இலங்கை அணியை அவர்களது சொந்த மைதானத்தில் வீழ்த்துவது மிகக் கடினமானது என்று நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் குறிப்பிட்டார்.
கொழும்பு, பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலை பெற்றது.
இன்று (26) முடிவுற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த கேன் வில்லியம்சன்,
டிக்வெல்லவின் போராட்டாம் வீணாக வெற்றியீட்டியது நியூசிலாந்து
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது………….
”காலியை விடவும் இது (பி. சரா ஓவல்) வித்தியாசமான ஆடுகளம். பந்து சற்று வேகமாக வருகிறது. பிற்பகுதியில் துடுப்பெடுத்தாடுவது சற்று கடினமானது. எனினும் எமது வீரர்களின் ஆட்டம், இணைப்பாட்டம், அணியை வலுவான நிலைக்கு கொண்டுவந்தது.
எல்லா போட்டிகளும் வித்தியாசமானது. எம் முன்னால் இருப்பதை எதிர்கொள்ள வேண்டும். காலியில் நாம் அதிக பின்னடைவை சந்தித்தோம். இலங்கையை அவர்களது சொந்த மைதானத்தில் வீழ்த்துவது மிகக் கடினமான ஒன்று. அவர்கள் காலியில் சிறப்பாக விளையாடினார்கள்.
நாங்கள் வெற்றியை நெருங்கினோம் என்றாலும் போதுமாக இருக்கவில்லை. இந்தப் போட்டியில் தவறுகளை சரிசெய்து இந்த முடிவை எம்மால் பெற முடிந்தது” என்றார்.
சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான காலி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற நிலையில் பி. சராவில் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. எனினும் தொடர் சமநிலையுற்ற நிலையில் மூன்றாவது போட்டி ஒன்று வழங்கப்படாதது குறித்து வில்லியம்சனிடம் கேட்டபோது,
“இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இரு அணிகளும் 1-1 என தொடரை சமநிலை செய்தது. மூன்றாவது போட்டி இருந்தால் நல்லது. ஆனால் இந்த வெற்றிக்கு இரு அணிகளும் தகுதி பெற்றுள்ளன” என்று பதிலளித்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<