இங்கிலாந்து, இந்திய அணிகளுடன் சொந்த மண்ணிலும் மற்றும் அவுஸ்திரேலிய அணியுடன் சொந்த மண்ணிலும், சுற்றுப்பயணம் மேற்கொண்டும் விளையாடும் அடிப்படையிலும் நியூசிலாந்து கிரிக்கெட் அணியினுடைய இருதரப்பு தொடர்களின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய தரப்படுத்தலில் டெஸ்ட் தரப்படுத்தடுலில் இரண்டாமிடத்திலும், ஒருநாள் தரப்படுத்தலில் நான்காமிடத்திலும், டி20 சர்வதேச தரப்படுத்தலில் ஆறாமிடத்திலும் காணப்படும் அணியான நியூசிலாந்து அணியானது விளையாடவுள்ள 2019 – 2020 பருவகாலத்திற்கான இருதரப்பு தொடர்களின் அட்டவணையை நியூசிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
வாய்ப்பைத் தவறவிட்டது குறித்து ஜேசன் ஹோல்டர் கவலை
அதன்படி சொந்த மண்ணில் இங்கிலாந்து, இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுடனும், அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலிய அணியுடனும் நியூசிலாந்து அணி விளையாடவுள்ளது.
- இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து
இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது சரியாக ஒரு மாத கால சுற்றுப்பயணம் ஒன்றினை நியூசிலாந்துக்கு மேற்கொண்டு நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் இரு வகையான தொடர்களில் விளையாடவுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் போன்ற தொடர்களில் விளையாடவுள்ளது.
குறித்த இருதரப்பு தொடரானது இவ்வருட இறுதியில் அதாவது நவம்பர் ஆரம்பம் தொடக்கம் டிசம்பர் முதல் வாரம் வரை நடைபெறவுள்ளது.
தொடர் அட்டவணைகள். (அனைத்து போட்டிகளும் நியூசிலாந்து நேரப்படி தரப்பட்டுள்ளது.)
ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர்
- 1 நவம்பர் பி.ப 2.00 – முதலாவது டி20 சர்வதேச போட்டி – க்ரைஸ்சேர்ச்
- 3 நவம்பர் பி.ப 2.00 – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – வெலிங்டன்
- 5 நவம்பர் பி.ப 2.00 – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – நெல்சன்
- 8 நவம்பர் பி.ப 6.00 – நான்காவது டி20 சர்வதேச போட்டி – நேப்பியர்
- 10 நவம்பர் பி.ப 2.00 – ஐந்தாவது டி20 சர்வதேச போட்டி – ஒக்லாந்து
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்
- 21 – 25 நவம்பர் மு.ப 11.00 – முதலாவது டெஸ்ட் போட்டி – மவுண்ட் மௌனன்குய்
- 29 நவம்பர் – 3 டிசம்பர் மு.ப 11.00 – இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஹெமில்டன்
- நியூசிலாந்து எதிர் அவுஸ்திரேலியா
நியூசிலாந்து அணி வெளியிட்டுள்ள போட்டி அட்டவணையின்படி இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள தொடரை முடித்துக்கொண்டு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா பயணமாகவுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக உலக சாதனை படைத்த மிச்செல் ஸ்டார்க்
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அட்டவணை
- 12 – 16 டிசம்பர் பி.ப 6.00 – முதல் டெஸ்ட் போட்டி – பேர்த்
- 26 – 30 டிசம்பர் பி.ப 12.30 – இரண்டாவது டெஸ்ட் போட்டி – மெல்பேர்ன்
- 03 – 07 ஜனவரி பி.ப 12.30 – மூன்றாவது டெஸ்ட் போட்டி – சிட்னி
- இந்தியா எதிர் நியூசிலாந்து
கிரிக்கெட் விளையாட்டில் அண்மைக்காலமாக பலம்பெருந்திய அணியாக கருதப்படும் இந்திய அணியானது ஒன்றரை மாத கால சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூஸிலாந்துக்கு வருகை தந்து மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது.
ஐந்து டி20 சர்வதேச போட்டிகள், மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
தொடர் அட்டவணைகள். (அனைத்து போட்டிகளும் நியூசிலாந்து நேரப்படி தரப்பட்டுள்ளது.)
ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர்
- 24 ஜனவரி பி.ப 8.00 – முதலாவது டி20 சர்வதேச போட்டி – ஒக்லாந்து
- 26 ஜனவரி பி.ப 8.00 – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – ஒக்லாந்து
- 29 ஜனவரி பி.ப 8.00 – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – ஹெமில்டன்
- 31 ஜனவரி பி.ப 8.00 – நான்காவது டி20 சர்வதேச போட்டி – வெலிங்டன்
- 2 பெப்ரவரி பி.ப 8.00 – ஐந்தாவது டி20 சர்வதேச போட்டி – மவுண்ட் மௌனன்குய்
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர்
- 5 பெப்ரவரி பி.ப 3.00 – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ஹெமில்டன்
- 8 பெப்ரவரி பி.ப 3.00 – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ஒக்லாந்து
- 11 பெப்ரவரி பி.ப 3.00 – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – மவுண்ட் மௌனன்குய்
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்
- 21 – 25 பெப்ரவரி மு.ப 11.30 – முதலாவது டெஸ்ட் போட்டி – வெலிங்டன்
- 29 பெப்ரவரி – 4 மார்ச் மு.ப 11.30 இரண்டாவது டெஸ்ட் போட்டி – க்ரைஸ்சேர்ச்
- நியூசிலாந்து எதிர் அவுஸ்திரேலியா
மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக டிசம்பரில் அவுஸ்திரேலியா சென்று வருகின்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மார்ச் மாதம் மீண்டும் அவுஸ்திரேலியா பயணமாகின்றது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் அட்டவணை
- 13 மார்ச் பி.ப 3.20 – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – சிட்னி
- 15 மார்ச் பி.ப 12.20 – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – சிட்னி
- 20 மார்ச் பி.ப 3.20 – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ஹோர்பாட்
கோல்டர் நைலினால் ஆபத்தலிருந்து தப்பினோம்: மிட்செல் ஸ்டார்க்
- அவுஸ்திரேலியா எதிர் நியூசிலாந்து
அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் சர்வதேச தொடர் நிறைவுற்றதன் பின்னர் அவுஸ்திரேலிய அணி சொந்த நாட்டிலிருந்து புறப்பட்டு நியூசிலாந்துக்கு வருகை தந்து மூன்று டி20 சர்வதேச தொடர்களில் விளையாடவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் அட்டவணை
- 24 மார்ச் பி.ப 2.00 – முதலாவது டி20 சர்வதேச போட்டி – டுனிடின்
- 27 மார்ச் பி.ப 7.00 – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – ஒக்லாந்து
- 29 மார்ச் பி.ப 2.00 – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – க்ரைஸ்சேர்ச்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<