சுற்றுலா நியூசிலாந்து மற்று இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் T20 போட்டியில் அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயித்திருந்த 175 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நியூசிலாந்து அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
மாலிங்க தலைமையிலான இளம் அணி வெற்றி வாகை சூடுமா?
சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள்…
அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்துக்காக தங்களுடைய அணிகளை தயார்செய்துக்கொள்ளும் பொருட்டு இரண்டு அணிகளும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. இதில், இலங்கை அணி சார்பில், வனிந்து ஹசரங்க T20 போட்டிகளில் அறிமுகமாகியிருந்தார்.
இதன்படி, ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் லசித் மாலிங்க முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.
முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததன்படி, களமிறங்கிய இலங்கை அணி குசல் மெண்டிஸின் வேகமான ஓட்டக்குவிப்பு மற்றும் நிரோஷன் டிக்வெல்ல, தசுன் ஷானக மற்றும் இறுதியில் வருகைதந்து அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இசுரு உதான ஆகியோரது சிறந்த பங்களிப்பால் 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குசல் மெண்டிஸ் ஆட்டத்தை வேகமாக ஆரம்பித்து, பின்னர் மிகச் சிறந்த ஓட்ட வேகத்துடன் ஆட்டத்தை நகர்த்தியிருந்தார். 5ஆவது T20 அரைச் சதத்தை கடந்த இவர், T20 போட்டிகளில் தனது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக 79 ஓட்டங்களை பெற்றார். மறுமுனையில், நிரோஷன் டிக்வெல்ல 33 ஓட்டங்களையும், தசுன் ஷானக 17 ஓட்டங்களையும் பெற, இன்னிங்ஸின் இறுதி 3 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடங்கலாக இசுரு உதான 15 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் அணித் தலைவர் டிம் சௌத்தி 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், மிச்சல் சென்ட்னர் 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மூவரை மிக விரைவில் இழந்தும், ரொஸ் டெய்லர் மற்றும் கொலின் டி கிரெண்டோம் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டத்தால், 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.
நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கொலின் மன்ரோ (0) மற்றும் மார்டின் கப்டில் (11) ஆகியோர் முதல் 6 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். இதனைத் தெடர்ந்து டிம் செய்பர்ட் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
எனினும், இதற்கு அடுத்தபடியாக ஜோடி சேர்ந்த கொலின் டி கிரெண்டோம் மற்றும் ரொஸ் டெய்லர் ஆகியோர் வேகமாக ஓட்டங்களை குவித்தனர். இவர்கள் இருவரும் அதிரடியாக 4ஆவது விக்கெட்டுக்காக 79 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். எனினும், லசித் மாலிங்க கொலின் டி கிரெண்டோமின் விக்கெட்டினை விழ்த்தி, T20 போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டினை (99) வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார்.
>> Photo Album – Sri Lanka vs New Zealand | 1st T20I <<
இதனைத் தொடர்ந்து ரொஸ் டெய்லர் மற்றும் டார்லி மிச்சல் ஆகியோர் இணைந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல, அறிமுக வீரர் வனிந்து ஹசரங்க, ரொஸ் டெய்லரை (48) LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். இவரின் ஆட்டமிழப்புடன் ஆட்டத்தில் மழைக்குறுக்கிட்டு மீண்டும் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
எனினும், மிச்சல் சென்ட்னர் மற்றும் டார்லி மிச்சல் ஆகியோரின் இணைப்பாட்டம் நியூசிலாந்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிச்சல் சென்ட்னர் 14 ஓட்டங்களையும், டார்லி மிச்சல் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.
இவ்வாறு வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளதுடன், இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது T20 போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி இதேமைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kusal Mendis | c Martin Guptill b Tim Southee | 79 | 53 | 8 | 2 | 149.06 |
Kusal Perera | c Colin de Grandhomme b Tim Southee | 11 | 10 | 2 | 0 | 110.00 |
Avishka Fernando | st Tim Seifert ( b Mitchell Santner | 10 | 17 | 0 | 0 | 58.82 |
Niroshan Dickwella | run out (Tim Seifert () | 33 | 25 | 2 | 0 | 132.00 |
Dasun Shanaka | not out | 17 | 12 | 0 | 1 | 141.67 |
Isuru Udana | not out | 15 | 3 | 0 | 2 | 500.00 |
Extras | 9 (b 1 , lb 2 , nb 0, w 6, pen 0) |
Total | 174/4 (20 Overs, RR: 8.7) |
Fall of Wickets | 1-41 (4.3) Kusal Perera, 2-68 (9.1) Avishka Fernando, 3-131 (16.1) Kusal Mendis, 4-159 (19.3) Niroshan Dickwella, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tim Southee | 4 | 0 | 20 | 2 | 5.00 | |
Seth Rance | 4 | 0 | 58 | 0 | 14.50 | |
Scott Kuggeleijn | 2 | 0 | 17 | 0 | 8.50 | |
Mitchell Santner | 4 | 0 | 22 | 1 | 5.50 | |
Ish Sodhi | 3 | 0 | 23 | 0 | 7.67 | |
Colin de Grandhomme | 3 | 0 | 31 | 0 | 10.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Martin Guptill | c Dasun Shanaka b Akila Dananjaya | 11 | 12 | 1 | 0 | 91.67 |
Colin Munro | b Lasith Malinga | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Tim Seifert ( | c Kusal Perera b Wanindu Hasaranga | 15 | 21 | 0 | 0 | 71.43 |
Colin de Grandhomme | b Lasith Malinga | 44 | 28 | 4 | 2 | 157.14 |
Ross Taylor | lbw b Wanindu Hasaranga | 48 | 29 | 3 | 2 | 165.52 |
Daryl Mitchell | not out | 25 | 19 | 0 | 2 | 131.58 |
Mitchell Santner | not out | 14 | 8 | 0 | 1 | 175.00 |
Extras | 18 (b 1 , lb 8 , nb 1, w 8, pen 0) |
Total | 175/5 (19.3 Overs, RR: 8.97) |
Fall of Wickets | 1-1 (0.4) Colin Munro, 2-18 (3.2) Martin Guptill, 3-39 (7.2) Tim Seifert (, 4-118 (13.3) Colin de Grandhomme, 5-144 (16.5) Ross Taylor, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lasith Malinga | 4 | 0 | 23 | 2 | 5.75 | |
Akila Dananjaya | 3 | 0 | 30 | 1 | 10.00 | |
Shehan Jayasuriya | 1 | 0 | 10 | 0 | 10.00 | |
Isuru Udana | 3.3 | 0 | 38 | 0 | 11.52 | |
Kasun Rajitha | 4 | 0 | 44 | 0 | 11.00 | |
Wanindu Hasaranga | 4 | 0 | 21 | 2 | 5.25 |
முடிவு – நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி