சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிராக கண்டி – பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது T20 போட்டியில் மாலிங்கவின் சாதனை பந்துவீச்சுடன் இலங்கை அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை தடுமாற்றமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. எனினும், லசித் மாலிங்க 6 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்த, நியூசிலாந்து அணி, 88 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
வைட்வொஷ் தோல்வியை தடுக்குமா இலங்கை?
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முதல் இரண்டு T20I போட்டிகளிலும் வெற்றிபெற்று, தொடரை 2-0 என
கடந்த இரண்டாவது T20 போட்டியில் உபாதைக்குள்ளாகிய இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் மற்றும் ஷெஹான் ஜயசூரிய ஆகியோருக்கு பதிலாக தனுஷ்க குணதிலக்க மற்றும் T20 அறிமுகத்தை பெற்றிருந்த லஹிரு மதுஷங்க ஆகியோர் களமிறங்கினர்.
நியூசிலாந்து அணியில் உபாதைக்குள்ளாகிய மார்டின் கப்டில் மற்றும் டொம் ப்ரூஸ் ஆகியோருக்கு பதிலாக ஹெமிஷ் ரதபோர்ட் மற்றும் ரொஸ் டெய்லர் ஆகியோர் களமிறங்கியிருந்தனர். அத்துடன், இஷ் சோதிக்கு பதிலாக டொட் எஸ்ட்ல் களமிறக்கப்பட்டிருந்தார்.
Photos: Sri Lanka vs New Zealand | 3rd T20I
இவ்வாறு, பல மாற்றங்களுக்கு மத்தியில் அணிகள் களமிறங்கியிருக்க, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. கடந்த போட்டிகளில் 160 இற்கும் அதிகமான ஓட்டங்களை குவித்திருந்த இலங்கை அணி, டொட் எஸ்ட்ல் மற்றும் மிச்சல் சென்ட்னர் ஆகியோரின் சுழல்களுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியில் தனுஷ்க குணதிலக்க (30), நிரோஷன் டிக்வெல்ல (24) மற்றும் அறிமுக வீரர் லஹிரு மதுசங்க (20) ஆகியோர் ஓரளவுக்கு ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, வனிந்து ஹசரங்க ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்களை பெற்றார். எவ்வாறாயினும், ஏனைய முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் தேவையற்ற நேரங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்து அணிக்கு ஏமாற்றம் அளித்தனர்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளர்களான மிச்சல் சென்ட்னர் மற்றும் டொட் எஸ்ட்ல் ஆகியோர் தங்களுக்கு இடையில் வெறும் 40 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து தலா மூன்று விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினர்.
இலங்கை வீரர்களுக்கு மின்னொளியில் அதிக பயிற்சி கொடுங்கள் – மாலிங்க
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு T20i போட்டிகளிலும் வெற்றியின் விளிம்புவரை சென்று .
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி லசித் மாலிங்கவின் சாதனை பந்துவீச்சு மற்றும் அகில தனன்ஜய மற்றும் களத்தடுப்பாளர்களின் அபாரத்தால், 88 ஓட்டங்களுக்கு சுருண்டு தோல்வியை தழுவியது.
ஆரம்பத்தில் நியூசிலாந்து அணி வேகமாக ஓட்டங்களைக் குவிக்க தொடங்கியிருந்தாலும், லசித் மாலிங்க தன்னுடைய இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்து, நியூசிலாந்து அணியை பின்தள்ளி அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.
கொலின் மன்ரோ, ஹெமிஷ் ரதபோர்ட், கொலின் டி கிரெண்டோம் மற்றும் ரொஸ் டெய்லர் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து T20 போட்டிகளில் சாதனை படைத்தார். ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீட் கானுக்கு அடுத்தபடியாக T20 போட்டிகளில் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற சாதனையை மாலிங்க பதிவுசெய்ததுடன், T20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதன் பின்னர், அகில தனன்ஜய 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியை இலகுவாக்க, அடுத்தபடியாக வனிந்து ஹசரங்க ஒரு விக்கெட்டினையும், லக்ஷான் சந்தகன் இறுதி விக்கெட்டினையும் வீழ்த்தி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் இறுதிவரை போராடிய டிம் சௌதி அதிகபட்சமாக 26 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஏனைய வீரர்கள் அணிக்கு ஏமாற்றத்தை வழங்கியிருந்தனர்.
எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Danushka Gunathilaka | b Toodd Astle | 30 | 25 | 4 | 0 | 120.00 |
Kusal Perera | c Toodd Astle b Mitchell Santner | 3 | 12 | 0 | 0 | 25.00 |
Avishka Fernando | b Toodd Astle | 6 | 12 | 1 | 0 | 50.00 |
Niroshan Dickwella | c Colin Munro b Mitchell Santner | 24 | 15 | 3 | 0 | 160.00 |
Lahiru Madushanka | lbw b Mitchell Santner | 20 | 23 | 1 | 0 | 86.96 |
Dasun Shanaka | c Daryl Mitchell b Toodd Astle | 7 | 6 | 1 | 0 | 116.67 |
Wanindu Hasaranga | not out | 14 | 10 | 0 | 0 | 140.00 |
Isuru Udana | run out (Mitchell Santner) | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Akila Dananjaya | b Scott Kuggeleijn | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Lasith Malinga | not out | 6 | 11 | 0 | 0 | 54.55 |
Extras | 13 (b 1 , lb 8 , nb 0, w 4, pen 0) |
Total | 125/8 (20 Overs, RR: 6.25) |
Fall of Wickets | 1-31 (4.1) Kusal Perera, 2-39 (6.4) Avishka Fernando, 3-50 (8.5) Danushka Gunathilaka, 4-77 (12.2) Niroshan Dickwella, 5-98 (14.5) Dasun Shanaka, 6-101 (15.4) Lahiru Madushanka, 7-109 (16.6) Isuru Udana, 8-109 (17.2) Akila Dananjaya, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tim Southee | 4 | 0 | 16 | 0 | 4.00 | |
Seth Rance | 3 | 0 | 29 | 0 | 9.67 | |
Mitchell Santner | 4 | 1 | 12 | 3 | 3.00 | |
Scott Kuggeleijn | 4 | 0 | 21 | 0 | 5.25 | |
Toodd Astle | 4 | 0 | 28 | 3 | 7.00 | |
Colin de Grandhomme | 1 | 0 | 10 | 0 | 10.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Colin Munro | b Lasith Malinga | 12 | 12 | 1 | 1 | 100.00 |
Tim Seifert ( | c Danushka Gunathilaka b Lasith Malinga | 8 | 13 | 1 | 0 | 61.54 |
Hamish Rutherford | lbw b Lasith Malinga | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Colin de Grandhomme | b Lasith Malinga | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Ross Taylor | lbw b Lasith Malinga | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Daryl Mitchell | run out (Wanindu Hasaranga) | 6 | 7 | 0 | 0 | 85.71 |
Mitchell Santner | st Kusal Perera b Akila Dananjaya | 16 | 15 | 1 | 0 | 106.67 |
Scott Kuggeleijn | b Akila Dananjaya | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Tim Southee | not out | 28 | 23 | 0 | 3 | 121.74 |
Toodd Astle | lbw b Wanindu Hasaranga | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Seth Rance | lbw b Lakshan Sandakan | 8 | 17 | 0 | 0 | 47.06 |
Extras | 7 (b 0 , lb 2 , nb 0, w 5, pen 0) |
Total | 88/10 (16 Overs, RR: 5.5) |
Fall of Wickets | 1-15 (2.3) Colin Munro, 2-15 (2.4) Hamish Rutherford, 3-15 (2.5) Colin de Grandhomme, 4-15 (2.6) Ross Taylor, 5-23 (4.4) Tim Seifert (, 6-46 (8.1) Daryl Mitchell, 7-46 (8.2) Scott Kuggeleijn, 8-47 (8.4) Mitchell Santner, 9-88 (15.6) Seth Rance, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lasith Malinga | 4 | 1 | 6 | 5 | 1.50 | |
Akila Dananjaya | 4 | 0 | 28 | 2 | 7.00 | |
Lakshan Sandakan | 4 | 0 | 33 | 1 | 8.25 | |
Danushka Gunathilaka | 1 | 0 | 7 | 0 | 7.00 | |
Wanindu Hasaranga | 3 | 0 | 12 | 1 | 4.00 |
முடிவு – இலங்கை 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<