இலங்கைக்கு புதிய விளையாட்டுத்துறை அமைச்சர்

120
SUNIL KUMARA GAMAGE

இலங்கையின் புதிய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சராக (Sports and Youth Affair) மாண்புமிகு சுனில் குமார கமகே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

>> சாதனையுடன் நியூசிலாந்து ஒருநாள் தொடரை வென்ற இலங்கை

கடந்த வாரம் இலங்கையில் நிறைவுக்கு வந்த 10ஆவது பொதுத் தேர்தலினை அடுத்து புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசியப் பட்டியல் பாராளமன்ற உறுப்பினரான சுனில் குமார கமகே, இலங்கையின் புதிய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் தனது பதவிப் பிராமணத்தினை இன்று (18) ஜனாதிபதி அலுவகலத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநயாக்க முன்னிலையில் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சுனில் குமார கமகே தொழில்முறைரீதியாக ஒரு பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<