நியூசிலாந்துடனான இரண்டாவது போட்டியில் தமது வீரர்கள் துடுப்பாட்டத்தில் பொறுப்புடன் விளையாடாத காரணத்தால் தோல்வியை சந்திக்க நேரிட்டதாகத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, இன்னுமொரு போட்டி இருந்தால் தவறுகளை திருத்திக் கொண்டு விளையாடி தொடரைக் கைப்பற்ற முயற்சி செய்திருப்போம் என தெரிவித்தார்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.
டிக்வெல்லவின் போராட்டாம் வீணாக வெற்றியீட்டியது நியூசிலாந்து
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ……..
இந்த வெற்றியின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, நியூஸிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியது.
இலங்கை அணியின் இந்த தோல்விக்கு துடுப்பாட்ட வீரர்களின் மோசமான ஆட்டம் முக்கிய காரணியாக இருந்தது. இந்த நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அணியின் பந்துவீச்சார்கள் ஏன் பிரகாசிக்கவில்லை என எழுப்பிய கேள்விக்கு திமுத் கருணாரத்ன பதிலளிக்கையில்,
”முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுக்களையும் மிக விரைவாகக் கைப்பற்றிய பிறகு எங்களுக்கு ஏனைய வீரர்களிதும் விக்கெட்டுக்களைக் குறைந்த ஓட்டங்களுக்கு கைப்பற்ற முடியும் என எண்ணினோம். ஆனால் அவர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தனர்.
அதேபோல, ஆடுகளம் இடைக்கிடையே இருந்த வெப்பநிலை காரணமாக கொஞ்சம் உலர்வதற்கும் ஆரம்பமாகியது. இதனால் ஆடுகளத்தின் ஈரலிப்புத் தன்மை குறைந்ததால் பந்து பௌண்சராகவோ அல்லது சுழலவோ இல்லை. ஆனாலும், எமது பந்துவீச்சாளர்களுக்கும் கொஞ்சம் நெருக்கடியைக் கொடுத்திருக்கலாம்” என்றார்.
இலங்கை அணியின் பந்துவீச்சு தரப்பில் இரண்டு சிரேஷ்ட வீரர்களே அதிக அனுபவத்துடன் இருந்தனர். இது அணிக்கு அதிகம் தாக்கம் செலுத்தியதாக திமுத் குறிப்பிட்டார்.
”நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளரகள் நாங்கள் முதல் இன்னிங்ஸுக்காகத் துடுப்பெடுத்தாடிய போது சிறப்பாக பந்துவீசியிருந்தனர். ஆனால் சுரங்க லக்மால் மற்றும் டில்ருவன் பெரேராவைத் தவிர எமது ஏனைய இரண்டு பந்துவீச்சாளர்களுக்கும் அனுபவம் போதாது.
எனினும், அவர்கள் நிறைய முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். எனவே, இவ்வாறான சின்னச் சின்ன தவறுகளை மிக விரைவில் எமது பந்துவீச்சாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் வெளிநாட்டு மண்ணில் விளையாடும் போது இவ்வாறு ஓட்டங்களை வாரிவழங்கினால் எமக்குத்தான் நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். ஓட்டுமொத்தத்தில் நாங்கள் நிறைய ஓட்டங்களை விட்டுக்கொடுத்தது தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது” என தெரிவித்தார்.
இதேநேரம், அணித் தலைவராக அனைத்து வீரர்களுக்கும் அதிகளவு சுதந்திரம் வழங்குகின்றீர்கள் என நிரோஷன் டிக்வெல்ல கூறியிருந்த கருத்துக்கு திமுத் பதிலளிக்கையில்,
ஆடுகளம் நுழைந்து அடித்தாடுவதை நான் சுதந்திரம் என்று சொல்லவில்லை. தமது மனதை சீரான முறையில் வைத்துக் கொண்டு ஓட்டங்களைக் குவிப்பது அல்லது பந்துவீசுதைத் தான் நான் சுதந்திரம் என்று சொன்னேன். உதாரணமாக ரிவர்ஸ் ஸ்விப்பொன்றை தன்னால் அடிக்க முடியும் என தெரிந்து கொண்டு அதை தவிர்த்துவிடுவது மனதில் ஏதோ இருப்பதை உணர்த்தும். அந்த பந்தில் எம்மால் ஓட்டமொன்றை குவிக்க முடியும் என்ற மனநிலை ஏற்பட வேண்டும்.
