ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கு பின்னடைவு

ICC Test Championship 2023 - 2025

7
ICC Test Championship 2023 - 2025

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இருந்து தலா 3 புள்ளிகள் வீதம் இழந்துள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

நியூசிலாந்து அணி தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

>>பங்களாதேஷூடன் ஆதிக்கம் காட்டிய இலங்கை 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணி

இதில் கிரிஸ்சேர்ச்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியை பதிவுசெய்திருந்தது. எனினும் இந்த இரண்டு அணிகளும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 3 ஓவர்களை வீச தவறியதன் காரணமாக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இருந்து மூன்று புள்ளிகளை இழந்துள்ளன.  இதன்காரணமாக

புள்ளிப்பட்டியலில் மூன்று புள்ளிகளை இழந்துள்ள நியூசிலாந்து அணி ஒரு இடம் பின்தள்ளி 5வது இடத்தை பிடித்துள்ளதுடன், இலங்கை அணி 4வது இடததுக்கு முன்னேறியுள்ளது. அதுமாத்திரமின்றி நியூசிலாந்து அணி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதிலும் சிக்கல்கள் அதிகமாகியுள்ளன.

முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் 55.36 என்ற வெற்றி சராசரியை மாத்திரமே பெறமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதேநேரம் இங்கிலாந்து அணியை பொருத்தவரை டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளமை ஏற்கனவே உறுதியாகியுள்ளது.

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் குறைக்கப்பட்டமை மாத்திரமின்றி இரண்டு அணி வீரர்களதும், போட்டிக்கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<