இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி இந்த போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியிருந்தது.
முதல் போட்டியின் உத்வேகத்துடன் மீண்டும் நியூசிலாந்தை வீழ்த்துமா இலங்கை?
சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட்…
கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டி சீரற்ற காலநிலையால் தாமதமாகியது. எனினும், மதியபோசன இடைவேளை ஆட்டத்துக்கு முன்னர் எடுக்கப்பட்ட நிலையில், பிற்பகல் 1.40 மணிக்கு போட்டி ஆரம்பமானது. இலங்கை அணியில் அகில தனன்ஜயவுக்கு பதிலாக டில்ருவான் பெரேரா அழைக்கப்பட, நியூசிலாந்து அணியில் கொலின் டி கிரெண்டோம், மிச்சல் சென்ட்னருக்கு பதிலாக அழைக்கப்பட்டார்.
இலங்கை அணி
திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, லஹிரு குமார, சுரங்க லக்மால்
நியூசிலாந்து அணி
டொம் லேத்தம், ஜீட் ராவல், கேன் வில்லியம்சன் (தலைவர்), ரொஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோல்ஸ், பிஜே வெட்லிங், கொலின் டி கிரெண்டோம், டிம் சௌதி, ட்ரென்ட் போல்ட், வில் சமர்வில், அஜாஷ் பட்டேல்
வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சற்று சாதகமான இந்த மைதானத்தின் ஆடுகளத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதன்படி, களமிறங்கிய இலங்கை அணி திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்னே (2) ஆகியோரின் உதவியுடன் மதிக்கத்தக்க இணைப்பாட்டத்தை பெற்ற போதும், லஹிரு திரிமான்னே விக்கெட்டினை பறிகொடுத்தார்.
இலங்கை அணி 29 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். திமுத் கருணாரத்ன மற்றும் மெண்டிஸ் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்தனர். இந்தநிலையில், அணியானது 71 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்திருந்த போது, தேநீர் இடைவேளை வழங்கப்பட்டது.
Photos: Sri Lanka vs New Zealand | 2nd Test – Day 1
தேநீர் இடைவேளையின் பின்னர், மீண்டும் மழைக்குறுக்கிட்ட நிலையில், 30 நிமிடங்கள் போட்டி தாமதமாகியது. இதன் பின்னர் ஆரம்பித்த போட்டியில், குசல் மெண்டிஸ் 32 ஓட்டங்களை பெற்ற நிலையில், கொலின் டி கிரெண்டோமின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டை இழந்த இலங்கை அணி, மற்றுமொரு இணைப்பாட்டத்தை கட்டியெழுப்ப முயன்ற நிலையில், போட்டியானது போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டதுடன், முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், மெதிவ்ஸ் ஓட்டங்களின்றி களத்தில் உள்ளார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் வில் சமர்வில் மற்றும் கொலின் டி கிரெண்டோம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dimuth Karunaratne | c BJ Watling b Tim Southee | 65 | 165 | 6 | 0 | 39.39 |
Lahiru Thirimanne | c Kane Williamson b William Somerville | 2 | 35 | 0 | 0 | 5.71 |
Kusal Mendis | c BJ Watling b Colin de Grandhomme | 32 | 70 | 4 | 0 | 45.71 |
Angelo Mathews | c BJ Watling b Trent Boult | 2 | 29 | 0 | 0 | 6.90 |
Kusal Perera | lbw b Trent Boult | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Dhananjaya de Silva | b Trent Boult | 109 | 148 | 16 | 2 | 73.65 |
Niroshan Dickwella | c BJ Watling b Tim Southee | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Dilruwan Perera | lbw b Ajaz Patel | 13 | 54 | 1 | 0 | 24.07 |
Suranga Lakmal | c BJ Watling b Tim Southee | 10 | 24 | 1 | 0 | 41.67 |
Lasith Embuldeniya | lbw b Tim Southee | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Lahiru Kumara | not out | 5 | 11 | 0 | 0 | 45.45 |
Extras | 6 (b 1 , lb 2 , nb 3, w 0, pen 0) |
Total | 244/10 (90.2 Overs, RR: 2.7) |
