காலி ஆடுகளத்தில் 200 ஓட்டங்களைத் தாண்டிய எந்த ஓட்டமும் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பாக இருக்கலாம் என்று நியூசிலாந்து அணியின் டொம் லேதம் குறிப்பிட்டார்.
காலி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகள் கைவசம் இருக்க 177 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது. பி.ஜே. வொட்லிங் மற்றும் வில்லியம் சொமர்வில்லே ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர். இரண்டாவது புதிய பந்து பெறுவதற்கு இன்னும் நான்கு ஓவர்களே எஞ்சியுள்ளன.
200 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களை எதிர்பார்க்கிறேன், எமக்கு அதற்கு அதிக தூரம் இல்லை என்று மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவுக்கு பின்னர் டொம் லேதம் குறிப்பிட்டார். நாம் இன்று (16) செய்தது போல் நாளைக் காலையில் திரும்பி இணைப்பாட்டம் ஒன்றை பெறுவது தான் முக்கியமானது. டிம் சௌதி போன்று (வொட்லினுடன் இணைந்து அவர் ஏழாவது விக்கெட்டுக்கு 54 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்றார்) சொமர்வில்லேவும் பி.ஜே. உடன் சேர்ந்து இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும். பி.ஜே. இன்று சிறப்பாக துடுப்பாடினார். முடியுமானவரை மேலும் ஓட்டங்களை எம்மால் சேர்க்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம். நான்காவது இன்னிங்ஸில் வெற்றி இலக்கை அடைவது எவ்வளவு கடினம் என்பது எமக்குத் தெரியும்.
இளம் லசித்தின் சுழலை தாண்டியும் வலுவடைந்த நியூசிலாந்து
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு…
இந்த ஆடுகளத்தில் ஆட்டத்தை பிடித்துக்கொண்டால் ஓட்டங்களை குவிக்க முடியும். ஆனால் இங்கே எல்லாம் விரைவாக மாறிவிடும். இந்த ஆடுகளத்தில் எந்த மாற்றமும் இல்லை. மூன்று இன்னிங்சுகள் முழுவதும் விக்கெட்டுகள் வேகமாக விழுகின்றன. இலங்கை அணிக்கும் எம்மால் அழுத்தம் கொடுக்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம். ஆடுகளம் தொடர்ந்து மோசமடைவதோடு சுழல் பந்துவீச்சாளர்கள் செயற்பட ஆரம்பிப்பார்கள்” என்று டொம் லேதம் குறிப்பிட்டார்.
காலி மைதானத்தில் நான்காவது இன்னிங்ஸில் வெற்றிகரமாக எட்டப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் 3 விக்கெட்டுக்கு 99 ஓட்டங்களாகும். எனினும் இந்த எண்ணிக்கை தவறான கணிப்பை தருவதாக உள்ளது. ஏனெனில் இங்கு பெரிய அளவிலான நான்காவது இன்னிங்ஸ் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில்லை. இங்கு அணிகள் ஒன்பது தடவைகள் நான்காவது இன்னிங்ஸுக்கு 200 இற்கும் அதிக ஓட்டங்களை பெற்ற போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<