Home Tamil சீரற்ற காலநிலையால் கைவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்!

சீரற்ற காலநிலையால் கைவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்!

322

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் நிறைவில் இலங்கை அணி, 144 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தின ஆட்டம் மதிய போசன இடைவேளை வரை மாத்திரமே நடைபெற்றது.

சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திமுத்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட்…

சீரற்ற காலநிலையால் போட்டி தாமதமாகியதில், காலை 9.45 இற்கு ஆரம்பமாகவிருந்த போட்டி 10.30 இற்கு ஆரம்பமாகியது. நேற்றைய ஆட்டநேர நிறைவில் 87 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், களமிறங்கிய இலங்கை அணி அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோரின் துடுப்பாட்டத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்தது.

மெதிவ்ஸ் சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், 49 ஓட்டங்களை பெற்றிருந்த திமுத் கருணாரத்ன தனது 23வது டெஸ்ட் அரைச் சதத்தை கடந்தார். கருணாரத்ன ஓட்டங்களை குவித்த நிலையிலும், மெதிவ்ஸ் 2 ஓட்டங்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ட்ரென்ட் போல்ட், பௌன்சர் பந்தின் மூலமாக மெதிவ்ஸை ஆட்டமிழக்கச் செய்ய, அதே ஓவரில் வந்த வேகத்தில் குசல் பெரேரா LBW முறையில் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிக்கப்பட, இலங்கை அணி 93 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

>>Photos: Sri Lanka vs New Zealand | 2nd Test – Day 2<<

குறித்த இரண்டு விக்கெட்டுகளின் பின்னர், ஜோடி சேர்ந்த திமுத் கருணாரத்ன மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் 37 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, திமுத் கருணாரத்ன 65 ஓட்டங்களுடன் டிம் சௌதியின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் நிரோஷன் டிக்வெல்ல ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தனன்ஜய டி சில்வா மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோர் களத்தில் நிற்க மதிய போசன இடைவேளை வழங்கப்பட்டது.

இந்த இடைவேளையின் போது, இலங்கை அணி 144 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஆனாலும், மதியபோன இடைவேளையில் மழை குறுக்கிட்டதால், போட்டி நிறுத்தப்பட்டது. அதேநேரம், போட்டியில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை தொடர்ந்ததால் இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

இரண்டாவது நாளான இன்று 29.3 ஓவர்கள் வீசப்பட்டுள்ளதுடன், இரண்டு நாட்களிலும் மொத்தமாக 66 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டுள்ளன. இதேவேளை, மூன்றாம் நாள் ஆட்டம் நாளை காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

Result


Sri Lanka
244/10 (90.2) & 122/10 (70.2)

New Zealand
431/6 (115)

Batsmen R B 4s 6s SR
Dimuth Karunaratne c BJ Watling b Tim Southee 65 165 6 0 39.39
Lahiru Thirimanne c Kane Williamson b William Somerville 2 35 0 0 5.71
Kusal Mendis c BJ Watling b Colin de Grandhomme 32 70 4 0 45.71
Angelo Mathews c BJ Watling b Trent Boult 2 29 0 0 6.90
Kusal Perera lbw b Trent Boult 0 4 0 0 0.00
Dhananjaya de Silva b Trent Boult 109 148 16 2 73.65
Niroshan Dickwella c BJ Watling b Tim Southee 0 3 0 0 0.00
Dilruwan Perera lbw b Ajaz Patel 13 54 1 0 24.07
Suranga Lakmal c BJ Watling b Tim Southee 10 24 1 0 41.67
Lasith Embuldeniya lbw b Tim Southee 0 2 0 0 0.00
Lahiru Kumara not out 5 11 0 0 45.45


Extras 6 (b 1 , lb 2 , nb 3, w 0, pen 0)
Total 244/10 (90.2 Overs, RR: 2.7)
Fall of Wickets 1-29 (14.4) Lahiru Thirimanne, 2-79 (32.3) Kusal Mendis, 3-93 (41.1) Angelo Mathews, 4-93 (41.5) Kusal Perera, 5-130 (57.3) Dimuth Karunaratne, 6-130 (57.6) Niroshan Dickwella, 7-171 (74.5) Dilruwan Perera, 8-214 (83.5) Suranga Lakmal, 9-224 (85.1) Lasith Embuldeniya, 10-244 (90.2) Dhananjaya de Silva,