Fall of Wickets | 1-29 (14.4) Lahiru Thirimanne, 2-79 (32.3) Kusal Mendis, 3-93 (41.1) Angelo Mathews, 4-93 (41.5) Kusal Perera, 5-130 (57.3) Dimuth Karunaratne, 6-130 (57.6) Niroshan Dickwella, 7-171 (74.5) Dilruwan Perera, 8-214 (83.5) Suranga Lakmal, 9-224 (85.1) Lasith Embuldeniya, 10-244 (90.2) Dhananjaya de Silva, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Trent Boult | 22.2 | 6 | 75 | 3 | 3.38 | |
Tim Southee | 29 | 7 | 63 | 4 | 2.17 | |
Colin de Grandhomme | 17 | 3 | 35 | 1 | 2.06 | |
William Somerville | 6 | 3 | 20 | 1 | 3.33 | |
Ajaz Patel | 16 | 4 | 48 | 1 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jeet Raval | c Dhananjaya de Silva b Dilruwan Perera | 0 | 9 | 0 | 0 | 0.00 |
Tom Latham | lbw b Dilruwan Perera | 154 | 251 | 15 | 0 | 61.35 |
Kane Williamson | c Kusal Mendis b Lahiru Kumara | 20 | 28 | 2 | 0 | 71.43 |
Ross Taylor | c Dhananjaya de Silva b Lasith Embuldeniya | 23 | 43 | 3 | 0 | 53.49 |
Henry Nicholls | c Dhananjaya de Silva b Dilruwan Perera | 15 | 46 | 0 | 0 | 32.61 |
BJ Watling | not out | 105 | 226 | 4 | 0 | 46.46 |
Colin de Grandhomme | c Lahiru Kumara b Lasith Embuldeniya | 83 | 77 | 5 | 5 | 107.79 |
Tim Southee | not out | 24 | 10 | 2 | 2 | 240.00 |
Extras | 7 (b 0 , lb 4 , nb 0, w 3, pen 0) |
Total | 431/6 (115 Overs, RR: 3.75) |
Fall of Wickets | 1-1 (3.1) Jeet Raval, 2-34 (12.5) Kane Williamson, 3-84 (26.2) Ross Taylor, 4-126 (42.3) Henry Nicholls, 5-269 (85.3) Tom Latham, 6-382 (110.2) Colin de Grandhomme, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilruwan Perera | 37 | 4 | 114 | 3 | 3.08 | |
Dhananjaya de Silva | 5 | 1 | 10 | 0 | 2.00 | |
Suranga Lakmal | 11 | 2 | 32 | 0 | 2.91 | |
Lahiru Kumara | 25 | 0 | 115 | 1 | 4.60 | |
Lasith Embuldeniya | 37 | 4 | 156 | 2 | 4.22 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lahiru Thirimanne | run out (Ajaz Patel) | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Kusal Perera | c BJ Watling b Trent Boult | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Kusal Mendis | b William Somerville | 20 | 63 | 3 | 0 | 31.75 |
Angelo Mathews | c Ross Taylor b Colin de Grandhomme | 7 | 30 | 0 | 0 | 23.33 |
Dhananjaya de Silva | c Tim Southee b Ajaz Patel | 1 | 19 | 0 | 0 | 5.26 |
Niroshan Dickwella | c Tom Latham b Ajaz Patel | 51 | 161 | 4 | 0 | 31.68 |
Dimuth Karunaratne | lbw b Tim Southee | 21 | 70 | 2 | 0 | 30.00 |
Dilruwan Perera | c Ross Taylor b Tim Southee | 0 | 12 | 0 | 0 | 0.00 |
Suranga Lakmal | c Tom Latham b William Somerville | 14 | 45 | 2 | 1 | 31.11 |
Lasith Embuldeniya | c Kane Williamson b Trent Boult | 5 | 11 | 0 | 0 | 45.45 |
Lahiru Kumara | not out | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 3 (b 0 , lb 2 , nb 0, w 1, pen 0) |
Total | 122/10 (70.2 Overs, RR: 1.73) |
Fall of Wickets | 1-0 (0.5) Lahiru Thirimanne, 2-4 (2.2) Kusal Perera, 3-11 (11.3) Angelo Mathews, 4-22 (18.3) Dhananjaya de Silva, 5-32 (21.5) Kusal Mendis, 6-73 (43.5) Dimuth Karunaratne, 7-75 (47.4) Dilruwan Perera, 8-115 (65.3) Suranga Lakmal, 9-118 (69.3) Niroshan Dickwella, 10-122 (70.2) Lasith Embuldeniya, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Trent Boult | 14.2 | 8 | 17 | 2 | 1.20 | |
Tim Southee | 12 | 6 | 15 | 2 | 1.25 | |
Ajaz Patel | 19 | 3 | 31 | 2 | 1.63 | |
Colin de Grandhomme | 4 | 1 | 8 | 1 | 2.00 | |
William Somerville | 21 | 6 | 49 | 2 | 2.33 |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<