சர்வதேச இருபதுக்கு 20 (T20i) போட்டிகளில் பதிலுக்கு துடுப்பாடும்போது சதமடித்த முதலாவது அணித் தலைவர் என்ற பெருமையை நேபாள கிரிக்கெட் அணித் தலைவர் பரஸ் கட்கா பெற்றுக் கொண்டார்.
நேபாளம், சிங்கப்பூர் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20 கிரிக்கெட் தொடர் சிங்கப்பூரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் (28) நடைபெற்ற ஆட்டத்தில் நேபாளம் – சிங்கப்பூர் அணிகள் மோதின.
சமரி அதபத்துவின் சாதனை சதம் வீண் : முதல் T20i ஆஸி வசம்
அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் விஜயம் ………
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிங்கப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை எடுத்தது. இதனையடுத்து 152 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் களமிறங்கியது. தொடக்க வீரராகக் களமிறங்கிய அணித் தலைவர் பரஸ் கட்கா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவர் 52 பந்துகளில் 7 பௌண்டரிகள், 9 சிக்ஸர்களுடன் 106 ஓட்டங்களைக் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இவரது சதத்தால் நேபாளம் அணி 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 154 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
இதன்படி, 49 பந்துகளில் சதமடித்த பரஸ் கட்கா சர்வதேச T20 போட்டியொன்றில் தலைவராக பதிலுக்கு துடுப்பாடும்போது சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுக் கொண்டார். இதற்கு முன்னர் சதம் பெற்ற ஏனைய ஐந்து தலைவர்களும் முதலில் துடுப்பெடுத்தாடிய போது சதம் அடித்துள்ளனர்.
ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் நேபாள அணிக்காக முதல் சதமடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட இவர், தற்போது டி-20 போட்டிகளிலும் முதல் சதமடித்த வீரராக வரலாற்றில் இடம்பிடித்தார்.
CPL தொடரில் 15 பந்துகளில் அரைச் சதம் கடந்து அசத்திய டுமினி
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் கரீபியன் …….
இதேநேரம், T20 போட்டிகள் வரலாற்றில் சேஸிங்கில் அதிக ஓட்டங்களைக் குவித்த தலைவர்கள் பட்டியலில் நெதர்லாந்து அணியின் தலைவர் பீட்டர் சீலர் ஆட்டமிழக்காமல் 96 ஓட்டங்களையும் (எதிர் ஸ்கொட்லாந்து – 2019), அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 90 ஓட்டங்களையும் (எதிர் இங்கிலாந்து – 2015), மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் 88 ஓட்டங்களையும் (எதிர் அவுஸ்திரேலியா – 2009) இந்தியாவின் விராட் கோஹ்லி 82 ஓட்டங்களையும் (எதிர் இலங்கை – 2017) அதிகபட்சமாகக் குவித்துள்ளனர்.
அத்துடன், T20 கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடித்த ஆறாவது தலைவராகவும் பராஸ் கட்கா இடம்பிடித்தார். இதில் அவுஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், ஷேன் வொட்சன், தென்னாபிரிக்கா அணியின் பாப் டு ப்ளெசிஸ், இலங்கையின் திலகரத்ன டில்ஷான் மற்றும் இந்தியாவின் ரோஹித் சர்மா ஆகியோர் T20 போட்டிகளில் சதமடித்த தலைவர்களாக இடம்பிடித்துள்ளனர்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<