இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள T20I தொடருக்கான நியூசிலாந்து குழாத்திலிருந்து கேன் வில்லியம்சன் மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தொடருக்கான நியூசிலாந்து அணியின் தலைவராக டிம் சௌதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்விட்டரில் கொண்டாடப்படும் இலங்கை அணியின் வரலாற்று வெற்றி
கடந்த புதன்கிழமை (14) காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகி ……..
இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடருக்கான நியூசிலாந்து குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேன் வில்லியம்சன் மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோருக்கு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு வழங்கப்படவுள்ளது.
“உலகக் கிண்ணத் தொடரானது கேன் வில்லியம்சன் மற்றும் நியூசிலாந்து அணிக்கு சிறந்த ஒரு தொடராக அமைந்திருந்தது. எதிர்வரும் காலங்களில் அதிகமான தொடர்கள் விளையாட வேண்டி உள்ளது. அதனால், இப்போது அவர்களக்கு ஓய்வு வழங்குவது சிறந்ததாக அமையும்” என நியூசிலாந்து அணியின் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
வில்லியம்சனுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அணித் தலைவராக வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார். 2009ம் ஆண்டு T20I போட்டிகளில் அறிமுகமாகிய சௌதி, 58 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டிம் சௌதியுடன் வேகப் பந்துவீச்சு துறையை பலப்படுத்துவதற்காக லொக்கி பேர்கஸன், இறுதியாக இலங்கை அணிக்கு எதிரான T20I தொடரில் விளையாடியிருந்த ஸ்கொட் குகலெய்ன் மற்றும் 2018ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய செத் ரென்ஸ் ஆகியோர் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.
அதேநேரம், சுழல் பந்துவீச்சினை பலப்படுத்தும் முகமாக சகலதுறை வீரரான மிச்சல் சென்ட்னர் உட்பட, இஸ் சோதி மற்றும் டொட் எஸ்ட்ல் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். T20I போட்டிகளை பொருத்தவரை சிறப்பாக செயற்பட்டு வரும் இஸ் சோதி பந்துவீச்சாளர்கள் வரிசையில் 8வது இடத்தில் உள்ளார். டொட் எஸ்ட்ல் இறுதியாக 2016ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20I தொடரில் விளையாடியிருந்ததுடன், 3 வருடங்களுக்கு பின்னர், T20I போட்டிகளில் விளையாடவுள்ளார்.
நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களை பார்க்கும் போது, கொலின் மன்ரோ மற்றும் மார்டின் கப்டில் ஆகிய அதிரடி துடுப்பாட்ட வீரர்களுடன், அனுபவ துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் விக்கெட் காப்பாளர் டிம் செய்பர்ட் மற்றும் டொம் ப்ரூஸ் ஆகியோரும் துடுப்பாட்ட வீரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த திமுத்!
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இலங்கை ……..
இதேவேளை, வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர்கள் பட்டியலில் முன்னாள் நியூசிலாந்து வீரர் ஜோன் மிச்சலின் மகன் டெரில் மிச்சல் இணைக்கப்பட்டுள்ளதுடன், அனுபவ வீரர் கொலின் டி கிரெண்டோமும் இணைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர், செப்டெம்பர் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. போட்டிகள் அனைத்தும் கண்டி – பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து குழாம்
டிம் சௌதி (தலைவர்), டொட் எஸ்ட்ல், டொம் ப்ரூஸ், கொலின் டி கிரெண்டோம், லொக்கி பேர்கஸன், மார்டின் கப்டில், ஸ்கொட் குகளெய்ன், டெரில் மிச்சல், கொலின் மன்ரோ, செத் ரென்ஸ், மிச்சல் சென்ட்னர், டிம் சௌதி, இஸ் சோதி, ரொஸ் டெய்லர்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<