அடுத்த ஆண்டின் (2023) ஆரம்பத்தில் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே மூன்று வகைப் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் விளையாடவிருக்கின்றது.
WATCH – ஆஸி.க்கு எதிரான டெஸ்டில் இலங்கை எதிர்கொள்ளவுள்ள சவால்கள் என்ன?
இலங்கை அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2023ஆம் ஆண்டின் மார்ச் மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருடன் ஆரம்பமாகின்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஆரம்பமாகவுள்ளதோடு, இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் மாதம் 17ஆம் திகதி வெலிங்டன் நகரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
டெஸ்ட் தொடரின் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவிருக்கின்றது. இந்த ஒருநாள் தொடருக்காக ஓக்லேன்ட், கிறைஸ்ட்சேர்ச் மற்றும் ஹமில்டன் ஆகிய நகரங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஒருநாள் தொடர் ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கினுள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் தொடரினை அடுத்து இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடவிருக்கின்றன. இந்த T20 தொடரின் முதல் போட்டி ஓக்லேன்ட் நகரிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் முறையே டனேடின் மற்றும் குயின்ஸ்டவுன் ஆகிய நகரங்களிலும் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்மித், ஸ்டார்க் ஆடுவார்களா??
இதேநேரம் கடைசியாக 2019ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் ஆடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுத்தொடர் அட்டவணை
டெஸ்ட் தொடர்
- மார்ச் 09-13, 2023 – முதல் டெஸ்ட் போட்டி – கிறைஸ்ட்சேர்ச்
- மார்ச் 17-21, 2023 – இரண்டாவது டெஸ்ட் போட்டி – வெலிங்டன்
ஒருநாள் தொடர்
- மார்ச் 25, 2023 – முதல் ஒருநாள் போட்டி – ஒக்லேன்ட்
- மார்ச் 28, 2023 – இரண்டாவது ஒருநாள் போட்டி – கிறைஸ்ட்சேர்ச்
- மார்ச் 31, 2023 – மூன்றாவது ஒருநாள் போட்டி – ஹமில்டன்
T20 தொடர்
- ஏப்ரல் 02, 2023 – முதல் T20I போட்டி – ஒக்லேன்ட்
- ஏப்ரல் 05, 2023 – இரண்டாவது T20I போட்டி – டனேடின்
- ஏப்ரல் 08, 2023 – மூன்றாவது T20I போட்டி – குயின்ஸ்டவ்ன்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<