இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர நிறைவில், நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை பெற்றுள்ளது. இன்றைய ஆட்டநேர நிறைவுக்கு 6 ஓவர்கள் மீதமிருந்த போதும், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்ட டிக்வெல்ல, லக்மால்
நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும்…
போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 249 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், தங்களுடைய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 227 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இவ்வாறான நிலையில், இன்றைய தினம் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி மதியபோசன இடைவேளைக்கு முன்னர் சகல விக்கெட்டுகளையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நேற்றைய தினம் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சுரங்க லக்மால் 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், நிரோஷன் டிக்வெல்ல தனது 12வது டெஸ்ட் அரைச் சதத்தை கடந்து 61 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர், 18 ஓட்டங்கள் பின்னடைவிலிருந்து தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி, தங்கள் முதல் விக்கெட்டினை 8 ஓட்டங்களுக்கு இழந்தது. ஜீட் ராவல் 4 ஓட்டங்களுடன் தனன்ஜய டி சில்வாவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மதியபோசன இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 18 ஓட்டங்களை பெற்றிருந்தது.
150 விக்கெட்டுக்களைக் கைப்பற்றுவதே எனது இலக்கு – சுரங்க லக்மால்
ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக வருவதற்கு பல கஷ்டங்களையும், இன்னல்களையும் சந்திக்க…
மதியபோசன இடைவேளையின் பின்னர் ஆரம்பித்த இந்தப் போட்டியில் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். குறிப்பாக லசித் எம்புல்தெனிய, கேன் வில்லியம்சன் மற்றும் ரொஸ் டெய்லர் ஆகியோரை தனது அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.
தொடர்ந்து பிஜே வெட்லிங் மற்றும் ஹென்ரி நிக்கோல்ஸ் ஆகியோர் 56 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை பெற்றிருந்த போதும், தேநீர் இடைவேளைக்கு முன்னர், நிக்கோல்ஸ் (26) மற்றும் சென்ட்னர் (12) ஆகியோரின் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட நியூசிலாந்து அணி 124 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
நியூசிலாந்து அணி நெருக்கடியை சந்தித்திருந்த தருணத்தில் களமிறங்கியிருந்த டிம் சௌதி, பிஜே வெட்லிங்குடன் இணைந்து இலங்கை அணிக்கு சவாலை கொடுத்தார். இதில், பிஜே வெட்லிங் தன்னுடைய 17வது டெஸ்ட் அரைச்சதத்தை கடந்தார். தொடர்ந்து இவர்கள் இருவரும் 54 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, லசித் எம்புல்தெனியவின் பந்துவீச்சில் டிம் சௌதி 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
>>Photos: Sri Lanka vs New Zealand | 1st Test – Day 3<<
இதனையடுத்து களமிறங்கிய வில் சமர்வில் தனது விக்கெட்டினை பாதுகாத்துக்கொண்டு துடுப்பெடுத்தாட, வெட்லிங் ஆட்டத்தை நகர்த்தினார். எனினும், நியூசிலாந்து அணி 195 ஓட்டங்களுக்கு 7 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக மூன்றாவது நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதன்படி நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் கைவசமிருக்க இலங்கை அணியை விட 177 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி சார்பாக பிஜே வெட்லிங் 63 ஓட்டங்களுடனும், வில் சமர்வில் 5 ஓட்டங்களுடனும், ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய 71 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், தனன்ஜய டி சில்வா 2 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தியுள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினம் போட்டி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்றதால், நான்காம் நாள் ஆட்டமானது (நாளை காலை) 9.45 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