எனவே, போட்டியில் எப்போதும் எமது மனதை ஒருநிலைப்படுத்தி தன்னம்பிக்கையோடு விளையாட வேண்டும். அதற்காக ஆடுகளத்தில் நுழைந்து முகங்கொடுக்கின்ற எல்லா பந்துகளுக்கும் ஓட்டங்களைக் குவிக்க வேண்டும் என்பதை நான் இங்கு சொல்லவில்லை. எனவே, அணித் தவைராக நான் வழங்குகின்ற சுதந்திரத்தை முடிந்தளவு பயன்படுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
இளையோர் ஆசியக் கிண்ணத் தொடர் இலங்கையில்!
19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் ……
இந்தப் போட்டியை எடுத்துக் கொண்டால் ஒருசில இடங்களில் எமது வீரர்கள் பொறுமையுடன் விளையாடவில்லை. எனவே, விட்ட தவறுகள் குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதேபோல, ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் கீழ் நாங்கள் இன்னும் பல போட்டிகளில் விளையாடவுள்ளோம்” என்றார்.
அணியில் தனக்கான இடத்தை தக்கவைக்க வழங்கப்படும் வாய்ப்புக்கள் எப்பொழுதும் நிலைத்திருக்காது என்ற நிலைப்பாட்டிலேயே திமுத் கருணாரத்ன உள்ளார்.
”ஒருசில வீரர்களுக்கு அணியில் நிறைய சுதந்திரம் கொடுத்தும், சிறப்பாக விளையாடவில்லை என்றால் அவர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் இறுதி முடிவொன்றை எடுக்க வேண்டிவரும். குறிப்பாக, நிறைய வீரர்கள் அந்த இடத்திற்கு வந்து விளையாடுவதற்கு தயாராக உள்ளனர்.
டெஸ்ட் போட்டி என்பது மிகவும் பெறுமதியான போட்டியாகும். எனவே, அதில் விளையாடுகின்ற ஒவ்வொரு துடுப்பாட்ட வீரர்களும் போட்டியின் தன்மையை நன்கு விளங்கிக் கொண்டு தமக்கு கிடைக்கின்ற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக, தமக்கு கிடைத்த சுதந்திரத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
நான் எப்போதும் சுதந்திரமாக விளையாடுவதற்கு விரும்புவேன். உதாரணமாக இன்று நாங்கள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தபோது நான் களமிறங்கினேன். அப்போது என்னால் முடியுமான அனைத்து சக்தியையும் கொடுத்து ஓட்டங்களைக் குவிக்க முயற்சி செய்தேன். மாறாக, ஓட்டங்களைக் குவிக்காமல் தடுத்தாடுவதற்கு முயற்சி செய்யவில்லை. அதேபோல, ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாட வேண்டும் என்ற மனநிலையும் எமக்கு இருக்க வேண்டும்.
இலங்கையின் புதிய கிரிக்கெட் யாப்புக்கு ஐ.சி.சி தலைவர் முட்டுகட்டை
விளையாட்டுத்துறை அமைச்சரின் கோரிக்கைக்கு …….
எனவே எமது வீரர்களுக்கும் நான் இதைத்தான் சொல்ல விரும்புகிறேன். ஒருநாளும் எதிர்மறையான மனநிலையுடன் விளையாட வேண்டாம். எப்போதும் சுதந்திரமாக விளையாடுங்கள் என்பதே எனது வேண்டுகோளாகும்”.
இந்தப் போட்டியில் அணியில் இடம்பெற்ற சிரேஷ்ட வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியமை குறித்து விளக்கமளித்த திமுத் கருணாரத்ன,
சிரேஷ்ட வீரர்கள் தமது திறமைகளை வெளிப்பத்தத் தவறினால் அது நிச்சயம் அணிக்கும் பின்னடைவைக் கொடுக்கும். அணியில் 6 துடுப்பாட்ட வீரர்கள் விளையாடுவோம். அதில் 3 சிரேஷ்ட வீரர்களும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஓட்டங்களைக் குவிக்காவிட்டால் அது அணிக்கு மிகப் பெரிய நெருக்கடியைக் கொடுக்கும்.
