T20I போட்டிகளில் புதிய வரலாறு படைத்த நேபாள கிரிக்கெட் அணி

Asian Games 2023

312

ஆசிய விளையாட்டுப் விழாவின் T20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் நேபாள ஆடவர் கிரிக்கெட் அணி, T20I போட்டிகளில் புதிய உலக சாதனைகளை நிலைநாட்டியிருக்கின்றது.  

உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!

இன்று (27) ஆசிய விளையாட்டு விழாவின் T20 கிரிக்கெட் தொடருக்காக மொங்கோலிய அணியினை எதிர்கொண்டிருந்த நேபாள கிரிக்கெட் அணி குறித்த போட்டியிலேயே புதிய உலக சாதனைகளை நிலைநாட்டியிருந்தது 

அந்தவகையில் இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய நேபாள அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 314 ஓட்டங்கள் குவித்தது. இது T20I போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் என்பதோடு இதுவே T20I போட்டிகள் வரலாற்றில் அணியொன்று முதல் தடவையாக 300 ஓட்டங்களை கடந்த சந்தர்ப்பமாகவும் மாறியது 

இதற்கு முன்னர் கடந்த 2019ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 278/3 ஓட்டங்கள் பெற்றதே அணியொன்று T20I போட்டிகளில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக காணப்படுகின்றது 

இதேநேரம் இப்போட்டியில் நேபாள அணி தமது துடுப்பாட்ட இன்னிங்ஸின் போது மொத்தமாக 26 சிக்ஸர்களை விளாசியிருந்தது. இதுவும் அணியொன்று T20I போட்டியொன்றில் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற அதிகூடிய சிக்ஸர் எண்ணிக்கையாக மாறியிருந்தது 

மறுமுனையில் இப்போட்டியில் நேபாள அணிக்காக துடுப்பாடியிருந்த குசல் மால்லா வெறும் 34 பந்துகளில் சதம் விளாசியதோடு குறிப்பிட்ட சதத்துடன் T20I போட்டிகளில் அதிவேக சதம் பெற்ற வீரராக புதிய உலக சாதனையினை நிலைநாட்டியிருந்தார் 

இதேநேரம் இப்போட்டியில் நேபாள அணியின் சகலதுறைவீரரான தீபந்திர சிங் ஐரி வெறும் 9 பந்துகளில் அதிரடி அரைச்சதம் விளாசியதோடு, அது T20I போட்டிகளில் பெறப்பட்ட அதிவேகமான அரைச்சதமாக பதிவாகியிருந்தது. அத்துடன் இப்போட்டியில் 10 பந்துகளுக்கு 52 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றிருந்த அய்ரி, T20I போட்டிகளில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய Strike Rate இணை அதிகூடிய ஓட்டங்களுடன் பதிவு செய்தார் 

வெள்ளிப்பதக்கத்தை வென்றது இலங்கை மகளிர் அணி

இதேநேரம் மொங்கொலிய அணியினை இப்போட்டியில் வெறும் 41 ஓட்டங்களுக்குள் மடக்கிய நேபாள அணி இப்போட்டியில் 273 ஓட்டங்களால் வெற்றி பெற்று T20I போட்டிகளில் அணியொன்றுக்கு அதிக ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாகவும்  புதிய வரலாறு படைத்திருந்தது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<