டெஸ்ட் போட்டிகளில் முதலாவது மற்றும் இரண்டாவது இன்னிங்களில் ஆட்டமிழக்காமல் ஓட்டங்களை பெற்றுக்கொண்ட முதல் வீரர் என்ற புதிய சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக கிரேக் பிரத்வெய்ட் புதிய சாதனையாகப் பதிவு செய்தார்.
அதே சமயத்தில், மிகவும் துணிச்சலான முறையில் துடுப்பாடிய அவர் முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் முறையே 142* மற்றும் 60* ஓட்டங்களை பெற்றதோடு மேற்கிந்திய தீவுகள் அணி இப்போட்டியில் 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற பெரிதும் வழி வகுத்தார்.
ஷாஜாவில் நடைபெற்ற பாகிஸ்தானுடனான முன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், 114 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில், ஐந்தாம் நாளான இன்று 39 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இன்றைய தினம் எந்தவிதமான விக்கெட் இழப்புமின்றி குறித்த ஓட்ட எண்ணிக்கையை பெற்று 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
நான்காவது நாளான நேற்று பந்து வீச்சில் மிரட்டிய யாசிர் ஷாவால் ஐந்தாம் நாளான இன்று விக்கெட் எதனையும் பெற முடியவில்லை. எனினும், 15 ஓவர்களுக்கு 40 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்களை அவர் இரண்டாவது இன்னிங்சில் கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்ட நாயகனாக கிரேக் பிராத்வெய்ட் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, தொடரின் நாயகனாக யாசிர் ஷா தெரிவு செய்யப்பட்டார்
தொடர் முடிவில், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுடனான 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.
போட்டியின் சுருக்கம்
பாகிஸ்தான் அணி (முதல் இன்னிங்ஸ்) – 281(90.5) – சமி அஸ்லம் 74(172), யூனுஸ் கான் 51(1௦௦), மிஸ்பா உல் ஹக் 53(123), சர்ப்ராஸ் அஹ்மத் 51(60), தேவேந்திர பிபிஷோ 77/4, ஷானோன் கேப்ரியல் 67/3(21), அல்சாரி ஜோசப் 57/2(16.5)
மேற்கிந்திய தீவுகள் அணி (முதல் இன்னிங்ஸ்) -337(115. 4) – கிரேக் பிராத்வெய்ட் 142*(318), ரோஸ்தான் சேஸ் 5௦, ஷேன் டோவ்றிச் 47(9௦), வாஹாப் ரீயாஸ் 88/5 (26.4)முஹம்மத் அமீர் 71/3(25)
பாகிஸ்தான் அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 2௦8 (88.3) – அசார் அலி 91(234), சர்ப்ராஸ் அஹமத் 42(90), மொம்மாத் நவாஸ் 19(63), ஜேசன் ஹோல்டர் 30/5(17.3) தேவேந்திர பிபிஷோ46/3(19)
மேற்கிந்திய தீவுகள் அணி (இரண்டாவது இன்னிங்ஸ்): 154/5(43.5) – கிரேக் பிராத்வெய்ட் 60(109), ஷேன் டோவ்றிச்) யாசிர் ஷா 40/3(15), வாஹாப் ரியாஸ் 46/2(12)