இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து அணியின் 187 என்ற முதல் இன்னிங்ஸ் முன்னிலை ஓட்ட எண்ணிக்கையை கடக்க தவறிய இலங்கை அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதனால், இன்னிங்ஸ் அடிப்படையில் இலங்கை அணி தோல்வியை தழுவியது.
இலங்கை அணிக்கு ஏமாற்றத்தை வழங்கிய நியூசிலாந்தின் துடுப்பாட்டம்
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள்…
கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனன்ஜய டி சில்வாவின் போராட்டமான சதத்துடன், 244 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டொம் லேத்தமின் 154 ஓட்டங்கள் மற்றும் பிஜே வெட்லிங்கின் சதம் என்பவற்றின் உதவியுடன் 431 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.
குறிப்பாக நேற்றைய ஆட்டநேர நிறைவில் 382 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூசிலாந்து அணி, ஐந்தாவது நாளான இன்று மிக வேகமாக துடுப்பெடுத்தாடியிருந்தது. கொலின் டி கிரெண்டோம் வந்த வேகத்தில் ஆட்டமிழந்திருந்தாலும், பிஜே வெட்லிங் அதிரடியாக ஆடி சதம் கடக்க, டிம் சௌதி 10 பந்துகளுக்கு 24 ஓட்டங்களை குவித்தார்.
Photos: Sri Lanka vs New Zealand | 2nd Test – Day 5
இதன் பின்னர், 187 ஓட்டங்கள் பின்னடைவில் இருந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி ஆரம்பம் முதல் தடுமாறியது. முதல் ஓவரிலேயே லஹிரு திரிமான்னே ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் குசல் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற, இலங்கை அணி மதியபோசன இடைவேளையின் போது, 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வியினை நோக்கி நகர்ந்தது.
மதியபோசன இடைவேளையின் பின்னர் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் நிரோஷன் டிக்வெல்ல சிறிய இணைப்பாட்டமொன்றை பகிர்ந்த போதும், திமுத் கருணாத்ன 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவருக்கு அடுத்தப்படியாக களமிறங்கிய டில்ருவான் பெரேரா ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தார்.
எம்மால் இன்னும் வெற்றிபெற முடியுமென நம்புகிறோம் -டொம் லேதம்
இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒருநாளே எஞ்சியுள்ள நிலையில் தம்மால் இன்னும்…
இவர்களின் ஆட்டமிழப்புக்கு மத்தியில் நிரோஷன் டிக்வெல்ல போட்டியினை சமப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார். நிதானமாக துடுப்பெடுத்தாடி சுரங்க லக்மாலுடன் இணைந்து இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்ப, தேநீர் இடைவேளையின் போது இலங்கை அணி, 88 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி சார்பில், லக்மால் மற்றும் டிக்வெல்ல ஆகியோர் 40 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது, லக்மால் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இறுதியாக அணிக்காக துடுப்பாட்டத்தில் போராடிக்கொண்டிருந்த நிரோஷன் டிக்வெல்ல தனது 13வது டெஸ்ட் அரைச் சதத்தை கடந்து 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
நியூசிலாந்து அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளதுடன், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் 60 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
ஏற்கனவே இடம்பெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டி சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dimuth Karunaratne | c BJ Watling b Tim Southee | 65 | 165 | 6 | 0 | 39.39 |
Lahiru Thirimanne | c Kane Williamson b William Somerville | 2 | 35 | 0 | 0 | 5.71 |
Kusal Mendis | c BJ Watling b Colin de Grandhomme | 32 | 70 | 4 | 0 | 45.71 |
Angelo Mathews | c BJ Watling b Trent Boult | 2 | 29 | 0 | 0 | 6.90 |
Kusal Perera | lbw b Trent Boult | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Dhananjaya de Silva | b Trent Boult | 109 | 148 | 16 | 2 | 73.65 |
Niroshan Dickwella | c BJ Watling b Tim Southee | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Dilruwan Perera | lbw b Ajaz Patel | 13 | 54 | 1 | 0 | 24.07 |
Suranga Lakmal | c BJ Watling b Tim Southee | 10 | 24 | 1 | 0 | 41.67 |