போட்டி சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jeet Raval | c Dhananjaya de Silva b Akila Dananjaya | 33 | 83 | 3 | 0 | 39.76 |
Tom Latham | c Niroshan Dickwella b Akila Dananjaya | 30 | 88 | 3 | 0 | 34.09 |
Kane Williamson | c Dimuth Karunaratne b Akila Dananjaya | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Ross Taylor | c Niroshan Dickwella b Suranga Lakmal | 86 | 132 | 6 | 0 | 65.15 |
Henry Nicholls | lbw b Akila Dananjaya | 42 | 78 | 2 | 0 | 53.85 |
BJ Watling | lbw b Akila Dananjaya | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Mitchell Santner | lbw b Suranga Lakmal | 13 | 42 | 1 | 0 | 30.95 |
Tim Southee | run out (Dhananjaya de Silva) | 14 | 19 | 0 | 1 | 73.68 |
William Somerville | not out | 9 | 28 | 1 | 0 | 32.14 |
Trent Boult | c Kusal Perera b Suranga Lakmal | 18 | 22 | 1 | 1 | 81.82 |
Ajaz Patel | lbw b Suranga Lakmal | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 3 (b 0 , lb 2 , nb 1, w 0, pen 0) |
Total | 249/10 (83.2 Overs, RR: 2.99) |
Fall of Wickets | 1-64 (26.3) Tom Latham, 2-64 (26.6) Kane Williamson, 3-71 (30.2) Jeet Raval, 4-171 (58.2) Henry Nicholls, 5-179 (60.2) BJ Watling, 6-205 (69.1) Ross Taylor, 7-216 (73.5) Mitchell Santner, 8-222 (74.6) Tim Southee, 9-249 (83.1) Trent Boult, 10-249 (83.2) Ajaz Patel, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 15.2 | 5 | 29 | 4 | 1.91 | |
Lahiru Kumara | 10 | 1 | 37 | 0 | 3.70 | |
Akila Dananjaya | 30 | 3 | 80 | 5 | 2.67 | |
Dhananjaya de Silva | 6 | 0 | 20 | 0 | 3.33 | |
Lasith Embuldeniya | 22 | 1 | 81 | 0 | 3.68 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lahiru Thirimanne | st BJ Watling b Ajaz Patel | 10 | 36 | 1 | 0 | 27.78 |
Dimuth Karunaratne | lbw b Ajaz Patel | 39 | 73 | 4 | 0 | 53.42 |
Kusal Mendis | c Ross Taylor b Ajaz Patel | 53 | 89 | 7 | 1 | 59.55 |
Angelo Mathews | c Ross Taylor b Ajaz Patel | 50 | 98 | 7 | 1 | 51.02 |
Kusal Perera | c Mitchell Santner b Trent Boult | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Dhananjaya de Silva | c & b Ajaz Patel | 5 | 19 | 1 | 0 | 26.32 |
Niroshan Dickwella | c Kane Williamson b William Somerville | 61 | 109 | 3 | 0 | 55.96 |
Akila Dananjaya | c Ross Taylor b William Somerville | 0 | 8 | 0 | 0 | 0.00 |
Suranga Lakmal | b Trent Boult | 40 | 98 | 3 | 2 | 40.82 |
Lasith Embuldeniya | lbw b William Somerville | 5 | 17 | 1 | 0 | 29.41 |
Lahiru Kumara | not out | 0 | 9 | 0 | 0 | 0.00 |
Extras | 3 (b 1 , lb 1 , nb 0, w 1, pen 0) |
Total | 267/10 (93.2 Overs, RR: 2.86) |
