நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் இரத்து

298
AFP via Getty Images

பாதுகாப்பு காரணங்களினைக் கருத்திற்கொண்டு நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வுபெற்றார் மைக்கேல் ஹோல்டிங்

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் என்பவற்றில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நியூசிலாந்து நாட்டு அரசாங்கம் கொடுத்த பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றுக்கு அமைவாக, இன்று (17) ராவல்பிண்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையில் நியூசிலாந்து அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணமானது முழுமையாக இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது.

ICC T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு 18 வருடங்களின் பின்னர் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் குறித்த சுற்றுப்பயணம் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக மாறியிருந்த நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணம் இரத்து செய்யப்பட்டிருப்பது கிரிக்கெட் இரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<