்தியது.
>>வனிந்து ஹஸரங்க ஒருநாள் தொடரில் ஆடுவது சந்தேகம்<<
மழை போட்டியினை நிறுத்தும் போது ஆட்டமிழந்திருந்த சரித் அசலன்க 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்கள் பெற்றிருக்க நியூசிலாந்து பந்துவீச்சில் ஜகோப் டப்பி 3 விக்கெட்டுக்களையும், மைக்கல் பிரஸ்வல் மற்றும் இஸ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்தனர்.
பின்னர் மழை நீண்ட நேரம் நீடிக்க நியூசிலாந்து அணிக்கு போட்டியின் வெற்றி இலக்காக 27 ஓவர்களில் 221 ஓட்டங்கள் தீர்மானம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கை அடைவதற்காக சிறந்த ஆரம்பம் ஒன்றினை நியூசிலாந்து பெற்றிருந்த போதிலும் இலங்கையின் சுழல்வீரர்களாக பந்துவீசிய மகீஷ் தீக்ஸன அணித்தலைவர் சரித் அசலன்க ஆகியோரின் திருப்பு முனையான பந்துவீச்சினால் ஒரு கட்டத்தில் 88 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பின்றி காணப்பட்ட நியூசிலாந்து 27 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றது.
நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் வில் யங் அதிகபட்சமாக 48 ஓட்டங்கள் பெற, இலங்கை பந்துவீச்சில் டில்சான் மதுசங்க 3 விக்கெட்டுக்களையும் மகீஷ் தீக்ஸன மற்றும் சரித் அசலன்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவாகினார். இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியானது ஞாயிற்றுக்கிழமை (17) பல்லேகலயில் ஆரம்பமாகுகின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Nathan Smith b Jacob Duffy | 12 | 10 | 3 | 0 | 120.00 |
Avishka Fernando | c Will Young b Ish Sodhi | 100 | 115 | 9 | 2 | 86.96 |
Kusal Mendis | c Henry Nicholls b Jacob Duffy | 143 | 128 | 17 | 2 | 111.72 |
Sadeera Samarawickrama | c Ish Sodhi b Michael Bracewell | 5 | 4 | 0 | 0 | 125.00 |
Charith Asalanka | c Will Young b Jacob Duffy | 40 | 28 | 3 | 2 | 142.86 |
Janith Liyanage | not out | 12 | 13 | 2 | 0 | 92.31 |
Extras | 12 (b 0 , lb 6 , nb 2, w 4, pen 0) |
Total | 324/5 (49.2 Overs, RR: 6.57) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Jacob Duffy | 8.2 | 0 | 41 | 3 | 5.00 | |
Nathan Smith | 8 | 1 | 66 | 0 | 8.25 | |
Mitchell Santner | 10 | 0 | 53 | 0 | 5.30 | |
Michael Bracewell | 9 | 0 | 73 | 1 | 8.11 | |
Ish Sodhi | 10 | 0 | 62 | 1 | 6.20 | |
Glenn Phillips | 4 | 0 | 23 | 0 | 5.75 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Will Young | b Maheesh Theekshana | 48 | 46 | 8 | 0 | 104.35 |
Tim Robinson | st Kusal Mendis b Maheesh Theekshana | 35 | 36 | 4 | 0 | 97.22 |
Henry Nicholls | b Charith Asalanka | 6 | 6 | 1 | 0 | 100.00 |
Mark Chapman | c Maheesh Theekshana b Charith Asalanka | 2 | 5 | 0 | 0 | 40.00 |
Glenn Phillips | c Pathum Nissanka b Jeffery Vandersay | 9 | 9 | 1 | 0 | 100.00 |
Michael Bracewell | not out | 34 | 32 | 5 | 0 | 106.25 |
Mitchell Hay | c Asitha Fernando b Dilshan Madushanka | 10 | 9 | 0 | 1 | 111.11 |
Mitchell Santner | run out (Maheesh Theekshana) | 9 | 7 | 1 | 0 | 128.57 |
Nathan Smith | b Dilshan Madushanka | 9 | 8 | 1 | 0 | 112.50 |
Ish Sodhi | b Dilshan Madushanka | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Jacob Duffy | not out | 4 | 3 | 1 | 0 | 133.33 |
Extras | 9 (b 0 , lb 4 , nb 0, w 5, pen 0) |
Total | 175/9 (27 Overs, RR: 6.48) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 5 | 0 | 26 | 0 | 5.20 | |
Dilshan Madushanka | 4 | 0 | 39 | 3 | 9.75 | |
Maheesh Theekshana | 6 | 0 | 32 | 2 | 5.33 | |
Janith Liyanage | 1 | 0 | 4 | 0 | 4.00 | |
Jeffery Vandersay | 6 | 0 | 40 | 1 | 6.67 | |
Kamindu Mendis | 2 | 0 | 15 | 0 | 7.50 | |
Charith Asalanka | 3 | 0 | 15 | 2 | 5.00 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<