மாற்றங்களின்றி இலங்கையினை எதிர்கொள்ளும் நியூசிலாந்து டெஸ்ட் குழாம்

313
New Zealand name same 13 who faced England for Sri Lanka Tests

இலங்கை கிரிக்கெட் அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 13 பேர் அடங்கிய நியூசிலாந்து அணியின் டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கே ஒருநாள், T20I தொடர்களுக்கு முன்னதாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது.

>> புதுமுக வீரர்களுடன் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் பங்களாதேஷ் T20 அணி

ஐ.சி.சி. இன் டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியானது இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடிய அதே குழாமாக மாற்றங்களின்றி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனினும் காயத்திற்கு உள்ளான வேகப்பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன், அறிமுக வேகப்பந்துவீச்சாளர் ஜேகோப் டேபி மற்றும் சுழல்பந்துவீச்சாளர் இஸ் ஷோதி ஆகியோருக்கு இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.

இதேவேளை அறிவிக்கப்பட்டிருக்கும் நியூசிலாந்து குழாத்தில் நம்பிக்கைகுரிய துடுப்பாட்டவீரர்களாக கேன் வில்லியம்சன், டொம் லேதம் மற்றும் ஹென்ரி நிக்கோல்ஸ் ஆகிய வீரர்கள் காணப்பட டேவொன் கொன்வோய் மற்றும் வில் யங் ஆகியோர் அணிக்கு மேலதிக பெறுமதி சேர்க்கின்றனர்.

பந்துவீச்சுத்துறையினை நோக்கும் போது மைக்கல் பிரஸ்வெல் பிரதான சுழல்பந்துவீச்சாளராக காணப்பட நெயில் வெக்னர் அணித்தலைவர் டிம் சௌத்தியுடன் இணைந்து அணிக்கு வேகப்பந்துவீச்சு துறையில் பலம் சேர்க்கின்றார்.

>> பங்களாதேஷ் அணிக்கு ஹதுருசிங்கவின் புதிய திட்டம்

நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 09ஆம் திகதி கிறைஸ்ட்சேர்ச் நகரிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் மாதம் 17ஆம் திகதி வெலிங்டன் நகரிலும் இடம்பெறுகின்றது.

இதேவேளை நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் இலங்கை கிரிக்கெட் அணிக்கு, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வாய்ப்பினை தீர்மானிக்க முக்கியத்துவம் கொண்டதாக அமைவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நியூசிலாந்து டெஸ்ட் குழாம் – டிம் சௌத்தி (தலைவர்), டொம் பிளன்டல், மைக்கல் பிரஸ்வெல், டெவோன் கொன்வெய், மேட் ஹென்ரி, டொம் லேதம், டேரைல் மிச்சல், ப்ளெய்ர் டிக்னர், நெயில் வெக்னர், ஸ்கொட் குக்லெஜ்ன், ஹென்ரி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<