Lasith Embuldeniya | lbw b Tim Southee | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Lahiru Kumara | not out | 5 | 11 | 0 | 0 | 45.45 |
Extras | 6 (b 1 , lb 2 , nb 3, w 0, pen 0) |
Total | 244/10 (90.2 Overs, RR: 2.7) |
Fall of Wickets | 1-29 (14.4) Lahiru Thirimanne, 2-79 (32.3) Kusal Mendis, 3-93 (41.1) Angelo Mathews, 4-93 (41.5) Kusal Perera, 5-130 (57.3) Dimuth Karunaratne, 6-130 (57.6) Niroshan Dickwella, 7-171 (74.5) Dilruwan Perera, 8-214 (83.5) Suranga Lakmal, 9-224 (85.1) Lasith Embuldeniya, 10-244 (90.2) Dhananjaya de Silva, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Trent Boult | 22.2 | 6 | 75 | 3 | 3.38 | |
Tim Southee | 29 | 7 | 63 | 4 | 2.17 | |
Colin de Grandhomme | 17 | 3 | 35 | 1 | 2.06 | |
William Somerville | 6 | 3 | 20 | 1 | 3.33 | |
Ajaz Patel | 16 | 4 | 48 | 1 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jeet Raval | c Dhananjaya de Silva b Dilruwan Perera | 0 | 9 | 0 | 0 | 0.00 |
Tom Latham | lbw b Dilruwan Perera | 154 | 251 | 15 | 0 | 61.35 |
Kane Williamson | c Kusal Mendis b Lahiru Kumara | 20 | 28 | 2 | 0 | 71.43 |
Ross Taylor | c Dhananjaya de Silva b Lasith Embuldeniya | 23 | 43 | 3 | 0 | 53.49 |
Henry Nicholls | c Dhananjaya de Silva b Dilruwan Perera | 15 | 46 | 0 | 0 | 32.61 |
BJ Watling | not out | 105 | 226 | 4 | 0 | 46.46 |
Colin de Grandhomme | c Lahiru Kumara b Lasith Embuldeniya | 83 | 77 | 5 | 5 | 107.79 |
Tim Southee | not out | 24 | 10 | 2 | 2 | 240.00 |
Extras | 7 (b 0 , lb 4 , nb 0, w 3, pen 0) |
Total | 431/6 (115 Overs, RR: 3.75) |
Fall of Wickets | 1-1 (3.1) Jeet Raval, 2-34 (12.5) Kane Williamson, 3-84 (26.2) Ross Taylor, 4-126 (42.3) Henry Nicholls, 5-269 (85.3) Tom Latham, 6-382 (110.2) Colin de Grandhomme, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilruwan Perera | 37 | 4 | 114 | 3 | 3.08 | |
Dhananjaya de Silva | 5 | 1 | 10 | 0 | 2.00 | |
Suranga Lakmal | 11 | 2 | 32 | 0 | 2.91 | |
Lahiru Kumara | 25 | 0 | 115 | 1 | 4.60 | |
Lasith Embuldeniya | 37 | 4 | 156 | 2 | 4.22 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lahiru Thirimanne | run out (Ajaz Patel) | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Kusal Perera | c BJ Watling b Trent Boult | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Kusal Mendis | b William Somerville | 20 | 63 | 3 | 0 | 31.75 |
Angelo Mathews | c Ross Taylor b Colin de Grandhomme | 7 | 30 | 0 | 0 | 23.33 |
Dhananjaya de Silva | c Tim Southee b Ajaz Patel | 1 | 19 | 0 | 0 | 5.26 |
Niroshan Dickwella | c Tom Latham b Ajaz Patel | 51 | 161 | 4 | 0 | 31.68 |
Dimuth Karunaratne | lbw b Tim Southee | 21 | 70 | 2 | 0 | 30.00 |
Dilruwan Perera | c Ross Taylor b Tim Southee | 0 | 12 | 0 | 0 | 0.00 |
Suranga Lakmal | c Tom Latham b William Somerville | 14 | 45 | 2 | 1 | 31.11 |
Lasith Embuldeniya | c Kane Williamson b Trent Boult | 5 | 11 | 0 | 0 | 45.45 |
Lahiru Kumara | not out | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 3 (b 0 , lb 2 , nb 0, w 1, pen 0) |
Total | 122/10 (70.2 Overs, RR: 1.73) |
Fall of Wickets | 1-0 (0.5) Lahiru Thirimanne, 2-4 (2.2) Kusal Perera, 3-11 (11.3) Angelo Mathews, 4-22 (18.3) Dhananjaya de Silva, 5-32 (21.5) Kusal Mendis, 6-73 (43.5) Dimuth Karunaratne, 7-75 (47.4) Dilruwan Perera, 8-115 (65.3) Suranga Lakmal, 9-118 (69.3) Niroshan Dickwella, 10-122 (70.2) Lasith Embuldeniya, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Trent Boult | 14.2 | 8 | 17 | 2 | 1.20 | |
Tim Southee | 12 | 6 | 15 | 2 | 1.25 | |
Ajaz Patel | 19 | 3 | 31 | 2 | 1.63 | |
Colin de Grandhomme | 4 | 1 | 8 | 1 | 2.00 | |
William Somerville | 21 | 6 | 49 | 2 | 2.33 |
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க