இலங்கை வலைப்பந்து அணி ஆசியாவில் தொடர்ந்தும் முன்னிலையில்

758
Netball World Cup Twitter

சர்வதேச வலைப்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய உலக தரவரிசையின் படி, இலங்கை அணி, ஏற்கனவே இருந்த 18வது இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளதுடன் ஆசிய மட்டத்தில் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. 

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கு பின்னர், சர்வதேச வலைப்பந்தாட்ட சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

தர்ஜினியின் மற்றொரு சாதனையுடன் உலகக் கிண்ணத்தை நிறைவு செய்த இலங்கை

வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில், 15ஆவது இடத்தினை பெறும் அணி எது என்பதை…

இந்த தொடரில் பங்குபற்றி 12வது இடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் இலங்கை அணி விளையாடியிருந்தாலும், 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மாத்திரமே பெற்று 18வது இடத்தை பிடித்துள்ளது.

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி இரண்டு முறை ஆசிய அணியான சிங்கப்பூரை வீழ்த்தியிருந்தது. அதன்படி, சிங்கப்பூர் அணி 2 இடங்கள் பின்தள்ளப்பட்டு சர்வதேச தரவரிசையில் 28வது இடத்தை பிடித்துள்ளது.  

இதேவேளை, ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்த மலேசிய அணி அணி, உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற தவறியிருந்தது. எனினும், அந்த அணி தரவரிசையில் 27வது இடத்தை பிடித்திருக்கிறது. 

அதேநேரம், உலகக் கிண்ணத்தில் 2 வெற்றிகளை பெற்றிருந்த இலங்கை அணி தொடர்ந்தும் ஆசியாவுக்கான தரவரிசையில் முதலாவது இடத்தை தக்கவைத்துள்ளது. இலங்கை அணியானது உலக தரவரிசையில் முன்னேறாவிட்டாலும், கடந்த காலங்களில் அடைந்த முன்னேற்றங்கள் வரவேற் தக்கதாக மாறியுள்ளது.

வலைப்பந்தாட்டத்தில் சதமடித்து சாதனை படைத்தார் தர்ஜினி சிவலிங்கம்

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவியும், நட்சத்திர வீராங்கனையுமான…

குறிப்பாக, இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக திலக ஜினதாஸ நியமிக்கப்பட்ட ஒன்றரை ஒருவட காலப்பகுதியில், இலங்கை அணி உலக தரவரிசையில் 27வது இடத்திலிருந்து 18வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.  

இதேவேளை, உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில், இந்த வருடம் நடைபெற்ற வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் சம்பியனாகிய நியூசிலாந்து அணி, 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், முதலிடத்தை அவுஸ்திரேலிய அணியும், மூன்றாவது இடத்தை இங்கிலாந்து அணியும் தக்கவைத்துள்ளன. 

>>மேலும்பல சுவையான செய்திகளைப் படிக்க<<