வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில், இன்று (15) சிங்கப்பூர் வலைப்பந்து அணியினை எதிர்கொண்ட இலங்கை வலைப்பந்து அணி 88-50 என்கிற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.
வலைப்பந்து உலகக்கிண்ணத்தில் இரண்டாம் சுற்று வாய்ப்பை இழந்த இலங்கை
வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில், தமது கடைசி குழுநிலை……
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் இடம்பெறும் 15ஆவது வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில் 16 அணிகளில் ஒன்றாக பங்கேற்கும் இலங்கை வலைப்பந்து அணி, முன்னர் இடம்பெற்ற தமது குழுநிலைப் போட்டிகள் மூன்றிலும் தோல்வியடைந்த காரணத்தினால் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் சந்தர்ப்பத்தை இழந்திருந்தது.
எனினும், இலங்கை வலைப்பந்து அணி இந்த தொடரில் 13 தொடக்கம் 16 வரையிலான இடத்தை பெறும் அணிகளை தெரிவு செய்யும் சுற்றில் சிங்கப்பூர், பிஜி மற்றும் சமோவா ஆகிய நாடுகளுடன் தொடர்ந்து விளையாடும் சந்தர்ப்பத்தை பெற்றுள்ளது.
அதன்படி இந்த சுற்றில் தமது முதல் போட்டியிலேயே இலங்கை வலைப்பந்து அணி, சிங்கப்பூர் வலைப்பந்து அணியினை எதிர்கொண்டிருந்தது.
லிவர்பூலின் எம்&எஸ் வங்கி அரங்கில் ஆரம்பமான போட்டியின் தொடக்கம் முதலே இலங்கை வலைப்பந்து அணி தர்ஜினி சிவலிங்கத்தின் புள்ளி மழையுடன் முன்னேறியது. இதனால், போட்டியின் முதல் கால்பகுதி 21-11 என்கிற புள்ளிகள் கணக்கில் இலங்கை வலைப்பந்து அணியின் வசமாகியது.
Photos: Sri Lanka vs Australia | Group A | Netball World Cup 2019
ThePapare.com | 15/07/2019 Editing and re-using images without….
தொடர்ந்து இரண்டாம் கால்பகுதியிலும் இலங்கை மகளிர் அசத்தல் காண்பித்தனர். அதனால், இரண்டாம் கால்பகுதியும் 24-11 என்கிற புள்ளிகள் கணக்கில் இலங்கை வலைப்பந்து அணியின் வசமானது. எனவே, போட்டியின் முதல் அரைப்பகுதியில் இலங்கை வலைப்பந்து அணி 45-22 என்கிற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.
அதனையடுத்து போட்டியின் மூன்றாம் கால்பகுதியிலும் ஜொலித்த இலங்கை வீராங்கனைகள் இந்த கால்பகுதியினையும் 26-14 என்கிற புள்ளிகள் கணக்கில் தம்வசமாக்கினர். அதனால் போட்டியின் மூன்றாம் கால்பகுதி நிறைவடையும் போது இலங்கை அணி 71-36 என்கிற புள்ளிகள் கணக்கில் ஆதிக்கம் செலுத்தியது.
போட்டியின் இறுதிக் கால்பகுதியிலும் அபாரம் காண்பித்த இலங்கை அணி, இந்தக் கால்பகுதியினையும் 17-14 எனக் கைப்பற்றி போட்டியில் 88-50 என்கிற புள்ளிகள் கணக்கில் வெற்றியாளர்களாக மாறியது.
வடக்கு அயர்லாந்து அணியிடமும் போராடி தோல்வியினை தழுவிய இலங்கை
வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில் தமது இரண்டாவது…..
இலங்கை வலைப்பந்து அணியின் சார்பாக தர்ஜினி சிவலிங்கம், 78 முயற்சிகளில் 76 புள்ளிகள் பெற்று போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனையாக மாறினார். இதேநேரம், சிங்கப்பூர் வலைப்பந்து அணியில் கேய் வேய் டொய் 16 புள்ளிகளுடன் அவரது தரப்பில் அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனையாக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இனி, இலங்கை வலைப்பந்து அணி இந்த வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில் தமது அடுத்த போட்டியில் பிஜி அணியினை நாளை (16) எதிர்கொள்கின்றது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<