நியூசிலாந்து அணியின் எஞ்சிய மூன்று விக்கெட்டுக்களையும் விரைவாகக் கைப்பற்றி, அவர்களை 225 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தினால் நிச்சயம் இந்த டெஸ்ட் போட்டியில் எம்மால் வெற்றிபெற முடியும் என இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரான நிரோஷன் டிக்வெல்ல தெரிவித்தார்.
காலியில் நடைபெற்று வருகின்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று (16) நிறைவுக்கு வந்தது.
இளம் லசித்தின் சுழலை தாண்டியும் வலுவடைந்த நியூசிலாந்து
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு…
இதில் தமது முதல் இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களைப் பெற்று நியூசிலாந்து அணியை விட 18 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
மூன்றாவது நாள் ஆட்டத்தில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த விக்கெட் காப்பாளரான நிரோஷன் டிக்வெல்ல 61 ஓட்டங்களையும், சுரங்க லக்மால் 40 ஓட்டங்களையும் எடுத்து வலுச்சேர்த்தனர்.
இந்த நிலையில், நேற்றைய போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நிரோஷன் டிக்வெல்ல இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் சாதகமாக உருவாகிவிட்டதா என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது,
“இந்த ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளது. இதற்கு முன் காலி ஆடுகளத்தைவிட இந்த ஆடுகளம் சற்று வித்தியாசமாக காணப்படுகின்றது. 225 என்ற ஓட்ட எண்ணிக்கையை துரத்தியடிக்க முடியும் என நான் நினைக்கிறேன்.
உண்மையில் காலி ஆடுகளத்தில் துடுப்பெடுத்தாடுவது என்பது இலகுவான விடயமல்ல. ஆனாலும், எமது துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்புடன் விளையாடுவார்கள் என நம்புகிறேன். இதற்கு அணியில் உள்ள அனைத்து வீரர்களும் பூரண பங்களிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
நாங்கள் 160 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்த போது சுரங்க லக்மாலுடன் ஜோடி சேர்ந்து விளையாடினேன். அப்போது அணிக்காக ஓட்டங்களைக் குவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் நான் இருந்தேன்.
எனவே சுரங்க லக்மாலுடன் சேர்ந்து நிதானமாக துடுப்பெடுத்தாடி 80 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக் கொண்டோம். இதனால் அவர்களுடைய ஓட்ட எண்ணிக்கையவிட முன்னிலை பெறவும் எம்மால் முடிந்தது.
விளையாடுவதற்கு இது கடினமான ஆடுகளம் அல்ல. அதேபோல அணியில் உள்ள அனைவரும் துடுப்பாடக்கூடிய திறன் படைத்தவர்கள். பொதுவான சுழலுக்கு சாதகமான ஆடுகளம் தான் உள்ளது. ஆனாலும், நியூசிலாந்து அணியின் எஞ்சிய விக்கெட்டுக்களை குறைந்த ஓட்டங்களுக்கு கைப்பற்றுவதே எமது குறிக்கோளாக உள்ளது என தெரிவித்தார்.
200 இற்கு மேற்பட்ட ஓட்டங்களை பெற்றால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியும் – டொம் லேதம்
காலி ஆடுகளத்தில் 200 ஓட்டங்களைத்….
காலி ஆடுகளத்தில் 99 ஓட்டங்களைத் தான் அதிகபட்சமாக துரத்திடியத்து வெற்றி பெற்றுள்ள இந்த தருணத்தில், எவ்வாறு அந்த சவாலுக்கு முகங்கொடுக்கப் போகின்றீர்கள் என்ற கேள்விக்கு நிரோஷன் டிக்வெல்ல பதிலளிக்கையில்,
“இது கடந்த காலங்களில் இடம்பெற்றாலும், நாங்கள் வேறுபட்ட அணிகளுடன், வெவ்வேறு வீரர்களுடன், அதுவும் 2000 ஆம் ஆண்டுக்கு முன் இவ்வாறான முடிவொன்றைப் பெற்றுக் கொண்டிருக்கலாம்.
ஆனால், தற்போது அந்த நிலைமைகள் மாறிவிட்டது. நாங்கள் வித்தியாசமான அணிகளுடன் அந்தந்த நிலைமைகளுக்கு ஏற்ப விளையாட வேண்டும்.
எனினும், தற்போதுள்ள அணியுடன் ஒப்பிடுகையில் எம்மால் அந்த இலக்கை அடைவது கடினமாக இருக்காது. அதேபோல இந்த ஆடுகளம் துடுப்பெடுத்தாடுவதற்கு சாதகமான நிலைமையில் உள்ளது” என தெரிவித்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<