இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள ஒரு டி20 போட்டிக்கான நியூஸிலாந்து அணி குழாம் இன்று (04) பெயரிடப்பட்டுள்ளது. 9 மாதங்களுக்கு பிறகு மிச்சட் சேன்ட்னர் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் திரும்பியுள்ள அதேவேளை, கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ஜேம்ஸ் நீஷமும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.
தொடரை தக்க வைக்க இலங்கையின் போராட்டம் எவ்வாறு அமையும்?
இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஓரு நாள் ….
நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடி வருகின்றது. டெஸ்ட் தொடர் நியூஸிலாந்து வசமான நிலையில் ஒருநாள் தொடர் நேற்று (03) ஆரம்பமானது.
முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது. மீதியாக இருக்கின்ற இரண்டு போட்டிகளும் இலங்கை அணிக்கு மிக முக்கியமான போட்டியாகளாக அமைந்துள்ளன.
இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையினான சுற்றுத்தொடரின் இறுதி தொடரான டி20 தொடர் எதிர்வரும் 11ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) அக்லாந்தில் நடைபெறவுள்ளது. இது ஒரேயொரு போட்டியை கொண்ட தொடராகவே நடைபெறவுள்ளது.
அதன் அடிப்படையில் குறித்த டி20 போட்டிக்கான நியூஸிலாந்து அணியின் 13 பேர் கொண்ட குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் இன்று (04) அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியின் தலைவர் கேன் வில்லியம்சனிற்கு குறித்த டி20 போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக டி20 அணியின் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி செயற்படவுள்ளார்.
ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் ஒருநாள் அணியில் இணைக்கப்பட்டு நேற்று (03) நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் வெறுமென 13 பந்துகளுக்கு 47 ஓட்டங்களை குவித்த ஜேம்ஸ் நீஷம் டி20 அணியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
மேலும், கடந்த மார்ச் மாதம் உபாதை காரணமாக முழங்கால் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதிலிருந்து மீண்டு நியூஸிலாந்தில் நடைபெறும் டி20 தொடரான ‘பேகர் கிங்க் சுப்பர் ஸ்மேஷ்‘ தொடரில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய மிச்சல் சேன்ட்னர் மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியுள்ளார்.
அணியின் விக்கெட் காப்பாளராக நேற்றய தினம் (03) கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடிய டீம் செய்பர்ட்டும் குழாமில் பெயரிடப்பட்டுள்ளார்.
ஒரு நாள் அணியில் இடம்பிடிக்காத வீரர்களில் ஸ்கொட் குக்கீலின்ஜின், கிலேன் பிலிப்ஸ், செத் ரென்ஸ், மிட்சல் சேன்ட்னர் ஆகியோர் டி20 அணியில் புதிய வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு எப்படி இருந்தது?
அடிக்கடி மாறிய அணித்தலைவர்கள், மிகவும் மோசமான ….
டி20 குழாம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தேர்விக்குழுத் தலைவர் கெவின் லார்சன் தெரிவிக்கையில்,
‘முன்னர் நடைபெற்றிருந்த பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிளுடனான தொடரின் போது டிம் சௌதி சிறப்பாக செயற்பட்டிருந்தார். தற்போது புதிய முகங்களுடன் அவர் அணித்தலைவராக செயற்படவுள்ளார்.
மேலும் பி.கே சுப்பர் ஸ்மேஷ் தொடரில் நைட்ஸ் அணிக்காக விளையாடி திறமைகளை வெளிப்படுத்திய மிட்சல் சேன்ட்னரின் சர்வதேச கிரிக்கெட் வருகையை நாம் வரவேற்கின்றோம்‘ என தெரிவித்தார்.
பெயரிடப்பட்டுள்ள டி20 குழாம்
டிம் சௌதி (அணித்தலைவர்), லொக்கி பேர்கசன், மார்ட்டின் குப்டில், ஸ்கொட் குக்கீலின்ஜின், கொலின் மன்ரோ, ஜேம்ஸ் நீஷம், ஹென்ரி நிக்கோலஸ், கிலேன் பிலிப்ஸ், செத் ரென்ஸ், மிட்சல் சேன்ட்னர், டீம் செய்பர்ட், இஷ் சோதி, ரோஸ் டெய்லர்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<