இலங்கைக்கு எதிரான நியுசிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு

866
Image courtesy - ICC Cricket

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வைத்து பாகிஸ்தானை 2-1 என வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவுசெய்த நியுசிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 13 பேர் அடங்கிய அணிக்குழாத்தை இன்று (10) அறிவித்துள்ளது.

நியூசிலாந்து செல்லும் இலங்கை அணியில் முக்கிய மாற்றங்கள்

நியூசிலாந்து அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள..

நியுசிலாந்து அணி அறிவித்துள்ள 13 பேர் கொண்ட குழாத்தில், சுழற்பந்து வீச்சாளராக அஜாஸ் பட்டேல் மாத்திரம் களமிறக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 7 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் வில்லியம் சோமர்வில்லி நீக்கப்பட்டுள்ளார். இதன்படி இலங்கை அணிக்கு எதிரான குழாத்தில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நியுசிலாந்து குழாத்தில், புதுமுக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான வில் யங் அணிக்குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். இந்திய A அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற நான்கு நாள் போட்டியில், நியூசிலாந்து அணிசார்பில் வில் யங் மாத்திரமே சதம் விளாசியிருந்தார்.

அதுமாத்திரமின்றி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தான் A அணிக்கு எதிராக நடைபெற்ற, நான்கு நாள் போட்டித் தொடரிலும் நியுசிலாந்து அணிசார்பில் இவர் மாத்திரமே சதம் விளாசியிருந்தார். வில் யங் இதுவரையில், 66 முதற்தர போட்டிகளில் விளையாடி 6 சதம் மற்றும் 27 அரைச்சதங்கள் அடங்கலாக 4221 ஓட்டங்களை குவித்துள்ளார். இவரது ஓட்ட சராசரி 41 என்பதும், இவரது தேர்வுக்கான முக்கிய காரணமாகும்.

தனுஷ்க குணதிலக்கவின் அதிரடியுடன் இலங்கை முன்னேற்றம்

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு..

இதேவேளை, பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தமாக ஆறு இன்னிங்ஸ்களில் 99 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ள டொம் லத்தாமிற்கு அணிக்குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த மெட் ஹென்ரிக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மெட் ஹென்ரி இரண்டு குழாம்களிலும் இணைக்கப்பட்ட போதும், ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மாத்திரமே விளையாடியிருந்தார்.

இவர்களுடன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிரகாசித்திருந்த கேன் வில்லியம்சன், வெட்லிங், ரொஸ் டெய்லர் ஆகிய துடுப்பாட்ட வீரர்களும், ட்ரென்ட் போல்ட், டீம் சௌதி மற்றும் நெயில் வெங்கர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் நியுசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளனர்.

சுற்றுலா இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு T20I போட்டிகள் அடங்கிய தொடர் எதிர்வரும் 15ம் திகதி டெஸ்ட் தொடருடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிவிக்கப்பட்டுள்ள நியுசிலாந்து டெஸ்ட் குழாம்

கேன் வில்லியம்சன் (தலைவர்), டொம் லத்தாம், ஜீட் ராவல், ரொஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோல்ஸ், கொலின் டி கிரெண்டோம், பி.ஜே.வெட்லிங், வில் யங், டீம் சௌதி,  மெட் ஹென்ரி, அஜாஷ் பட்டேல், ட்ரெண்ட் போல்ட், நெயில் வெங்கர்  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<