பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியதன் மூலம் ஒருநாள் தரவரிசையில் அவ்வணி இழந்த இடத்தினை மீண்டும் பிடித்துள்ளது. மேலும், குறித்த தரவரிசையில் தென்னாபிரிக்க அணி நான்காமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் நிறைவுக்கு வந்திருக்கின்ற பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் பின்னரான ஒருநாள் அணிகளின் புதிய தரவரிசை சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ளது.
சாதனையுடன் ஒரு நாள் தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து அணி
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான…
நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அங்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இரு தொடர்களில் ஆடி வருகின்றது.
இரு தரப்பு தொடரின் முதல் தொடரான ஒருநாள் சர்வதேச தொடர் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் வைத்து சுற்றுலா அணியான பங்களாதேஷ் அணியை 3-0 என்ற அடிப்படையில் வெள்ளையடிப்பு செய்துள்ளது.
நியூசிலாந்து அணியின் இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் 4-1 என்ற அடிப்படையில் தோல்வியை தழுவி தரவரிசையில் இழந்த இடத்தை அந்த அணி மீண்டும் பெற்றுள்ளது.
பங்களாதேஷ் – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் நியூசிலாந்து அணி 111 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் பங்களாதேஷ் அணி 93 புள்ளிகளுடன் ஏழாமிடத்திலும் காணப்பட்டது.
தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் கிரிகெட் சபையின்…
தற்போது நியூசிலாந்து அணி பெற்றுக்கொண்ட வெள்ளையடிப்பு வெற்றியின் மூலம் தரவரிசையில் ஒரு புள்ளியை மேலதிகமாக பெற்று மொத்தமாக 112 புள்ளிகளுடன் இழந்த மூன்றாமிடத்தை மீண்டும் பெற்றுள்ளது.
பங்களாதேஷ் அணி வெள்ளையடிப்புக்கு உள்ளானதன் காரணமாக தரவரிசையில் 3 புள்ளிகளை இழந்து தற்போது மொத்தமாக 90 புள்ளிகளுடன் தொடர்ந்தும் ஏழாமிடத்தில் காணப்படுகின்றது. பங்களாதேஷ் அணியை பின்தொடர்ந்து எட்டாமிடத்தில் காணப்படுகின்ற இலங்கை அணி 78 புள்ளிகளுடன் காணப்படுவதனாலேயே பங்களாதேஷ் அணியின் தோல்வி தரவரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
நியூசிலாந்து அணியின் இந்திய அணியுடனான தோல்வியின் மூலம் தரவரிசையில் 111 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்கு முன்னேறிவந்த தென்னாபிரிக்க அணி தற்போது நான்காமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
புதிய தரவரிசையிலும் தொடர்ந்து முதலிடத்தில் இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் நீடிக்கின்றது. மேலும், இந்திய அணியும் 122 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நீடிக்கின்றது.
அவுஸ்திரேலிய தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ….
சுற்றுப்பயணத்தின் இரு அணிகளுக்குமிடையிலான அடுத்த தொடரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி ஹமில்டனில் ஆரம்பமாகவுள்ளது.
நியூசிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் பின்னரான புதிய ஒருநாள் தரவரிசை (முதல் பத்து இடங்கள்)
- இங்கிலாந்து – 126 புள்ளிகள்
- இந்தியா – 122 புள்ளிகள்
- நியூசிலாந்து – 112 புள்ளிகள்
- தென்னாபிரிக்கா – 111 புள்ளிகள்
- பாகிஸ்தான் – 102 புள்ளிகள்
- அவுஸ்திரேலியா – 100 புள்ளிகள்
- பங்களாதேஷ் – 90 புள்ளிகள்
- இலங்கை – 78 புள்ளிகள்
- மேற்கிந்தியதீவுகள் – 72 புள்ளிகள்
- ஆப்கானிஸ்தான் – 67 புள்ளிகள்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<