Bowling O M R W Econ
Trent Boult 22.2 6 75 3 3.38
Tim Southee 29 7 63 4 2.17
Colin de Grandhomme 17 3 35 1 2.06
William Somerville 6 3 20 1 3.33
Ajaz Patel 16 4 48 1 3.00
Batsmen R B 4s 6s SR
Jeet Raval c Dhananjaya de Silva b Dilruwan Perera 0 9 0 0 0.00
Tom Latham lbw b Dilruwan Perera 154 251 15 0 61.35
Kane Williamson c Kusal Mendis b Lahiru Kumara 20 28 2 0 71.43
Ross Taylor c Dhananjaya de Silva b Lasith Embuldeniya 23 43 3 0 53.49
Henry Nicholls c Dhananjaya de Silva b Dilruwan Perera 15 46 0 0 32.61
BJ Watling not out 105 226 4 0 46.46
Colin de Grandhomme c Lahiru Kumara b Lasith Embuldeniya 83 77 5 5 107.79
Tim Southee not out 24 10 2 2 240.00


Extras 7 (b 0 , lb 4 , nb 0, w 3, pen 0)
Total 431/6 (115 Overs, RR: 3.75)
Fall of Wickets 1-1 (3.1) Jeet Raval, 2-34 (12.5) Kane Williamson, 3-84 (26.2) Ross Taylor, 4-126 (42.3) Henry Nicholls, 5-269 (85.3) Tom Latham, 6-382 (110.2) Colin de Grandhomme,

Bowling O M R W Econ
Dilruwan Perera 37 4 114 3 3.08
Dhananjaya de Silva 5 1 10 0 2.00
Suranga Lakmal 11 2 32 0 2.91
Lahiru Kumara 25 0 115 1 4.60
Lasith Embuldeniya 37 4 156 2 4.22


Batsmen R B 4s 6s SR
Lahiru Thirimanne run out (Ajaz Patel) 0 5 0 0 0.00
Kusal Perera c BJ Watling b Trent Boult 0 3 0 0 0.00
Kusal Mendis b William Somerville 20 63 3 0 31.75
Angelo Mathews c Ross Taylor b Colin de Grandhomme 7 30 0 0 23.33
Dhananjaya de Silva c Tim Southee b Ajaz Patel 1 19 0 0 5.26
Niroshan Dickwella c Tom Latham b Ajaz Patel 51 161 4 0 31.68
Dimuth Karunaratne lbw b Tim Southee 21 70 2 0 30.00
Dilruwan Perera c Ross Taylor b Tim Southee 0 12 0 0 0.00
Suranga Lakmal c Tom Latham b William Somerville 14 45 2 1 31.11
Lasith Embuldeniya c Kane Williamson b Trent Boult 5 11 0 0 45.45
Lahiru Kumara not out 0 3 0 0 0.00


Extras 3 (b 0 , lb 2 , nb 0, w 1, pen 0)
Total 122/10 (70.2 Overs, RR: 1.73)
Fall of Wickets 1-0 (0.5) Lahiru Thirimanne, 2-4 (2.2) Kusal Perera, 3-11 (11.3) Angelo Mathews, 4-22 (18.3) Dhananjaya de Silva, 5-32 (21.5) Kusal Mendis, 6-73 (43.5) Dimuth Karunaratne, 7-75 (47.4) Dilruwan Perera, 8-115 (65.3) Suranga Lakmal, 9-118 (69.3) Niroshan Dickwella, 10-122 (70.2) Lasith Embuldeniya,

Bowling O M R W Econ
Trent Boult 14.2 8 17 2 1.20
Tim Southee 12 6 15 2 1.25
Ajaz Patel 19 3 31 2 1.63
Colin de Grandhomme 4 1 8 1 2.00
William Somerville 21 6 49 2 2.33