இலங்கையின் தேசிய மரதன் ஒட்ட சம்பியனான ஹிருனி விஜயரத்ன, அமெரிக்காவின் டெக்ஸாஸில் நடைபெற்ற ஹியுஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் தனது சிறந்து காலத்தைப் பதிவுசெய்து 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
கொழும்பு மரதனில் அசத்திய இலங்கை – வெனிசுவேலா ஜோடியின் ஒலிம்பிக் கனவு
கொழும்பு ஸ்போர்ட்ஸ் ரைஸன் அமைப்பு…
குறித்த போட்டியை 2 மணித்தியாலம் 36 நிமி. 35 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய தேசிய சாதனை படைத்த ஹிருனி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பையும் உறுதிசெய்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற றியோ ஒலிம்பிக்கில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்திய நிலூகா ராஜசேகர, கடந்த வருடம் நடைபெற்ற ஹொங்கொங் மரதன் ஓட்டப் போட்டியில் 2 மணித்தியாலம் 40 நிமி. 07 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவுசெய்து தேசிய சாதனை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்கேற்கும் முகமாக கடந்த வருடம் அமெரிக்காவின் யுஜீன் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட ஹிருனி, குறித்த போட்டியை 2 மணித்தியாலம் 43 நிமி. 31 செக்கன்களில் நிறைவுசெய்து தனது சிறந்த காலத்தைப் பதிவு செய்திருந்தார். இம்முறை குறித்த காலத்தை 7 நிமிடங்களால் முந்தி, தொடர்ச்சியாக 4ஆவது தடவையாகவும் தேசிய சாதனைக்குரிய சொந்தக்காரியாக அவர் மாறினார்.
முன்னதாக, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை முதற்தடவையாகப் பெற்றுக்கொண்ட ஹிருனி விஜயரத்ன, போட்டியில் 21 கிலோ மீற்றர் தூரத்தை நிறைவு செய்த பிறகு இடைநடுவில் ஏற்பட்ட தடங்கலினால் ஏற்பட்ட உபாதை காரணமாக துரதிஷ்டவசமாக வெளியேறினார்.
எனினும், குறித்த போட்டியில் சுமார் ஒரு மணித்தியாலயத்துக்கும் அதிகமான ஓடிய பிறகு போட்டியின் நிறைவுக் கம்பத்தை அண்மித்திருந்த ஹிருணிக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
2017இல் தேசிய மட்டத்தில் ஜொலித்த வடக்கு, கிழக்கு மெய்வல்லுனர் நட்சத்திரங்கள்
இவ்வருடத்தை பொறுத்தமட்டில் தேசிய..
15 மற்றும் 10 கிலோ மீற்றர் தூரங்களைக் கொண்ட அரைமரதன் போட்டிப் பிரிவில் இலங்கைக்கான சாதனையை தன்னகத்தே கொண்டுள்ள ஹிருனி விஜயரத்ன, 2016 றியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டார்.
எனினும், கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற எல்.எஸ்.ஆர் கொழும்பு மரதனில் அரை மரதன் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட ஹிருனி, போட்டியை 2 மணித்தியாலம் 23 நிமி. 21 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, ஆண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடத்தை ஹிருனி விஜயரத்னவின் கணவரும், வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்தவருமான லூவிஸ் ஓர்ட்டா பெற்றுக்கொண்டார். அவர் குறித்த போட்டித் தூரத்தை ஒரு மணித்தியாலம் 10 நிமி. 39 செக்கன்களில் நிறைவு செய்தார்.
2017இல் விளையாட்டு உலகை அலங்கரித்த முக்கிய நிகழ்வுகள்
விளையாட்டு உலகில் கடந்த 2017ஆம் ஆண்டு சாதனைகள்..
தனது 9ஆவது வயதில், அதாவது 2000ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறிய ஹிருனி, 17 வருடங்களுக்குப் பிறகு இலங்கைக்கு வருகை தந்து சர்வதேசப் போட்டியொன்றில் தனது கணவன் லூவிஸுடன் இணைந்து வெற்றியைப் பதிவு செய்திருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது
பெட் ஹெட்சனின் பயிற்றுவிப்பின் கீழ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற ஹிருனி, ஹெட்சன் எலைட் விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நாமத்தை இன்னும் இன்னும் ஜொலிக்கச் செய்வதற்கு அமெரிக்காவில் வசித்து வருகின்ற ஹிருனி விஜயரத்னவுக்கு இணையத்தளத்தின் வாயிலாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.