நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் கெயல் ஜெமிசன் உபாதை காரணமாக சுமார் ஒருவருட காலத்துக்கு போட்டிகளில் விளையாட முடியாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக முதுகுப்பகுதி உபாதைக்கு முகங்கொடுத்து வந்திருந்த நிலையில் மீண்டும் அவருக்கு அதே உபாதை ஏற்பட்டுள்ளது.
>>கிரிக்கெட் இயக்குனராக மொஹமட் ஹபீஸின் பதவிக்காலம் நிறைவு
கெயல் ஜெமிசன் கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதுகுப்பகுதி உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். இதன் பின்னர் சத்திரசிசிக்சைக்கு முகங்கொடுத்த இவர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இங்கிலாந்து அணக்கு எதிரான தொடரில் இணைக்கப்பட்டார். எனினும் அதனைத்தொடர்ந்து உபாதை காரணமாக சுமார் 5 மாதங்கள் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
மீண்டும் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த இவருக்கு மீண்டும் அதே முதுகு உபாதை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சத்திரசிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில், மீண்டும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப் போவதில்லை என கெயல் ஜெமிசன் தெரிவித்துள்ளார்.
தற்போது கெயல் ஜெமிசனுக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவரால் இந்த ஆண்டு முழுவதும் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது என நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<