மைலோ அனுசரணையில், எதிர் ஜூன் மாதம் 9ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள ஜனாதிபதி கிண்ணத்துக்கான நொக் அவுட் போட்டிகளை, பங்குபெறும் பாடசாலை அணிகளுக்கு சார்பற்ற நடுநிலையான மைதானத்தில் நடாத்துவதற்கு இலங்கை பாடசாலைகள் ரக்பி சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 11 வாரங்களாக நடைபெற்ற விறுவிறுப்பான பாடசாலைகளுக்கு இடையிலான லீக் கிண்ணப் போட்டிகளிலிருந்து திறமைகளை வெளிப்படுத்திய எட்டு அணிகள் நொக் அவுட் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன
இலங்கை பாடசாலைகள் ரக்பி சங்கம் ஒழுங்கு செய்துள்ள இந்தப் போட்டித் தொடரின் காலிறுதிப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள நிலையில், இறுதிப் போட்டியை ஜூன் 24ஆம் திகதியில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
விறுவிறுப்பான 11 வாரங்களின் பின்னர் முடிவுற்ற பாடசாலை ரக்பி லீக் தொடர்
11 வாரங்களாக விறுவிறுப்புடன் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக்..
மேலும், கடந்த வருடம் றோயல் கல்லூரி ரக்பி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இடம் பெற்ற குழப்ப நிலை காரணமாக, போட்டி பிற்போடப்பட்டு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றிருந்தது. அந்த வகையில் இம்முறை இவ்வாறான குழப்பங்களைத் தவிர்க்கும் முகமாக, குறித்த போட்டிகள் அனைத்தும் இரண்டு அணிகளுக்கும் சார்பற்ற நடுநிலைமையான மைதானங்களில் நடத்துவதற்கு, திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், காலிறுதிப் போட்டிகள் அனைத்தும் புதிதாக புனரமைக்கப்பட்ட சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள அதேநேரம், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இசிபதன கல்லூரி 2014ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு சம்பியன் பட்டத்தை சுவீகரித்திருந்தது, அத்துடன் 2015ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தை பெற்றிருந்தது.
கடந்த வருடம் நடைபெற்ற றோயல் மற்றும் இசிபதன கல்லூரிகளுக்கு இடையிலான ஜனாதிபதிக் கிண்ண இறுதிப் போட்டியில், 47-12 என்ற புள்ளிகள் அடிப்படையில் இசிபதன கல்லூரி வெற்றியீட்டியிருந்தது.
அண்மையில் நிறைவுற்ற லீக் கிண்ண தொடரில் பாடசாலைகளுக்கு இடையே கடும் போட்டி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. புதிதாக பட்டத்தை கைப்பற்றிய றோயல் கல்லூரி இம்முறை ஜனாதிபதிக் கிண்ணத்தையும் வெல்வதற்கு எதிர்பார்த்துள்ளது. அதேநேரம், தோல்வியுற்றிருந்த திரித்துவக் கல்லூரி மீண்டெழுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையவுள்ளது.
அதேநேரம், வெஸ்லி, புனித ஜோசப் மற்றும் புனித பேதுரு ஆகிய கல்லூரிகளுக்கு கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான இரண்டாவது வாய்ப்பு ஜனாதிபதிக் கிண்ணத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் நடைபெற்றிருந்த லீக் போட்டிகளில் அபார திறமைகளை வெளிப்படுத்தியிருந்த புனித ஜோசப் மற்றும் புனித பேதுரு ஆகிய கல்லூரிகள், காலிறுதிப் போட்டிகளில் முழுப் பலத்தையும் பிரயோகித்து வெற்றியைப் பதிவு செய்ய காத்திருக்கின்றன.
இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட இலங்கை ரக்பி அணி
மலேசியா, ஈபோவில் நடைபெற்ற ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் தொடரின்…
லீக் கிண்ண முதல் சுற்றுப் போட்டிகளில் எதிர்பாராத வகையில், தோல்விகளை எதிர்கொண்ட புனித அந்தோனியார் மற்றும் தர்மராஜ ஆகிய கல்லூரிகள், இப்பருவகால ரக்பி போட்டிகள் முடிவடைவதற்குள் நொக் அவுட் போட்டிகளில் தமது திறமையை வெளிக்காட்ட எதிர்பார்த்துள்ளன.
இப்போதைக்கு நிர்ணயிக்கப்பட்ட எட்டு அணிகளும் தாம் இத்தொடரில் பங்குபெறுவதை உறுதிப்படுத்தியுள்ளன.
போட்டிகள் அட்டவணை
Date | Match | Team 1 | Team 2 | Venue | |
9th June 2017 | QF 1 | Royal College (C1) | Dharmaraja College (P2) | Sugathadasa | |
10th June 2017 | QF 2 | Isipathana College (C2) | St. Anthony’s College (P1) | Sugathadasa | |
11th June 2017 | QF 3 | Trinity College (C3) | St. Peter’s College (C6) | Sugathadasa | |
12th June 2017 | QF 4 | Wesley College (C4) | St. Joseph’s College (C5) | Sugathadasa | |
17th June 2017 | SF1 | Winner QF 1 | Winner QF 4 | Racecourse | |
18th June 2017 | SF2 | Winner QF 2 | Winner QF 3 | Racecourse | |
24th June 2017 | Final | Winner SF 1 | Winner SF 2 | Racecourse |