அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் வீரர்கள் ஏலம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கின்றது
>> உலகக் கிண்ணம் தொடர்பில் பாகிஸ்தான் எடுத்த அதிரடி தீர்மானம்
நான்காவது பருவத்திற்கான LPL தொடர் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகவிருக்கின்றது. இந்த LPL தொடருக்கு இந்தியாவின் IPL T20 போட்டிகளை ஒத்தவிதத்தில் வீரர்கள் ஏலத்தினை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) முதல் தடவையாக ஏற்பாடு செய்திருக்கின்றது.
அதன்படி இந்த வீரர்கள் ஏலம் எதிர்வரும் புதன்கிழமை (14) கொழும்பு ஷங்ரீலா சொகுசு ஹோட்டலில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த ஏலம் தொடர்பில் வெளியாகியிருக்கும் புதிய அறிவிப்பானது ஏலத்தினை நடாத்துபவர் குறித்ததாக அமைந்திருக்கின்றது.
அந்த வகையில் LPL ஏலத்தினை நடாத்துவதற்கு இந்தியாவின் பிரபல்யமிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான சாரு ஷர்மா அழைக்கப்பட்டிருக்கின்றார்.
சாரு ஷர்மா 2022ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் வீரர்கள் ஏலத்தினை தொகுத்து வழங்கியிருந்ததோடு, கிரிக்கெட் சார்ந்த பிரபல்யமிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய அனுபவம் கொண்டவராக காணப்படுகின்றார். சாரு ஷர்மா LPL ஏலத்தினை தொகுத்து வழங்கும் விடயத்தினை NewsWire செய்தி இணையதளம் உறுதி செய்திருக்கின்றது.
இதேவேளை இந்த ஆண்டுக்கான LPL தொடரில் பங்கெடுக்கும் அணிகள் 500,000 அமெரிக்க டொலர்கள் வரை ஏலத்திற்காக வைத்திருப்பதோடு, ஐந்து அணிகளும் 2.5 மில்லியன் வரை ஏலத்தின் போது வீரர்கள் கொள்வனவிற்காக செலவிட முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
>> இதுதான் எனது இறுதிப் போட்டி; ஓய்வு முடிவை அறிவித்த வோர்னர்
அதேவேளை நான்காவது பருவத்திற்கான LPL தொடர் ஜூலை மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<