எனினும், யாரும் வேண்டுமென்று மோசமாக விளையாட மாட்டார்கள். ஆனால் ஒருசில இடங்களில் நாங்கள் எடுத்த முடிவு தவறாக இருந்தது என நான் கருதுகிறேன். உதாரணமாக திரிமான்னவின் ரன்–அவுட் ஆட்டமிழப்பு, அந்த நேரத்தில் தேவையில்லாத ஒரு ஆட்டமிழப்பாக இருந்தது.
அதேபோல, குசல் ஜனித்தின் துடுப்பாட்டமும் ஏமாற்றத்தையே கொடுத்திருந்தது. எதுஎவ்வாறயினும், தங்களது தவறுகளை திருத்திக் கொள்வார்கள் என நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்.
எம்மால் இன்னும் வெற்றிபெற முடியுமென நம்புகிறோம் -டொம் லேதம்
இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட்………..
டெஸ்ட் அணியில் சகலதுறை வீரர்கள் விளையாட வேண்டும் என்பதன் முக்கியத்துவம் குறித்து பேசிய திமுத், சமபலம் கொண்ட ஒரு அணியைப் பெற்றுக்கொள்ளவே நாங்கள் பொதுவாக சகலதுறை வீரர் ஒருவரை அணியில் இணைத்துக் கொள்வோம். இலங்கையில் விளையாடினால் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் என்பதால் மேலதிகமாக ஒரு சுழல் பந்துவீச்சாளரை அணிக்குள் கொண்டு வருவோம்.
அதேபோல, வெளிநாட்டு மண்ணில் விளையாடினால் வேகப் பந்துவீச்சாளர்களை அணிக்குள் இடம்பெறச் செய்வோம். எனினும், சமபலம் கொண்ட ஒரு அணியை பெற்றுக்கொள்ள எப்போதும் ஒரு சகலதுறை வீரரை அணிக்குள் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றார்.
இதுஇவ்வாறிருக்க, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரா? அல்லது போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரா? பொருத்தமானது என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு திமுத் கருத்து தெரிவிக்கும் போது,
நிறைய போட்டிகளில் விளையாடுவதைத் தான் நான் மிகவும் விரும்புகிறேன். 2 போட்டிகளில் ஒரு வீரரின் திறமையை கணிப்பதென்பது மிகவும் கடினமாகும். 1க்கு 1 என சமநிலையில் போட்டி நிறைவடைந்தால் தொடரை பகிர்ந்து கொள்வது இலகுவாக இருக்கும். ஆனால் 3 போட்டிகளைக் கொண்டதாக இருந்தால் கடைசிப் போட்டியில் இரு அணியினரும் தத்தமது தவறுகளை திருத்திக்கொண்டு விளையாடி தொடரைக் கைப்பற்றுவதற்கு முயற்சி செய்வார்கள்.
ஆறாம் இலக்கத்தை நிரந்தரமாக கொடுத்தால் ஓட்டங்களைக் குவிப்பேன் – தனஞ்சய டி சில்வா
இலங்கை டெஸ்ட் அணிக்காக தொடர்ந்து ……..
நீங்கள் பார்த்தால் முதல் டெஸ்ட் போட்டியைவிட இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வேறுபட்ட திட்டத்துடன் களமிறங்கி விளையாடியிருந்தனர். அணியில் இடம்பெற்ற அனைத்து வீரர்களும் நியூசிலாந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தனர். எனவே முதல் போட்டியில் விட்ட தவறுகளை அவர்கள் திருத்திக் கொண்டு விளையாடியிருந்ததை காணமுடிந்தது.
மறுபுறத்தில், முதல் டெஸ்ட் போட்டியில் விட்ட தவறைக் காட்டிலும் இரண்டாவது போட்டியில் எமது வீரர்கள் நிறைய தவறுகள் செய்தனர். எனினும், இவ்வாறான தவறுகளை 2 போடடிகளில் மாத்திரம் விளையாடிய பிறகு சுட்டிக்காட்டி அவற்றை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு எமக்கு கிடைக்கவில்லை.
எதுஎவ்வாறாயினும், எதிர்வரும் டிசம்பர் மாதம் பாகிஸ்தான் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளோம். ஒரு வீரராக இரண்டு போட்டிகளைவிட இன்னுமொரு போட்டி கூடுதலாக விளையாடினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது எனது நிலைப்பாடாக உள்ளது. இது ஒரு வீரருக்கு டெஸ்ட் விளையாட்டை கற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பமாகவும் அமையவுள்ளது என தெரிவித்தார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<