இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் முகாமைத்துவமானது வீரர்களின் களத்தடுப்பின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கோடு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கின்றது.
முன்னணி வீரரை இழக்கும் சென்னை சுபர் கிங்ஸ்!
இந்த திட்டத்திற்கு அமைய வீரர்கள் கிரிக்கெட் போட்டிகளில் வெளிப்படுத்தும் களத்தடுப்பிற்கு ஏற்ப சிறு விருதுகள் (Awards System) மூலம் கௌரவிக்கப்படவிருக்கின்றனர்.
அதன்படி இதற்கமைவாக முதலவதாக கௌரவிக்கப்பட்ட வீரராக இலங்கை அணியின் உப தலைவர் சரித் அசலன்க மாறியிருக்கின்றார். அசலன்க பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் T20I போட்டியில் வெளிப்படுத்திய சிறந்த களத்தடுப்பிற்காக “ஆரஞ்சு நிறத் தொப்பி” மற்றும் ”நாணயம்” (Orange Cap and Coin) வழங்கி இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் உபுல் சந்தன மூலம் கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்.
இதேவேளை இலங்கை – பங்களாதேஷிற்கு எதிராக நடைபெற்ற T20I தொடரின் முதல் போட்டியில் 03 ஓட்டங்களால் த்ரில்லர் வெற்றியினைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இரு அணிகளும் பங்கெடுக்கும் தொடரின் இரண்டாவது T20I போட்டி நாளை (06) நடைபெறுகின்றது.
இந்தப் போட்டியினையும் இலங்கை அணி பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் விளையாடும் அனைத்துப் போட்டிகளையும் ThePapare TV தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக Dialog TV (அலைவரிசை எண். 63) இல் நேரடியாக கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<