Fall of Wickets | 1-27 (10.6) Lahiru Thirimanne, 2-66 (22.5) Dimuth Karunaratne, 3-143 (46.5) Kusal Mendis, 4-144 (47.3) Kusal Perera, 5-155 (52.2) Dhananjaya de Silva, 6-158 (54.1) Angelo Mathews, 7-161 (55.5) Akila Dananjaya, 8-242 (84.4) Suranga Lakmal, 9-262 (91.1) Niroshan Dickwella, 10-267 (93.2) Lasith Embuldeniya, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Trent Boult | 20 | 4 | 45 | 2 | 2.25 | |
Tim Southee | 7 | 3 | 17 | 0 | 2.43 | |
William Somerville | 22.2 | 3 | 83 | 3 | 3.74 | |
Ajaz Patel | 33 | 6 | 89 | 5 | 2.70 | |
Mitchell Santner | 11 | 0 | 31 | 0 | 2.82 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jeet Raval | c Dimuth Karunaratne b Dhananjaya de Silva | 4 | 20 | 0 | 0 | 20.00 |
Tom Latham | c Lahiru Thirimanne b Akila Dananjaya | 45 | 81 | 2 | 1 | 55.56 |
Kane Williamson | c Kusal Perera b Lasith Embuldeniya | 4 | 25 | 0 | 0 | 16.00 |
Ross Taylor | c Dhananjaya de Silva b Lasith Embuldeniya | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Henry Nicholls | c Kusal Mendis b Dhananjaya de Silva | 26 | 71 | 2 | 0 | 36.62 |
BJ Watling | c Niroshan Dickwella b Lahiru Kumara | 77 | 173 | 6 | 0 | 44.51 |
Mitchell Santner | c Suranga Lakmal b Lasith Embuldeniya | 12 | 35 | 0 | 0 | 34.29 |
Tim Southee | st Niroshan Dickwella b Lasith Embuldeniya | 23 | 62 | 1 | 0 | 37.10 |
William Somerville | not out | 40 | 118 | 2 | 0 | 33.90 |
Trent Boult | c Dhananjaya de Silva b Lahiru Kumara | 26 | 25 | 2 | 1 | 104.00 |
Ajaz Patel | lbw b Dhananjaya de Silva | 14 | 23 | 1 | 0 | 60.87 |
Extras | 11 (b 4 , lb 5 , nb 2, w 0, pen 0) |
Total | 285/10 (106 Overs, RR: 2.69) |
Fall of Wickets | 1-8 (7.4) Jeet Raval, 2-20 (14.4) Kane Williamson, 3-25 (16.3) Ross Taylor, 4-81 (27.5) Tom Latham, 5-98 (39.2) Henry Nicholls, 6-124 (49.3) Mitchell Santner, 7-178 (69.5) Tim Southee, 8-224 (90.3) BJ Watling, 9-260 (98.2) Trent Boult, 10-285 (105.6) Ajaz Patel, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 15 | 2 | 37 | 0 | 2.47 | |
Akila Dananjaya | 32 | 4 | 84 | 1 | 2.62 | |
Dhananjaya de Silva | 12 | 3 | 25 | 3 | 2.08 | |
Lasith Embuldeniya | 37 | 4 | 99 | 4 | 2.68 | |
Lahiru Kumara | 10 | 0 | 31 | 2 | 3.10 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dimuth Karunaratne | c BJ Watling b Tim Southee | 122 | 243 | 6 | 1 | 50.21 |
Lahiru Thirimanne | lbw b William Somerville | 64 | 163 | 4 | 0 | 39.26 |
Kusal Mendis | c Jeet Raval b Ajaz Patel | 10 | 6 | 1 | 1 | 166.67 |
Angelo Mathews | not out | 28 | 73 | 2 | 0 | 38.36 |
Kusal Perera | c Mitchell Santner b Trent Boult | 23 | 19 | 5 | 0 | 121.05 |
Dhananjaya de Silva | not out | 14 | 13 | 3 | 0 | 107.69 |
Extras | 7 (b 6 , lb 1 , nb 0, w 0, pen 0) |
Total | 268/4 (86.1 Overs, RR: 3.11) |
Fall of Wickets | 1-161 (60.2) Lahiru Thirimanne, 2-174 (61.5) Kusal Mendis, 3-218 (76.1) Dimuth Karunaratne, 4-250 (82.2) Kusal Perera, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Trent Boult | 9.1 | 1 | 34 | 1 | 3.74 | |
Tim Southee | 12 | 2 | 33 | 1 | 2.75 | |
William Somerville | 31 | 6 | 73 | 1 | 2.35 | |
Ajaz Patel | 18 | 0 | 74 | 1 | 4.11 | |
Mitchell Santner | 13 | 2 | 38 | 0 | 2.92 | |
Kane Williamson | 3 | 0 | 9 | 0 | 3.00 |