ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசை வெளியீடு

246
BCCI

சர்வதேச கிரிக்கெட் வாரியம், ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையை இன்று (23) வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். 

சனத் ஜெயசூரியவின் 22 வருட சாதனையை தகர்த்த ரோஹிட் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் உபதலைவரும்………….

கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்று முடிந்த மேற்கிந்திய தீவுகள் – இந்திய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மேற்கிந்திய தீவுகளின் ஷை ஹோப் ஒருநாள் போட்டிகளுக்காக வெளியிடப்பட்டிருக்கும் புதிய துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியிருக்கின்றார்.

அதன்படி, முன்னர் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 14ஆம் இடத்தில் இருந்த ஷை ஹோப் தற்போது 5 இடங்கள் முன்னேறி 9ஆம் இடத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சதம் (102) பெற்ற இவர் குறித்த தொடரில் மொத்தமாக 222 ஓட்டங்களை குவித்திருந்தார். 

அதேநேரம், மேற்கிந்திய தீவுகளின் மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான சிம்ரோன் ஹேட்மேயரும் ஒருநாள் அணிகளுக்கான புதிய துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றம் காண்பித்திருக்கின்றார். மொத்தமாக 6 இடங்கள் முன்னேறியுள்ள ஹேட்மேயர் தற்போது 19ஆம் இடத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்ட லோக்கேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் புதிய ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னிலை பெற்றிருக்கின்றனர். இவர்களில் லோக்கேஷ் ராகுல் 17 இடங்கள் முன்னேறி 71ஆவது இடத்தில் காணப்படுவதோடு, ஸ்ரேயாஸ் ஐயர் 104ஆவது இடத்தில் இருந்து தற்போது 81ஆவது இடத்திற்கு வந்திருக்கின்றார்.

இதேவேளை ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் இரண்டு இடங்களையும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தக்கவைத்திருக்கின்றனர். இவர்கள் தவிர ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாம் காணப்பட 4ஆம் இடத்தில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவரான பாப் டூ ப்ளேசிசும் 5ஆம் இடத்தில் நியூசிலாந்தின் ரொஸ் டெய்லரும் உள்ளனர். 

இலங்கை கிரிக்கெட் அணியினைப் பொறுத்தவரை அஞ்செலோ மெதிவ்ஸ் மாத்திரமே ஒருநாள் துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் முதல் 40 இடங்களுக்குள் (31ஆவது) உள்ள ஒரே துடுப்பாட்ட வீரராக இருப்பது குறிப்பிடத்தக்கது.  

நஷீம் ஷாவின் அபார பந்துவீச்சுடன் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

சுற்றுலா இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு………….

ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை (முதல் 10 இடங்கள்)

  1. விராட் கோலி (இந்தியா)
  2. ரோஹித் சர்மா (இந்தியா)
  3. பாபர் அசாம் (பாகிஸ்தான்)
  4. பாப் டூ ப்ளேசிஸ் (தென்னாபிரிக்கா)
  5. ரொஸ் டெய்லர் (நியூசிலாந்து)
  6. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)
  7. டேவிட் வோர்னர் (அவுஸ்திரேலியா)
  8. ஜோ ரூட் (இங்கிலாந்து)
  9. ஷை ஹோப் (மேற்கிந்திய தீவுகள்)
  10. குயின்டன் டி கொக் (தென்னாபிரிக்கா)

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க